Wednesday, 10 September 2014

மொழி........



பன்மொழிகள் கற்கும் ஆர்வம் எனக்கும் என் மரபணு மூலம் வந்ததுதான்.
நான் தமிழ் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள் எதுவும் கத்துக்காம இருந்தா எப்படி?

1.ஹிந்தி
6 ,7 ஆம் வகுப்பு ஆண்டு இறுதி விடுமுறையில் எழுத படிக்க  கற்றேன்.
 என் சமவயது தோழர்களுடன் கபடி, கிட்டிபுள்,கோலி குண்டு,மரத்தில் ஏறி ஒளிந்து விளையாடுதல், பம்பரம் விடுதல் ,டென்னிகாயிட் விளையாடுதல், வீட்டு
வேலைகளுக்கு உதவுதல் (இது கடைசிதான்) என பல்வேறு வேலைகள்.
ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்த புதிதில் ,திருமதி உஷா அவர்கள் நான் சொல்லிதரேன்பா கண்டிப்பா வாங்க என்று அன்போடு வரவேற்றார்.
மே அந்தர் ஆ சக்தீ ஹூ ஜி ? ( அதாங்க நம்ம எச்சூஸ்மீ)
உள்ளே வந்தாச்சு..... எனக்குத்தான் படிக்கத் தெரியுமே என்பதால் பாடம் ஆரம்பம்.
ஹம் பாஜார் கே லியே ஜா ரஹா ஹை ஔர் சாவல் , தால் ,ஸப்ஜியோங்க் கரீத் ரஹே ஹை (நாம் கடை வீதிக்கு
செல்கிறோம் அங்கே அரிசி, பருப்பு, காய்கறிகள் வாங்குகிறோம்)
முதல் நாளே இத்தனை சாமான்களை கடைவீதியிலிருந்து தூக்கிட்டு வர முடியலைங்க.... ஹிந்தி புத்தகத்தையும்
அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்.

2. சமஸ்க்ருதம் (தேவர்களின் மொழி)
ஹிந்தி ,சமஸ்க்ருதம் இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துரு தேவனாகரி.
பாரதீய வித்யா பவன் போய் புத்தகம் வாங்கி வந்து(சமஸ்கிருதம் - ஆங்கிலம் பதிப்பு, அது தான்
கிடைத்தது) தெரிந்த ஒரு ஆசிரியரிடம் நானும் என் சகோதரியும் சேர்ந்தோம்.
(ஒருமை, பன்மை, இருமை என பல மைகள் ..... பாலாஹா க்ரீடாங்கணே மே க்ரீடதி(சில்ட்ரென் ஆர் ப்லேயிங்க் இன் தி கிரௌண்ட்)
(பாலா - ஒருமை, பாலாஹா - பன்மை, ஆமாம் இருமைக்கு என்னங்க?)
ஜனனீம் ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்கதபி கரீயசி - பாரதியார் சொன்னாப்ல சொன்னா பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும்
நனி சிறந்தனவே)

ஒரே மாதத்தில் ஒரு தேர்வுக்கான பாடங்களை படித்து தேர்ந்து விட்டதால் இரண்டாவது தேர்வை நேரடியாக எழுதச் சொன்னார் 
ஆசிரியர்.
முதல் பாடமே இலக்கணம் ராமோ ராமஹ ராமேதி...... என தொடங்கி வேற்றுமைகளை சொல்லி தந்தார்.
சம்மேடிவ் க்லாஸ், அசர்டிவ் க்லாஸ் என
அதற்கு ஈடாக ஆங்கிலமும் படிக்க வேண்டி இருந்தது (எங்கள் நேரம் தமிழ் பதிப்பு தீர்ந்திருந்தது)
தேவலோகத்துக்கான சாட்டிலைட் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தினால் இன்று வரை
தேவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

(தமிழில் ஒன்று முதல் ஏழு வரை - ஐ ஆல் கு இல் அது கண், எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை (உ - ம்) கண்ணா என என்றோ
படித்தது இன்றும் நினைவில் இருக்கிறது, தாய் மொழி வழி கல்வியின் சிறப்ப்ப்ப்பை அன்று தான் உணர்ந்தேன்) 

3. பிரஞ்ச்
 மகனை கற்று தர சொன்னேன்.(எனக்கே தெரியாது) அவனது ஆசிரியையிடம்
கேட்டேன். (நேரமே இல்லை)அலையன்ஸ் பிரன்சே போய் படிப்பதாக சொன்னேன். அதற்கு அவர், அங்கே வயதானவர்கள் படித்தால் கிண்டல்
செய்வார்கள் என்றார். அவருக்கு போட்டியாக வந்து விடுவேன் என்ற பயம் தான் அடிப்படை காரணம்.( அந்த காலகட்டத்தில் நான்  டியூஷன் சென்டர் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருந்தேன்)

(www.mangolanguages.com)மேங்கோ லாங்குவேஜஸ் . காம் இலவசமாக சொல்லி கொடுத்த காலம்.
குட் மார்னிங் - பாஞ்சூர் , மேடம் - மதாம் ,தாங்க் யூ - மெர்சி , ஹௌ ஆர் யூ - கொமொன் தொலே வூ,யெஸ் - உயீ
இதை  கத்து முடிக்கறதுக்குள்ளேயே
 அது பணம் கட்டி படிக்கும் வெப் சைட்டாகி விட்டது

4.ஸ்பானிஷ்
குட்டி பேரனுடன் கோ டியாகோ கோ (சொல்ல மறந்துட்டேனே.. 
இந்த டியாகோ நம்ம டோரா இல்ல அவளோட கசின்) பார்த்தும் அவனிடமிருந்தும் கடைகளில் பார்த்தும் கேட்டும் இம்மொழி கற்கும் ஆர்வம் ஏற்பட்டது. செப்டம்பரே, அக்டோபரே, நவம்பரே, டிசம்பரே.... எனேரோ, ஃபிப்ரேரோ என தொடராமல் கேசவின் வார்த்தைகளில் ஜனவரியே.......ஃபிப்ரவரியே.... மார்ச்சே என தொடர்ந்தது.
friends - amigos ,good bye - adios , thank u- gracia ,bird - pajaro ,water - agua  (டியாகோ பார்த்த பலன்)
nada - nothing - ஹாலிவுட் உபயம்
5.சைனீஸ்
கேசவுடன் கை -லான் கதை மூலம் கற்று கொள்ள ஆரம்பித்தோம். கை - லான் நம்ம டோரா போல ஒரு கதாபாத்திரம்.
சைனீஸ் அமெரிக்க பெண் , யே யே அவளின் தாத்தா
hai di ho -  பிடித்து இழுங்க, ni hao- ஹலோ , xie xie - நன்றி ,BAA - 8 ,SHI- 10
(நாங்கள் இந்த வார்த்தைகளை சொல்லி பழகி கொண்டிருந்த போது எங்களை கடந்து சென்ற என் மருமகனின் முகபாவனையை
இன்றளவும் மறக்க முடியவில்லை.......இவங்களுக்கு என்னவோ ஆயிடுச்சுன்னு நினைச்சாரோ??)
இவை தவிர மலையாளம் , தெலுங்கு கற்று கொள்ள ஆரம்பித்து நடுவில் விட்டு விட்டேன்.....கன்னடம் சொல்ப சொல்ப
கொத்து நன்கே ........... சைகை மொழியையும் விட்டு வைக்கவில்லை

ADIOS AMIGOS.....!!!!!!!!!!!!!!!

பின் குறிப்பு :சான் ஹொசேவிலிருந்து  இந்தியா திரும்புவதற்கு சில நாட்கள் முன்பு தான் வட அமெரிக்காவில் வசிப்பவர்கள்
தங்களுடைய நூலக அட்டையின் மூலம் இந்த www.mangolanguages.com இணைய தளத்தில் பதிவு செய்து கொண்டு இலவசமாக
பல்வேறு மொழிகளை கற்கலாம் என்று அறிந்தேன்.
(இல்லைன்னா மட்டும் படிச்சிருக்கவா போறாய்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குதுங்க)

1 comment:

  1. ஹா ஹா ஹா

    ein guter & guten Abend , gnadige frau

    ReplyDelete

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...