1982 ஏப்ரல் ........
கோவையில் விடுதியில் தங்கிப் படித்த நாட்களில் கொண்டாடிய புத்தாண்டு நன்னாள்.
சாரலும் தூறலுமாய் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து குளிர் காற்று வருடம் முழுவதும் வீசிய அருமையான காலகட்டம்.(மின் விசிறிகளே கிடையாது. )
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு கேரள நாட்டு வழக்கப்படி விடுதியில் ஒரு அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு பழங்கள் , நகைகள் எல்லாம் வைத்து, கண்ணனின் திரு உருவப் படமும் வைத்து வயதில் மூத்த மாணவியர்கள் வருடப் பிறப்புக்கான பிரார்த்தனை செய்வார்கள். அதன் பின், என் போல 8.30 மணிக்கே தூங்கும் தங்கைகளை அவரவர் படுக்கையில் வந்து தட்டி எழுப்பி அந்தக் கண்ணாடியில் முகம் பார்த்து(நம்ம முகத்தைத் தான்), கடவுளை வேண்டச் சொல்வார்கள்.(அவிங்கல்லாம் நல்ல அக்காங்க இல்ல ??)
என் அருகில் வந்ததும் நான் தூக்கக் கலக்கத்தில் கேட்ட குரல் .." அவளை கண்ணை மூடிக்கிட்டே முகத்தைக் கழுவ சொல்லிட்டு அப்புறமா கண்ணாடில பாக்க சொல்லுங்க ..... பயந்துடப் போறா.."
(என்னுடைய இரவு நேர அலங்காரம் 3 மீட்டரில் தைத்த பூப்போட்ட பாவாடை, ஒரு மாமா கழித்துக் கட்டிய காலர் வைத்த செங்கல் நிற சட்டை, அதன் மேல் மற்றொரு மாமா கழித்துக் கட்டிய கை இல்லாத காலர் இல்லாத நீல வண்ண ஸ்வெட்டர், முகத்தில் அம்மா தன் கையால் உரைத்து கொடுத்தனுப்பிய சந்தனம் ,நெற்றியில் சற்றே பெரிய சிவப்புப் பொட்டு என பல நிறங்களில் .....நம் முகத்தை பார்த்து நாமே பயப்படும் வண்ணம் இருக்கும்)
அடுத்த வருடம் எங்களுடன் வந்து சேர்ந்த பென்சி புது வருட நாளில் பெரிய பொட்டு வைத்து, முண்டு உடுத்தி உறவினர் வீட்டிற்கு சென்று வர அனுமதி கேட்பார். (என் தோழிகளுக்கும் சாப்பாடு கொடுத்தால் தான் உங்கள் வீட்டிற்கு வருவேன் என்று சொல்லி, திரும்பி வரும் போது காளன் ,ஓலன், அவியல், இஞ்சிப் புளி, சக்க பிரதமன் என 5 அடுக்கு கேரியரில் எங்களுக்காகக் கொண்டு வந்து தருவார்). கிரிஸ்துமஸ் வந்தால் வேறு மாதிரியான "மேக் ஓவரில்" ஆன்லியும் பென்சியும் வீடு செல்ல அனுமதி கேட்பார்கள். (ஆன்லியின் தாயார் எங்களுக்காக தனியாக கேக் செய்து அனுப்புவார், உடையாமல் கொண்டு போய் கொடுக்க சொன்னாங்க அம்மா _ ஆன்லி)
மிகுந்த மகிழ்ச்சியான நிறைவான நாட்கள் அவை....
( அட..... நமக்கு கூட இத்தனை பாடல்கள் தெரியுதே.......)ஆயர்பாடி மாளிகையில் , தெச்சி மந்தாரம் என ஒரு மணி நேரம் மாலையில், தினமும் மடியில் படுத்துக் கொண்டு அமைதியாகக் கேட்பார். (பாப்பாவின் அப்பா அலுவலகத்திலிருந்து வரும் வரையில்) குட்டிப் பாப்பா புண்ணியத்தில் சில மாதங்கள் தினமும் கண்ணனைத் தொழும் பாக்கியம் கிடைத்தது.......லவ் யூ குட்டிப்பையா......
(அவருக்கு செத்தி மந்தாரம் பாட்டு தான் மிகவும் பிடித்திருந்தது......)
P.S : Click on the link to hear the song :
https://www.youtube.com/watch?v=Ch25qcAdlCA
No comments:
Post a Comment