Thursday, 11 September 2014

கண்டி கதிர்காமக் கந்தா.........



இலங்கை என்கிற ஸ்ரீலங்கா பற்றிய என் நினைவுகள் அவை  அறிமுகமான வரிசையில்.........

1.இலங்கை வானொலியில் தினமும் காலை 7.15 ~ 7.20 க்குள் ஒலிபரப்பாகிய ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள் என்ற பாடல்
 (என் தங்கை விஜயா அதை கேட்காமல் நகர மாட்டாள்.)

2. ஏழாம்  வகுப்பில் அறிய நேர்ந்த இனப் போராட்டம்
  (அன்னிக்கு பள்ளிக்கு விடுமுறை விட்டாங்கப்பா...)

3. சுராங்கனி சுராங்கனி ........ என்ற பாடல்
  (மாடி வீட்டு மச்சானுக்கொரு மாதிரியா ஆசை மதுரவீரன் சாமி போல
  ஆட்டு கிடா மீசை, வயசு வந்த பெண்ணை பாத்து ஏங்குறாரு பேச
  வம்பு செய்யுற மாமனுக்கு காத்திருக்கு பூசை என் போகும் அந்த  பாடல்)
  

4. கோவை அவினாசி லிங்கம் பள்ளியில் படித்த சக மாணவி ரதி சிவபாதம்.
  அவரின் தந்தை திரு சிவபாதம்.ஓபரெசன் மானேஜர்(அதாங்க... ஆபரேஷன்    மானேஜர்) பணியில் இருந்தார்.
  சிங்களத் தமிழுக்கு அறிமுகமான காலகட்டம்.
  நீங்கள் வடிவா இருக்கீங்களப்பா என்று என் தமிழறிவை சோதித்தார்.
  சிரிலங்கா எண்டு கதையுங்கோ எண்டு (மன்னிக்கவும்) என்று கதைக்க 
  சொன்னாவர்.(மீண்டும் மன்னிக்கவும்)
  (எங்கே இருக்கிறீங்கள் ரதி?)

5.எல் டீ டீ இ தலைவரும் அவரது நண்பர்களும் எங்களில் சென்னை சாலிகிராமம் குடியிருப்புக்கருகில் தான் தங்கி இருந்தார்கள். தெருவில் துப்பாக்கி சூடு துரத்தல் எல்லாம் நடந்தது. பத்மனாபா படுகொலை கூட பக்கத்தில் தான்.திலீபன் மரணம் அப்போது தான்.

6. இந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகும் அந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்ட ரூப வாஹினி நிலைய நிகழ்ச்சிகள் திரையில் அலை அலையாக வரிசை வரிசையாக அவர்கள் சொன்னபடியே தெரியும். (இமான் அண்ணாச்சி குங்குமம் இதழில் சிலமாதங்கள் முன்பு சொல்லி இருந்தார், ரொம்ப சரி.. குத்து மதிப்பா ஒரு பாக்கியராஜ் படம் பார்த்த நினைவு இன்னும் இருக்கிறது)

 7. என் மகனுக்கு வாய்ப்பாட்டும் எனக்கு வயலினும் வாய்ப்பாட்டும் கற்றுத் தந்த எங்கள் குரு மறைந்த திரு. பி ஏ சிதம்பரனாதன் அவர்கள் இலங்கையில் 7 வருடங்கள் குருகுலம் போல வயலின் படித்தவர்கள்.அவரிடமும் இலங்கை தமிழின் சாயல் இருந்தது எனக்கு
நல்லா ஓர்மை இருக்குங்க... (ஓர்மை - நினைவு)

8  சங்கீத வகுப்பில் அறிமுகமான சகோதரி எண்டு நாங்கள் கண்டி கதிர்காமர் 
கோவில் தெருவில இருக்கற எங்கட வீட்டுக்கு போவம் என்று கண்கலங்கினார்.

9.அடுத்ததாக வருகிறார் எங்கட மனச கவர்ந்த தெ...........னா...........லீலீலீலீலீலீலீ
 அவருக்கு டேஷ் வந்தது என்றும், எனக்கு பயம் டொக்டர் என்றும் , எங்கட பெட்டைகள் இஞ்சாருங்கோ எண்டு சொல்வாங்கள் என்றும், அங்கே பள்ளம் பாருங்கோ என்றும் ஓமம் என்றும் மொழியின் அழகை நினைவில் நிற்கும் வண்ணம் சொல்லப்பட்ட படம்......
கூடவே இனப்போரின் வலிகளும்......

 10. அம்மா நீங்களும் எங்களோடு வந்துடுங்க என்று கெஞ்சி அவர் போராட்டம் முடியாமல் வரமாட்டார் என்று புரிந்ததும், அமைதியான வாழ்க்கை முறை தான் தேவை என்று வளர்ப்புத் தாயின் கன்னத்தில் முத்தமிட்ட அமுதா....

9.கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ராதிகா சிற்சபைஈசன் என் கவனம் ஈர்த்தவர்

10. கடைசியாக , என்னிடம் தற்போது கணினி படிக்கும் திருமதி பத்மினி. சிங்கள மொழியில் தம் கையெழுத்திட்டு என்னை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்........... (எதிர்பார்க்கலைங்க...., இவர் தான் இப்பதிவை எழுதும் எண்ணத்தை
எனக்கு ஊட்டியவரோ?)

ஆண்டவரே... உம்ம நான் கெஞ்சி கேட்டுக்கிடறது ஒண்டே தான்.. எம் இன மக்கள் வாழ்வு மீண்டும் மலர வேண்டும்,
கண்டி கதிர்காம கந்தா....... அவங்கள உம்முட கண்களை திறந்து பாரும்..... இந்த நிலையே தொடர்ந்தால் அவங்களுக்கெல்லாம் விசறு பிடிச்சுக்கும்.... இதை நீர் ஓர்மை வெச்சுகிடும் ஆண்டவரே...........(விசறு- பைத்தியம்)

பின் குறிப்பு : 

இப்பதிவை எப்படி மாற்றி எழுதினாலும் அது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க முடியவில்லை
நான் நேரில் கண்ட கேட்ட அனுபவங்கள் தான் அத்தனையும். இப்பதிவின் பின்னணியில் இருப்பவை சக மாணவிகளின் கள்ளுகடை பக்கம் போகாதே காலை பிடித்து கெஞ்சுகிறேன் என்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமான காலம் தொடங்கி எப்போது அங்கே போவோம் என்ற கதறலில் முடிகிறது.
கூட்டம் கூட்டமாய் குடும்பம் குடும்பமாய் சுற்றிலும் கண்டிருக்கிறேன். பவானி அகதிகள் முகாமில் கண்டிருக்கிறேன். புலம்பெயர்ந்து தவிக்கும் தவிப்பையும் பார்திருக்கிறேன்.ஷெல்லடிக்கராங்கோ என்ற தெனாலியின் கதறல் அங்கு உள்ள வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பு....... என் தோழி ரதி போல புலம் பெயர்ந்த ரதிகள் எத்தனை பேரோ??????

1 comment:

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...