Thursday, 11 September 2014

எங்கள் வீட்டு யுகாதிப் பண்டிகை.....



எங்கள் ஊர் உங்களுக்கெல்லாம் மிக நன்றாகத் தெரிந்த கர்நாடக எல்லைக்கு அருகிலுள்ள (வீரப்பனால் பெயர் கெட்ட) சத்தியமங்கலம் .
எங்கள் மூதாதையர்களில் பலரும் கர்நாடக மாநிலத்துடன் தொடர்புடையவர்கள். (பெண் எடுத்தல் கொடுத்தல்)
அதனால் உகாதிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவோம். (என் மாமியாரின் பிறந்த ஊர் மைசூர் அருகிலுள்ள மேல்கோட்டை)
தமிழகத்தில் இது வேலை நாள் என்பதால், நான் அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடியது இல்லை.( விடுமுறை நாளாயிருந்தால் மட்டும் என்ன என்று என் பிள்ளைகளின் குரல் கேட்கிறது)
 இம்முறை என் கணவருக்கும் விடுமுறை.
மாமியாரும் வயதானவர். (94) அடுத்த வருடம் யார் எப்படி இருப்போமோ, இம்முறை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தேன்.(மற்றொரு காரணம் வெட்டியா வீட்டில் இருக்கேன், கொஞ்சம் நல்லதா தான் சமைப்போமே?)
வாசலில் பெரிய கோலத்தில் ஆரம்பித்து, பெரிய விசாலமான வீட்டை சுத்தம் செய்து முடித்து(ஹெல்ப் மேட் கிடையாது), வெள்ளரிக்காய் மாங்காய் வேப்பம்பூ கலந்த சாலட், கீரை கடைசல், கடலைப்பருப்பு + பாசிப்பருப்பு சேர்த்த பாயசம், கறிவேப்பிலைத் துவையல் என என் மாமியருக்கு பிடித்த சாப்பிடக் கூடிய வகையில்(உப்பு, புளி, காரம் தூக்கலாக, மெத்தென்று - குறைவான பற்கள்) சமைத்து முடிக்க ஏறக்குறைய 11.30 மணி.(அதற்குள் கடுமையான கால் வலி)
பசிக்குமே என அவரது அறையில் என் கணவர் சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு அருகிலுள்ள கடைக்குச்  சென்றார். (என் கணவர் இருக்கும் நேரத்தில் அவர் அறைக்குள் எனக்கு நோ எண்ட்ரி)
சில நிமிடங்களில் காகங்கள் கரையும் சத்தம் என் கவனத்தை ஈர்க்க , அவரது அறையை எட்டி பார்த்தேன்.
4 காகங்கள் ஜன்னலில் அமர்ந்திருந்தன. அங்கே நான் கண்டது....... சாதம் தயிர் சாதமாகி, அதன் மேல் துவையல் , கீரை என ஒரு வித கப் கேக் அமைப்பில் .......
நீங்களே சொல்லுங்க நான் இப்ப சிரிக்கணுமா அழணுமா????
என்னை வெச்சு காமெடி கீமெடி பண்றாங்களோ?

பின் குறிப்பு : நானே காகங்களுக்கு நேரடியாக சாதம் வைத்து புண்ணியத்தை சம்பாதித்திருக்கலாமோ??!!

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...