Thursday, 11 September 2014

ஆடி வாங்கலையோ ஆடி ??



இன்றைய தேதிக்கு இந்தியாவில் கூவிக் கூவி விற்கப்படும் ஆடி கார், எனக்கு முதலில் அறிமுகம் ஆனது ஒரு கிரிக்கெட் போட்டிக்கான பரிசுப் பொருளாகத்தான். (1986) யார் மேன் ஆஃப் தி மேட்ச் ஆகிறார்களோ அவர்களுக்கான பரிசு என ஒரு மேடையில் வைத்து சுற்றி சுற்றி காண்பித்தார்கள்.( யப்பா............என்னா அளகு !!?? தக தகன்னு எம் ஜி ஆர் மாதிரி மின்னுனது கண்ணுக்குள்ளயே நிக்குதே)

 (திரு ரவி சாஸ்திரி அதை பரிசாகவும் அதனுடன் சேர்த்து
வரி கட்டாமல் கொண்டு வந்தார் என்ற குற்றசாட்டையும் பெற்ற நினைவு)

அமெரிக்கா வாழ் நாட்களில் சூரிய பகவான் கருணை காட்டும் நாட்களில் நானும் பேரன் கேசவனும் நடைப்பயிற்சி மேற்கொள்வோம் (கொஞ்ச நேரமாவது இவனை எங்கயாவது கூட்டி போம்மா...... லூட்டி தாங்கலை...)
 பல வருடங்களுக்கு முன் என்றோ என் தகப்பனார், நான்  என் மகனை வெளியில் அழைத்து செல்ல சொன்ன போது , என்னால் முடியாதம்மா...உன் மகன் தெருவின் ஒரு பக்கத்துக்கும் மறுபக்கத்துக்கும் சீ (Z) எழுத்து போல நடக்கிறான் என்றார். நம்ம ஆளும் அதே ரகம் தாங்க.......
பொறுமையாக அவரை என்னுடன் நடக்க வைக்க நான் தேர்ந்தெடுத்த உத்தி (வாத்தியார் புத்தி எங்க போகும்??) அந்த குடியிருப்பில் வரிசையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் கார்களை அவை எந்த நிறுவன தயாரிப்பு என கண்டு பிடிக்க கற்றுத் தர ஆரம்பித்தேன்.
பி எம் டபிள்யூ, ஹோண்டா(ஓதா), யூண்டாய்(ஊதாய்) , ஆடி  என கத்தி(குதித்து)க் கொண்டே வருவார்....

குடியிருப்புக்கு வெளியில் பெரிய சாலை, சாலையை கடந்தால் ரயில் நிலையம் , நடுவில் சிக்னல்...... சிக்னலில் வந்து நிற்கும்
கார்களுக்கு இவர் ஐயர்ன் மேன் கையுறை அணிந்து வந்து பவர் விடுவார்.(தான் பவர் போடுவதால் தான் கார்கள் அங்கே நிற்பதாக அவரது எண்ணம் :)) கையுறை போட்டு வர மறந்த நாட்களில் வெறும் கையால் பவர் விடுவார். (இரு பட்டீ........... பவர் போட்டுட்டு வரேன் )
தற்சமயம் கீழ்ப்பாக்கம் பகுதியில் நிறைய ஆடி கார்கள் தென்படுகின்றன....... (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....... நண்பனே நண்பனே.....குட்டி பையனே.....)லேண்டன்ஸ் சாலையும் டெய்லர்ஸ் சாலையும் இணையும் இடத்தில் எங்கள் குடியிருப்பு........ 3 ஆவது தளத்திலுள்ள எங்கள் படுக்கை அறை ஜன்னலில் இருந்து தினமும் காணும் காட்சி...  

ஆடி அசைந்து அவை வலது பக்கம் தெருவில் திரும்பும் அழகே தனி........(செம ஸ்மூத் பர்ஃபார்மன்ஸ்ங்க......)

இது ஆடி கார் இல்லைன்ங்க ..... ஆடாத கார் (நான் ஆடி கார் விற்பனையாளர் இல்லைங்க....... நம்புங்க.......)


விலை உயர்ந்த கார்களை வாங்கிடும் சீமான்கள்
வாங்குவது வண்டியை மட்டுமில்லை -அதன்
பதிவு எண்ணையும் சேர்த்தே தான்.

(எப்பூடி நம்ம கவித?)

பின் குறிப்பு : அலுவலக பணி நிமித்தம் நான் நிறுவனத்திற்கு கார்கள் வாங்கியது, விற்றது, ஃபேன்சி எண்கள் வாங்கியது, ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்தது,
குறிப்பிட்டவர்கள் காரை என்னிடம் சொல்லாமல் கூட டெலிவரி எடுத்து கொண்டு வெளியூர் சென்றது , டீலர் என்னிடம் அத்தகவலை
குறிப்பிட்டு உங்களுக்கு தெரியாதா என கேட்டது , மாதாந்திர EMI க்கள் தவறாமல் கட்ட ஏற்பாடுகள் செய்தது என பலப்பல நினைவுகள்.......
உடன் என் மருமகன் புது கார் வாங்கிய வைபவமும் இதில் உள்ளடக்கம் (காருக்கு என்ன பேரு மரும்புள்ளே ?  DCDG. COM இல்லைல்ல?!)

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...