Tuesday, 16 September 2014

உஸாத்தே.....உஸாத்தே.......



2008 - 2010 சாலிக்கிராமத்தில் சொந்தமாக டியூஷன் சென்டர் நடத்தினேன். வருடம் முழுவதும் மாலையில் ஒன்று முதல் 12 வகுப்புப் பள்ளிப் பிள்ளைகளும் (சீருடை மட்டும் தான் இல்லை இங்கே.... அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் என்று படுத்தி எடுக்கறீங்க மேடம்) காலையில் பெண்களும் (சொந்த கதை சோகக் கதைகளை கேட்டுக் கொண்டே இடையில் படிப்பு சொல்லிக் கொடுப்பது பெரிய சவால்) முதியவர்களுமாக வந்து கற்றுச் செல்வார்கள். 

கோடை விடுமுறையில் ?

நமக்கும் பொழுது போகும் பெற்றோர்களுக்கும் உதவி செய்தது போல இருக்கும் என்று நானும் என் உதவியாளரும் திட்டமிட்டது தான் இந்த கோடை முகாம்.  3.5 - 8 வயதுக் குழந்தைகளுக்கானது. 9.30 - 12.30 என முடிவு செய்தோம். (மகள் திருமணத்திற்கு கூட இத்தனை திட்டமிடல் இல்லை)
தினமும் நாங்களே சிற்றுண்டி கொடுப்பதாக முடிவு செய்தோம்.(பழங்கள், சத்துணவு, எண்ணை பண்டங்கள் இல்லை)

3.5 - 5 வயது குழந்தைகள்.... 

அம்மா............அம்மா............ கதறல்..... செல்லம் ஓடி வா ஓடி வா....... நாம லைட் பாக்கலாம் (அனைத்து விளக்குகளும் சாண்டலியர் உட்பட போடப்படும்) என்ன மாயமோ அழுகை நின்று விடும்..

தினமும் எனக்கு புது க்ரேயான் குடுத்தா தான் வருவேன்...... (சரி வா தரேன்)

தினமும் போன் பேசுவியே ..இன்னிக்கு ஏன் பேசலை? (மகள் அமெரிக்கா சென்ற புதிது குறிப்பிட்ட நேரத்தில் தினமும் 3 நிமிடங்கள் பேசுவார்)

என்னை மட்டும் வெளில போகாதேன்னு சொல்றாங்க , ஆனா அவங்க ஏன் அங்க போனாங்க? (மேடம் ....... உள்ளே வாங்க, இங்க ஒரு விசாரணை நடக்குது உங்க பேர்ல..._என் உதவியாளர்)

சில நாட்களே வந்தாலும் என்னை விட்டு நகரவே மாட்டார் என் சகோதரர் மகன்.......(உஸாத்தே.....உஸாத்தே.......)

இந்த குழுவினர் தினமும் வர்ணம் தீட்டுவார்கள்.

5 - 8 வயது குழந்தைகள்.....
பெண் குழந்தைகள் கொஞ்சம் கூடுதல் சமர்த்தாக இருப்பார்கள். 

ஆண் குழந்தைகள் கைகளை தரையில் ஊன்றிக் கொண்டு கால்களால் கூடம் முழுக்க சுவரில் பல்லி போல நடப்பார்கள்....... ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்.

யோகா பயிற்சி முடிந்ததும் எல்லாரும் வலப்புறமாகத் திரும்பி எழுந்திருங்க.......(இன்னிக்கு மட்டுமா வாழ் நாள் முழுவதுமா_ ஒரு சுட்டிப் பையன்)

இது யார் தெரியுமா எங்க பெரியம்மா..... (என் சகோதரியின் மகன் 
இப்படி உதார் விட்டு எல்லாரையும் மிரட்டி வைத்திருந்ததாக என் உதவியாளர் கூறினார்)

எல்லாக் குழந்தைகளும் நன்றாக யோகாசனப் பயிற்சிகள், தினம் ஒரு கைவேலை,பாட்டுக்கள் கற்றுக் கொண்டார்கள்.
சமர்த்தாக சாப்பிட்டார்கள். (என்னது ராஜேஷ் வாழைபழம் சாப்பிட்டானா
? எங்க பாப்பா முறுக்கு சாப்பிட்டாளா?)

நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டார்கள். (செருப்பை ஒழுங்கா வெச்சிருக்காங்களே? எங்கள் பிள்ளைகளா?)

தனித் திறமை நேரத்தில் ஒவ்வொருவரும் பாட்டுப் பாடி, நடனம் ஆடி, கைவேலைகள் செய்து காட்டி என எதிர் பாராத வகையில் அசத்தினார்கள்.(எத்தனை திறமைகள்???) கதை நேரத்தில் பல கதைகள் பல செய்திகள் நமக்குக் கிடைக்கும் .

விளையாட்டு நேரத்தில் மட்டும் சொம்போடும் துண்டோடும் நாட்டாமையா நாம் மாறியே தீர வேண்டும்.....(ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா....)

கிளம்பும் நேரம் நாளைக்கு என்ன சிற்றுண்டி என்று மறக்காமல் கேட்டு செல்வார்கள்.( என்னிடம் கேட்க பயம், என் உதவியாளரிடம் கேட்டு செல்வார்கள்) :) :)

கடைசி நாள் மாறு வேட போட்டி, யோகாசனங்கள் செய்தல் , பாடிக் காட்டுதல் என பெற்றோர்கள் அனைவருக்கும் செய்து காண்பித்தார்கள்.

காத்திருக்கிறேன்.............

பெரிய காதுகளுடன்..........





No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...