பல வருடங்களுக்கு முன்பு,என் கணவரது
அலுவலகம் மூலமாக கிடைக்கும் எல் டீ சீ (விடுப்புடன் கூடிய சுற்றுலா செல்லும் சலுகை)யில் அவரது அலுவலக நண்பர்கள் குடும்பத்துடன் புவனேஸ்வர்,கல்கத்தா ,டார்ஜீலிங்க் வழியாக தபால் கட்டுக்கள், மீன் வறுவல், சாக்கடை மணம், மண் குடுவை தேனீர், கடுகு எண்ணெய் பூரி என மணம் குணமாக கேங்க்டாக் சென்றடைந்தோம்.
கஞ்சன் ஜங்கா மலை , ட்சாங்க்போ ஏரி , சீன எல்லை என பார்த்து முடித்த பின் அங்கிருந்த ஒரு புகழ்பெற்ற செல்வ செழிப்பான (பணக்கார மடாலயமுங்கோ)புத்த மடாலயத்திற்கு சென்றோம்.
சுற்றிலும் ராணுவ வீரர்கள் கையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன். (நமக்கு தான் ராணுவம் , காவல் துறை சேர்ந்தவங்களை பார்த்தாலே வெடவெடக்குமே.. இப்போதும் அப்படி தான் ( நாம என்னவோ நிழல் உலக தாதாக்கள் அல்லது சர்வதேச கிரிமினல்கள் போலன்னு
நினைப்பு... கையில் விலங்கை மாட்டி வீதியில் இழுத்து போய் சிறையில் போட்டுடுவாங்கன்னு பயந்தேனப்பூ)
அந்த மடத்தில் 4 வயது முதல் 90 வயது வரையிலான புத்த பிட்சுக்களை காண நேர்ந்தது. தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு எங்களை பார்த்ததும்(கேட்டதும்??)ஒரே மகிழ்ச்சி. அவர்களின் துணையுடன் மடாலயத்தை சுற்றி பார்த்தோம் [இததே(ன்) ராணுவ மரியாதைன்றாங்களா??]
என்ன காரணமாக ராணுவம் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது என்று விசாரித்த போது , அங்கே இருந்த புத்த பிட்சுக்கள் இரு குழுக்களாக பிரிந்து இருப்பதாகவும், வரும் புத்த பௌர்ணிமாவை எந்த குழு எடுத்து நடத்துவது என்பதில் அவர்களுக்குள் பிரச்சினை என்றும் என்னேரமும் அங்கே கலவரம் ஏற்படலாம் என எதிர்பார்த்து அரசாங்கம்
ராணுவத்தை அங்கே குவித்திருப்பதாகவும் அறிந்தோம். (என்ன கொடுமை சரவணன் இது???)
இதை கேட்டதும் என்றோ படித்த இந்த கவிதை என் நினைவுக்கு வந்தது...........
"ஆசையே துன்பத்திற்கு காரணம்
புத்தர் சிலை அதிக விலை......"
புத்தம் சரணம் கச்சாமி!!!!!!!!
No comments:
Post a Comment