Showing posts with label Tamil - Poems. Show all posts
Showing posts with label Tamil - Poems. Show all posts

Thursday, 6 December 2018

வணக்கம் பல முறை சொல்வேன் !

असतोमा सद्गमय । 
तमसोमा ज्योतिर् गमय । 
मृत्योर्मामृतं गमय ॥ 
ॐ शान्ति शान्ति शान्तिः ।। 

From ignorance, lead me to truth;
From darkness, lead me to light;
From death, lead me to immortality
Om peace, peace, peace !

ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரைப் பார்த்துக் கூறுவதாக  ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில் உள்ள பாடலின் ஒரு வரியை (தாமஸோமா ஜ்யோதிர்கமய) அடிப்படையாகக் கொண்டு , ஒரு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி எங்கள் சம்ஸ்கிருத வகுப்பில் நடைபெற்றது .  

அஞ்ஞான இருளை நீக்கி அறிவுக்கு கண்ணை திறப்பவர் ஆசிரியரே என்ற அடிப்படையில் அமையப்பெற்ற நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சி அது.

நிகழ்ச்சிக்கு என் பங்களிப்பாக (in absentia ) நான் எழுதி அனுப்பிய சம்ஸ்கிருத கவிதை . புரியாதவர்களுக்காக கீழே தமிழில் .....


अवन्दे वन्दे वन्दिष्ये

अहं चिन्तयामि !
कथं एतावत् शिकराणि लुठितवती?
अहं चिन्तयामि !

(1)देवता रूपेण भूम्यै आगत्य अम्बा कारणं वा?
   "अहं अस्मि कदापि न रोदिषि " इति धैर्यं दत्त: जनक: कारणं वा?
   अहं चिन्तयामि !

(2) मम आरम्भ अध्यापनस्य  कर्ता उत्तमा अध्यापका  कारणं वा ?
    गणितं सुलबं इति मधुरतया  पाठित: आचार्य: कारणं वा ?
    अहं चिन्तयामि !

(3)शास्त्र विषये अज्ञानं नाशीत: वृद्धाचार्य कारणं वा ?
   मधुरं गीतं गापयित: मम संगीत गुरु: कारणं वा ?
   अहं चिन्तयामि !

(4)"त्वया शक्नोषि" इति नित्यं हेतु: कथयन् मित्रं कारणं वा ?
     गातुं समये वज्रस्य अभिनयं कथा करणीयं इति पाठित: दौहित्र: कारणं वा ?
     अहं चिन्तयामि !

(5)देवभाषाया: मार्गदर्शनं दर्षितौ भगिन्यौ कारणं वा ?
    पुस्तकानि वा ? प्रकृति: वा ? अथवा  पण्डितानां मेलनं वा ?
    अहं चिन्तयामि !  

                          इदानीं अहं अवगच्छामि ! (2)
                          मम चिन्तनम् इदानीं पूरणं भवति !

(6)यानि अज्ञानानि नाशयित्वा ज्ञानम् ददाति , तानि सर्वाणि  गुरु: एव  किल ? (2)

(7)चक्षु : उन्मीलितं ये कुर्वन्ति , ते सर्वैभय: अहं वन्दे !   (2)



வணங்கினேன் வணங்குகிறேன் வணங்குவேன் 

நான் சிந்திக்கிறேன் 
இத்தனை சிகரங்களை எப்படி எட்டினேன் ?
நான் சிந்திக்கிறேன் 

தேவதை உருவில் பூமிக்கு வந்த அன்னை காரணமா ?
நான் இருக்கிறேன் எதற்கும் அழாதே என தைரியம் சொன்ன  தந்தை காரணமா?
நான் சிந்திக்கிறேன் 

ஆரம்பப் பாடங்களை அன்பாய்க் கற்றுத் தந்த ஆசிரியை காரணமா ?
கணிதம் சுலபம் என இனிக்கக்  கற்றுத் தந்த ஆசிரியர் காரணமா?
நான் சிந்திக்கிறேன் 

சாஸ்திர விஷயங்களில் என் சந்தேகம் நீக்கிய மூப்படைந்த ஆசிரியர் காரணமா?
இனிமையான பாடல்களை கற்றுத் தந்த சங்கீத ஆசிரியர் காரணமா ?
நான் சிந்திக்கிறேன் 

உன்னால் முடியும் என அனுதினம் உற்சாகமூட்டும் நண்பன் காரணமா ?
பாடும் சமயம் வைரம் என்ற வார்த்தையை அபிநயம் பிடிக்க கற்றுத் தந்த குட்டி பேரன் காரணமா ?
நான் சிந்திக்கிறேன் 

தேவர்களின் மொழியை கற்கும் வழியைக் காட்டிய சகோதரிகள் காரணமா?
புத்தகங்களா? இயற்கையா ? கற்றவர்களின் சேர்க்கையா ?
நான் சிந்திக்கிறேன் 

   இதன் விடை எனக்கிப்போது புரிந்து விட்டது 
   என் சிந்தனையும் முற்றுப் பெற்றது 
                
எவைகள் நம் இருளை நீக்கி ஒளியைத் தருகின்றனவோ , அவைகள் அனைத்தும் நம் ஆசிரியர்கள் இல்லையா?

அஞ்ஞான இருளை நீக்கும் அனைத்திற்கும் என் வணக்கங்கள்.  




Sunday, 16 April 2017

காரே கருணை இராமானுசா!!

காந்தியன்னை பெற்றெடுத்த சாந்தமூர்த்தி நீர்தானே!
கற்பகமாய் வந்துதித்த இளையாழ்வார் நீர்தானே!
கல்வியிலே சிறந்துநின்ற சிகரம் நீர்தானே!
கற்பித்தோனை மிஞ்சிநின்ற  சீடர் நீர்தானே!

பெருங்குணங்கள் நிரம்பிநின்ற பேராளன்  நீர்தானே!
பெற்றவர்தாம் பெருமைப்பட்ட பேரானந்தம் நீர்தானே!
வரதனுக்கு வாஞ்சையான இராமனுசன் நீர்தானே!
வரமாய் வந்துதித்த இலக்குமணன் நீர்தானே!

முனிவர்க்கு முனிவனான யதிராசன் நீர்தானே!
மூத்தோரின் குறிப்புணர்ந்த கூர்மதியாளன் நீர்தானே!
அரங்கனே தகுதிசொன்ன உடையவர் நீர்தானே!
அவன்கோவில் சீர்மிகு மேலாளன் நீர்தானே!

எட்டாச்செய்தி  எமக்களித்த பாஷ்யக்காரர் நீர்தானே!
எட்டெழுத்து  ரகசியம்சொன்ன எம்பெருமானார் நீர்தானே!
கீழ்ப்படிதல் குணம்கொண்ட கோமான் நீர்தானே!
கீழிருந்து மேல்செல்லும் வழிசொன்னவர் நீர்தானே!

வேதத்தின் சாரம்சொன்ன வேதாந்தி நீர்தானே!
வாதம்புரிந்து வாகைசூடிய வேதவித்து நீர்தானே!
அடியாரின் அன்புக்காகத் தமருகந்தவர் நீர்தானே!
ஆண்டாளின் சொல்காத்த கோதாக்ரஜன் நீர்தானே!

சரணாகதி தத்துவத்தை சொன்னவர் நீர்தானே!
சமத்துவத்தின் மகிமைதனை உணர்த்தியது நீர்தானே!
பூதூரில்  தானுகந்த  பூதபுரீசர் நீர்தானே!
புண்ணியத்தில் பங்களித்த புருஷோத்தமன் நீர்தானே!

பார்த்தன்போல் எட்டாவதாய்ப் பிறந்தது நீர்தானே!
பரமனின் படுக்கையான ஆதிசேஷன் நீர்தானே!
நவரத்தினங்களை உலகுக்களித்த மாமேதை நீர்தானே!
நாநிலம் நலம்வாழத் தானானவர் நீர்தானே!

வாழி நின்புகழ்! வாழிய வாழியவே!!

Tuesday, 7 February 2017

யார் இவன்???


ஆலிலைப் படுக்கை
அசத்தல் புன்னகை
இடுப்பில் அரசிலை
கண்ணன் கைக்குழந்தை


தயிர்ப் பானை
வாயில் வெண்ணை
கண்ணில் குறும்பு
கண்ணன் பாலகன்


யமுனை காளிங்க நர்த்தனம்
ஆநிரை மானிடர் சூழ
விரல் நுனியில் கோவத்தனகிரி
கண்ணன் காவலன்


பட்டாடை, கையில் குழல்
மேனியில் சந்தனம்
ஆயர்களுடன் கூடல்
கண்ணன் காதலன்


குருக்ஷேத்ர போர்க்களம்
தேரில் அர்ஜுனன்
எதிரியாய் உறவினர்
கண்ணன் சாரதி


துவாரகை அரியாசனம்
மன்னனாய் புடைசூழ
அவலுடன் சுதாமன்
கண்ணன் நண்பன்


பலப்பல உருவங்கள்
பலப்பல உவப்புகள்
பக்தர்கள் மயக்கம்
கண்ணன் மாயாவி


பிரளய காலம்
மீனின் வடிவம்
வேதங்கள் மீட்பு
கண்ணன் வேதசாரம்


பிருந்தாவன நர்த்தனம்
கோபியருடன் ஆடல்
ஜீவாத்மாவுடன் கூடல்
கண்ணன் பரமாத்மா.


அவனா இவன்?
இல்லை
இவனா அவன்??

LIMERIKRISHNA, Huh??


Who shines like a diamond in the sky
Whose presence we need to identify
Where to get the deem of HIM
Why to think than MAYOORAM
When HE awaits for us to dignify!!


P.S: This verse is in Limerick form

அவனும் நானும்!!


நானும் நீயும்
ஜீவாத்மா
நானும் அவனும்
பரமாத்மா!


ராதையும் நானும்
ஜீவாத்மா
ராதையும் கண்ணனும்
பரமாத்மா!


ராதை நானும்
கண்ணன் அவனும்
ஒன்றாகக் கூடினால்
வருவது அத்வைதம்!


நாதம் அவன்
காற்று அவள்
அவனும் அவளும் கீதமாய்
ஆவது பேரின்பம்!


நாயகனே ஈசன்
நாயகியே மனிதன்
நாயகி ஈசனுடன்
இணைவது சொர்க்கம்!


பேரின்பம் கண்ணனே
கண்ணனை நாடி
கானங்கள் பாடிக்
கலப்பது முக்தி!

எட்டி எட்டாய்...

எட்டாவது வசுதேவ மைந்தனானவன்
எட்டாவது அவதாரமாய் வந்துதித்தான்
எட்டாவது திதியில் அவதரித்தவன்
எட்டெழுத்தானது அவன் நாமம்
எட்டு ராணியரும் அவனுக்குண்டாம்
எட்டுத் திசைமுட்டும் அவன் புகழை
எட்டு அடிகளில் நாமும் பாடி
எட்டி அவன் பாதம் பற்றிடுவோம்!!

Tuesday, 20 December 2016

மின்சாரம் என் மீது பாய்கின்றது.....

ரமணன் அறிவிக்காத முதல் புயல்
ராப்பகல் கழிந்தது எதிர்பார்ப்புடனே
ஆழிப் பேரலையும் நினைவில் வந்தது - உடன்
ஆண்டுகள் முந்தைய ஊழிக் காற்றுடன்

பால் இல்லை தயிர் இல்லை
காய் இல்லை கறி இல்லை
அன்னம் செய்திட அரிசியும் இல்லையே
அவரவர் கவலை அவரவர்க்கு

மிதமாய் வீசும் காற்றின் வேகம்
மிகையாய் ஆகிப் போகும் முன்பே
வானம் இருண்டு மேகம் திரண்டு
இயற்கையின்  ஊழித் தாண்டவம்

மழை வலுக்க, மரங்கள் சரிய
உலகத் தொடர்பு அடியோடறுந்திட
நடப்பறிய செய்தித் தாள் படித்து
மரங்கள் விழுந்து இலைகள் குவிந்து
ஜுராசிக் பார்க்கான தெருக்களில் நடந்து

தண்ணீருக்காய் தவித்து, மற்றவர்க்கு உதவி,
கூடிப் பேசி, வார்த்தைகளால் விளையாடி
சிறு விளக்கொளியில்  உண்டு களித்து
இரைச்சலின்றிஅமைதியைக் கொண்டாடி
ஒருவருக்கொருவர் உதவி, ஊருக்கும் உதவி..

மின்சாரம் இல்லா மகிழ்ச்சி நாட்கள்
மனதில் என்றும் நிலைத்து நிற்கும்

ஆயிரம் யோசனைகள் இதற்கிடையில்......

அம்மா சின்னம்மா என்னவாகியிருக்கும்?
அய்யாவுக்கு நெஞ்சு சளி சரியானதோ?
இனியாவது புரியும்படி ட்வீட் செய்வாரா?
ஊருக்கு கிளம்பிய உறவினர் என்ன ஆனார்?

டிரம்ப் ஐயா என்ன புதுச் சட்டம் போட்டாரோ?
மும்பை நண்பர் எப்படி ஊருக்குத் திரும்புவார்?
நாளை பால் வருமா செய்தித் தாள் வருமா?
நாட்டின் பணத் தட்டுப்பாடு எப்போது சரியாகும்?

இதோ....மின்சாரம் வந்து விட்டது
எங்கும் ஒளிமயம் எங்கும் சத்தம்
தொலைத் தொடர்பு சாதனங்கள்

சிறிது நேரத்தில்....
நேற்று வரை நேரில் பேசிய நேரெதிர் வீட்டிலிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல்

Good evening ! Got cold?
Yes,Cold
Get well soon ( smileys)

ஸ்ஸ்ஸ்....ஆஆஆ..........வர்தா புயல் கடுமையாகத் தாக்கியது இம்முறை!!





































































Wednesday, 8 October 2014

கவித கவித..சிவகாமி............


என் எண்ணங்கள்...


(1)சூறாவளி எச்சரிக்கை

மாலை நான்கு மணி
பள்ளி விட்டு வரும்
பத்து வயது சுட்டி மகளின்
வருகை நேரம்

(2)விண்மீன்

இரவுக் காரிகையின்
வைர மூக்குத்தி....
கண்கள்
மனதின் பிரதிபலிப்பு காட்டும்
மாயக் கண்ணாடிகள்..

(3)படம்

படம் பார்க்கப் போவதாய்
படம் எடுத்து அனுப்பி
படம் காட்டி - நம்மை
படம் எடுக்க வைத்த பாப்பா -தாம் பார்த்த
படம் என்னவென்று எப்போது
படம் காட்டுவார்?
படம் : Movie, Photo, Film

(4)மண் வாசனை

மழையின் முதல் தூறல்
முகிழ்க்கும் மணமிதுவே
ரேவதியின் நடிப்பையும் சேர்த்தே
நினைக்க வைத்திடும்
இயற்கையின் இந்த வாசனை...


(5)யாருக்காக இது யாருக்காக?

கண்ணில் தினமும் தென்படும்
கவனம் ஈர்க்கும் ஒரு நிகழ்வு.......
கையில் லாட்டியுடன்
காலை நேர நடைப்பயிற்சியில்
குடும்பத் தலைவிகள்
கள்ளர்களை விரட்டவா?
காலை சுற்றும் நாயை விரட்டவா?
கண்ணெட்டும் தூரத்தில்
காவலர் குடியிருப்புகள்.....

(6)செய்வீர்களா? செய்வீர்களா?

மற்றவரின் தவறுகளை
மறந்து மன்னிப்பதால்
மக்கள் அனைவருமே
மஹாத்மாக்கள்தான்...

(7)இன்றைய அறுவடை

தலை வாரி முடித்தபின்
தரையில் உதிர்ந்த தலைமுடிகள்

(8)கடல்

ஓடிக் களைத்த நதிகளின்
ஒட்டு மொத்த ஓய்விடம்

(9)லஞ்சம்

எங்கும் எதிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
கலியுகக் கடவுள்...


(10)எதிர்பார்ப்பு ??

பதினான்கு வருடங்கள் -தசரதனுக்கு
எத்தனை வருடங்கள் -எனக்கு??
பிள்ளைகள் அயல் நாட்டில்....

(11)பஞ்சம்

அன்புக்குப் பஞ்சம்
ஆற்றலுக்கும் பஞ்சம்
இரக்கத்திற்கு பஞ்சம்
ஈகைக்கும் பஞ்சம்
உற்சாகம் தொலைந்து போய்
ஊக்கத்திற்கும் பஞ்சம்
எங்கும் பஞ்சம்
ஏனிந்த மாற்றம்?
ஐயம் தெளியவில்லை
ஒற்றுமைக்கும் பஞ்சம்
ஓய்விற்கும் பஞ்சம்
ஔடதம் மட்டுமே பெருக
தூய நீருக்கும் காற்றுக்கும் பஞ்சம்..
பஞ்சம் தொலைக்கும் நம்
எண்ணங்களுக்குமா பஞ்சம் ?

(12)நட்பு 

இலக்கணங்கள் எதுவும் இல்லாததால்
இதுவும் ஒரு புதுக் கவிதைதான்...


(13)காணோம்... காணோம்... கண்டு பிடி.........

கான்க்ரீட் காடுகளுக்கிடையே
காணாமல் போனது வனங்கள் மட்டுமில்லை
குட்டிப் பிள்ளைகளின் சுட்டி விளையாட்டுக்களும் தான்



படித்ததில் பிடித்தவை.....


(1)முயற்சி

சாண் ஏற முழம் சறுக்கும் மனிதா
நீ ஏன் முழம் ஏற முயற்சிக்கக் கூடாது ?

(2)கறிவேப்பிலை

என்னை நீ சேர்த்துக் கொண்டது
வாசத்திற்குத் தானா
வாழ்க்கைக்கு இல்லையா?

(3)புத்தம் சரணம் கச்சாமி

ஆசையே துன்பத்திற்குக் காரணம்
புத்தர் சிலை அதிக விலை

(4)யார் அங்கே?

நெஞ்சைக் கிழித்துக் காட்ட
நான் அனுமனும் இல்லை
என் நெஞ்சில் இருப்பது
இராமனும் இல்லை........

                                                 **********************