40 வயதுகளில் கடுகடு சிடுசிடுவாக நாமும் மாறாம இருக்கணும்னா ,இளம்வயதில் படிக்கலாமேன்னு நினைச்சேன் ? படிச்சேனே .... தொடர்ந்து 43 வயது வரை......
23 வருடங்கள் ஆசிரியையாக , அலுவலக பொது மேலாளராக பணிகளும் இடையில் சொந்த தொழிலும் வெளியில் செல்ல முடியாத காலங்களில் வீட்டிலேயே பள்ளி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தும் முக்கிய காலகட்டங்களில் பணிக்கு செல்லாமலும்.....இப்போதும் இன்றும் இங்கும்...... (படிங்க படிங்க படிச்சுக்கிட்டே இருங்க.......)
படிப்பு என்பது வாழ்க்கைக்கானது....... (அதாங்க வாழ்க்கைக் கல்வின்னு பொதிகை டீவி ல கூட சொல்வாங்களே)
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக."
(கடனேன்னு படிக்காதீங்கப்பா.........40 மதிப்பெண்கள் வாங்கினாலும் பரவாயில்லை... அந்த அளவுக்காவது கண்டிப்பா.நல்லா படிங்க........படிச்சதை செயல்படுத்துங்க.....)
அடுப்பில் குழம்பை கொதிக்க வைக்க வாயகன்ற பாத்திரத்தில் வைக்க வேண்டும். முதல் முறை கொதிக்க தொடங்கியதும் அடுப்பின் தீயை )குறைத்து விடலாம்.... ஒரு முறை திரவம் கொதி நிலைக்கு வந்தாச்சுன்னா குறைந்த அளவு வெப்பமே போதும். அதே அளவுல கடைசி வரைக்கும் கொதிக்கும். (முயற்சி பண்ணி பாருங்க....) குறுகலான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை விட வாணலி போன்றவற்றில் குறைந்த நேரத்தில் சமைத்து முடிக்கலாம். துணிகளை விரித்து பரத்தி காயப் போட்டால் சீக்கிரம் உலரும். (மேலே சொன்ன எல்லாம் தெர்மோஸ்டாட் விதிகள் தான்....... புத்தகத்தில் படித்தது தாங்க.....நம்மது காமர்ஸ்ங்க..)
உங்கள் பிள்ளைகளுடன் நீங்களும் சேர்ந்து படிக்கலாம்.... ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் நமக்கு தெரியாத ஓராயிரம் செய்திகள் இருக்கக் கூடும்.(அம்மா நீ ரொம்ப பேசுறாய் என்னை, நீ இந்த பாடத்தை படிச்சு பரீட்சை எழுதினால் பெயில் ஆயிடுவாய்_ என் மகன், அப்படி சொன்ன மகன் இன்று சொல்வது :I think you are doing good so far and I am quite confident that you can improve a lot . All the best!!
P.S:I personally feel that you are better at writing stories with humor infused in it. I would be glad if you could prove me wrong.? Cheers, Bala.) [இன்னாமா இங்கிலீஸ் எளுதராரு பாருங்க.... ]
தினமும் ஏதாவது படிங்க....... குமுதம் , விகடன் கூட படிக்கலாம்.... பல நல்ல கருத்துக்கள் கிடைக்கும். காஜல் அகர்வாலின் ஆண் நண்பரை பற்றி கவலைப்படாதீங்க.வேற்று மாநில பெண் இங்கே வெற்றி பெற்றிருப்பதை பாருங்கள்........... ஸ்ருதி ஹாசன் நள்ளிரவு 12 மணிக்கு பாடல் ரிகார்டிங்க் வந்தார் என்பதை படிக்கும் போது அந்த நேரத்திலும் உழைக்கும் அவரது ஆர்வம் மற்றும் உற்சாகத்தைப் பாருங்கள்.......
லெஃப்ட் அப்படின்னா கேமராவுக்கு இடது பக்கம்னும் ரைட் என்றால் இடது பக்கம் என்பதும் சினிமா மொழி.. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
அழகை அப்படியே பராமரிக்கறதெல்லாம் லேசுபட்ட வேலை இல்லீங்க.....
டீவீ பார்த்தாலும் முக நூல் பார்த்தாலும் கற்கலாம்.....
தொட்டனைத் தூறும்மணற் கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
(கிணத்துலேந்து தண்ணியை சேந்திகிட்டே இருந்தா தான் தண்ணி ஊறுங்ளாமா...... அந்தாப்லெங்கோ நாமுளு படிச்சிகிட்டே இருந்தாதே அறிவு வளருங்றாரு வள்ளுவரு..... புரியுதுங்ளா??)
அதே போல , வேலைக்கு போயிட்டிருந்தேன் இப்ப பிரேக் விழுந்துடுச்சு என்பது இக்கால பெண்களின் அன்றாட புலம்பல். நேற்று என்பது முடிந்த கதை.... நாளை என்பது இல்லை..... இன்று மட்டுமே நிஜம்..... இன்று மகிழ்வுடன் இருங்கள்......
நம்முடைய முன் அனுபவங்களும் இன்றைய ஞானமுமே மீண்டும் வேலையில் சேர அடிப்படைத் தேவைகள்.
திருமணம் , குழந்தைகள் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான கால கட்டம்.
சரோசா போல குப்பை கொட்டுங்க... கூடவே "சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான் "என்று பாடிகிட்டே சுத்தம் செய்ங்க.... (மக்கும் குப்பை மக்காத குப்பைன்னு விதம் விதமா இருக்குங்க...... அதை கத்துக்கிட்டாலே உலகத்தின் பாதி பிரச்சினைகள் குறையும்)
வீட்டை பராமரித்து, குழந்தைகளை நல்ல விதமாய் வளர்த்து
அவர்கள் முழு நேரம் பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு நாம் நமக்கான துறையில் பணி செய்ய போகலாம்.
நம் பிள்ளைகள் ஜெயித்தால் தான் நாம் ஜெயித்த கணக்கு என்பார் என் மாமன். அது உண்மை....... நாம் ஜெயிக்கறது சுலபங்க
அவர்களை ஜெயிக்க வைப்பது தான் நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் .....
படிங்க ..... வேலைக்கு போங்க....... சூழ்நிலை சரியா இல்லைன்னா கொஞ்சம் பிரேக் எடுத்துக்கோங்க.... அப்பவும் ஏதாவது படிங்க.....
இப்ப இணையம் மூலம் நிறைய படிப்புகள் இருக்கு.......
மொத்தத்தில் இந்த கணத்தை அமைதியா நிம்மதியா வாழுங்க....... அதே சமயம் ....உங்கள் அறிவை பெருக்கிக்கோங்க........
நமக்கு எது தேவையோ மிக சரியான நேரத்தில் நம்மை வந்து சேரும் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்கணும்.(தினமும் சில முறைகள் சொல்லி தான் பாருங்களேன்...... என் மகன் எனக்கு சொல்லி கொடுத்தான்...... நல்லது மட்டுமே நடக்குதுங்க.... நீங்க இந்த போஸ்டை படிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்....... படிச்சிட்டீங்க பாத்தீங்களா?? )
பின் குறிப்பு: என் நட்பு வட்டத்தில் மனதாலும் வயதாலும் இளையவர்களே அதிகம் இருப்பதால் ஒரு சிறு விளக்கம்....இந்த தலைப்பு அந்த கால பஞ்ச் டையலாக்,
சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் கவுண்டமணி அவர்கள் கதாநாயகி சுமதியை பார்த்து சொல்(ஜொள்ளும்)லும் வசனம் இது.
குப்பை கொட்டுவதை அத்தனை பாராட்டுதலா சொல்வார்...
No comments:
Post a Comment