Thursday, 30 October 2014

Golden Rules of Book Keeping ......

 புத்தகம் வைத்து தங்க விதிகள் - கூகிள் இப்படித்தாங்க சொல்லுது

நீங்கள் ஒரு பொருளாதார நிபுணராக ஆக வேண்டுமா? 

அப்ப வாங்க  அதற்கு உண்டான ஆதார விதிகளை கற்று கொள்ளலாம்........

மூன்றே மூன்று விதிகள் தான் .இதனை அறிஞர்கள் தங்க விதிகள் என்று கூறுவர்

1.DEBIT WHAT COMES IN , CREDIT WHAT GOES OUT

வந்ததை வரவில் வைப்போம், கொடுத்ததை செலவில் வைப்போம் 

(எல்லோரும் கொண்டாடுவோம்_ நாகூர் ஹனீஃபா)

2.DEBIT THE RECEIVER, CREDIT THE GIVER

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் 
(படகோட்டி படப்பாடல்)

யாருக்கு கொடுத்தார்னு அவருக்கே தெரியலை பாருங்க

அதனால யாருக்கு கொடுத்தோம்னு குறிச்சு வைங்க(GIVER)
அதே போல யாரிடம் வாங்கினோம்னும் குறிச்சு வைங்க (RECEIVER)

3.DEBIT ALL EXPENSES AND LOSSES, CREDIT ALL INCOMES AND GAINS

வரவு எட்டணா செலவு பத்தணா மீதி ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனா - இந்த துந்தனா தான் நஷ்டம் ( LOSSES)

வரவு பத்தணா செலவு எட்டணா  அதிகம் ரெண்டணா தந்தனா தந்தனா - இந்த தந்தனா தான் லாபம் ( GAINS)

(பாமா விஜயம் படப்பாடல்)

மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால்

ASSETS = CAPITAL + LIABILITIES
ASSETS - LIABILITIES = CAPITAL

முதல் (CAPITAL) போட்டு சொத்துக்களை(ASSETS) வாங்கி தொழில் செய்தாலும் சரி,கடனுக்கு சொத்து வாங்கி தொழில் செய்தாலும் சரி , வாங்கினவங்களுக்கு திருப்பி தரவேண்டியது உங்களோட பொறுப்பு( LIABILITIES)

மேலே சொன்ன விதிகளை புரிஞ்சுகிட்டவங்க எல்லாரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க பாக்கலாம்...

புரியாதவங்களும் ஒரு முறை ஜோரா கைதட்டிட்டு மறுபடியும் படிங்க....... இப்ப கண்டிப்பா புரியும்......


3 comments:

  1. Sooooper Aunty... I think 'meethi' & 'athigam' shd be interchanged in pt 3.

    ReplyDelete
    Replies
    1. 8 - 10 = (-2)
      10 - 2 = (+2)

      Which is profit and which is loss????

      Delete
  2. Super...wonderful correlation of Tamil songs :)
    - Nana

    ReplyDelete

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...