சிறு பிள்ளைகளுக்கு சிற்றுண்டி தந்து அவர்களை திருப்திபடுத்துவது இருக்கே......
அதை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுதே, அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுதே.......(லட்டு
வாங்க வரிசையில் நிற்காதது ஒன்று தான் குறை, சிவகாமி சிவகாமி)
Little Bro |
என் சகோதரர் சிறுவயதில் அம்மா போரடிக்குது , "எதன்" என்பார். அது
எதனாக வேண்டுமானாலும் இருக்கலாம், பொட்டுக்கடலை நிலக்கடலையில் ஆரம்பித்து முறுக்கு,
வாழைப்பழம் என அவர் எண்ணத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
My kids |
என் மகன் , அம்மா ஸ்னாக்ஸ் வேணும் (இதற்கு பின்னணி இசை வேறு...... போரடிக்குது
போரடிக்குது கேட்கவில்லையா .......சொட சொட சொட்........) )விடுமுறை நாட்களில் உட்கார
விட மாட்டார்........ இவரது விருப்பம் "ரக்கட்டு" எனப்படும் எண்ணையில் செய்த
தின்பண்டங்கள். .குறைந்த பட்சமாக அரிசி அப்பளம், அரிசி வடகம்.(என் மாமியார் உன் மகன்
ஸ்னேக் அப்படின்றானே... அவன் பாம்பை சாப்பிடக் கேட்கிறானா என்றார் ரகசியமாக என்னிடம்,
இதுக்கு விளக்கம் வேறூ சொல்லி இவரை திருப்தி படுத்துவது கூடுதல் தமாகா........)
என் தோழியின் மகன் அவரது தாயாருடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது , குட்டிப்
பையனுக்கு சாப்பிட பிஸ்கட் கொடுக்க முற்பட்டேன். அதற்கு அவர் இப்பத்தான் அவன் மூசு(ரு)ண்டை
சாப்பிட்டான் என்றார். (அப்படின்ன எதோ உருண்டை போல இருக்கு என்று நானும் எங்களுடன்
தங்கியிருந்த என் இளைய சகோதரியும் எண்ணினோம்)சில நாட்களுக்குப் பிறகு தோழியிடம் , மூசு(ரு)ண்டை
செய்வது எப்படி என என் சகோதரி கேட்க , அவர் சிரித்து விட்டு, நீங்க ஸ்னேக்ஸ்ன்னு சொல்வீங்க
இல்லையா அதைத் தான் நாங்க மூசு(ரு)ண்டைன்னு சொல்வோம் என்றார்.எதன் போலத் தான் இது
, எதனாகவும் இருக்கலாம்.
![]() |
Grand kids |
சமீப காலங்களில் குட்டிப் பேரன், பட்டீ(அ)அம்மா இட்ஸ் போரிங்க் , சாப்பிட ஏதாவது
கொடுங்க...... இவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை யாருமறியார் பராபரமே........
சேர்ந்தே இருப்பது - போரிங்கும் ஸ்னேக்ஸும்.....
சேராதிருப்பது -பாப்பாவின் எண்ணமும் அம்மா தரும் ஸ்னேக்கும்.......
திட்டு வாங்க -பாப்பா
கொட்டு வைக்க -அம்மா
அய்யா சாமீ , ஆளை விடுங்க.......
No comments:
Post a Comment