செப்டம்பர் 1, 2016 அன்று விமானத்தில் சிகாகோ நகரை நெருங்கிய சமயம் மேலிருந்து கீழே நோக்குகையில்... இதென்ன இவ்வளவு அகன்ற நீர்ப்பரப்பு? இப்பகுதியில் கடல் எங்கே வந்தது என வியக்க வைத்த மிகப் பெரிய அந்த நீர்ப்பரப்பு ஒரு மிகப் பெரிய நன்னீர் ஏரி. அதன் பெயர் மிச்சிகன் என்பதை பின்னர் அறிந்தேன் .

ஏழாம் வகுப்பு புவியியல் பாடத்தில் படித்த வட அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளாவன : சுப்பீரியர் , மிச்சிகன், ஹியூரான் ,எரீ ,ஒன்டாரியோ (பரப்பளவில் பெரியது முதல் சிறியது வரை வரிசையில் )என்பதாகும். ((Lake Superior, Lake Michigan, Lake Huron, Lake Erie and Lake Ontario)
மிச்சிகன் ஏரியைத் தவிர மற்ற ஏரிகள் வட அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பொதுவானவை. மிச்சிகன் ஏரியில் என் அனுபவங்கள் பற்றிப் பின்னொரு நாளில் கூறுகிறேன்.

விஸ்கான்சின் மாகாணம் பால் பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது. மிச்சிகன் மற்றும் சுப்பீரியர் ஏரிகள் இந்த மாகாணத்தில் உள்ளன. எங்கெங்கும் பசுமை. வழியெங்கும் மக்காச்சோளம், திராட்சை பயிர்கள். குட்டையான ஊசியிலை மரங்கள். (Coniferous trees) தென்பட்டன.[பல கண்டங்களிலும் மிக உயரமான ஊசியிலை மரங்களை தான் கண்டிருக்கிறேன். கிறிஸ்துமஸ் மரம் என்று சொல்வோமே அதே தான் .]
வழியில் ஆங்காங்கே vineries , breweries , dairy farms , fire works factory /outlets தென்பட்டன .
மிச்சிகன் மாகாணத்தில் உயரமான மரங்கள் எங்கெங்கும் தென்பட்டன. இலையுதிர் காலத்தின் ஆரம்ப கட்டம் என்பதால் இலைகளின் நிறம் மாற தொடங்கி இருந்தது.
Munising செல்லும் பாதையை ஒட்டி பல மைல்களுக்கு நம்முடன் பயணிக்கிறது மிச்சிகன் ஏரியும். அமைதியான அழகான பரந்து விரிந்த ஏரி .
இரண்டு மணிப் நேர பயணத்திற்குப் பிறகு Central Time Zone ஆரம்பம். (+ 60 நிமிடங்கள் )
வழியெங்கும் Cedar மரங்கள். அதையொட்டி Cedar st , Cedar dr , Cedar falls , Cedar avenue , Cedar grove (Netflix ல் பார்த்த Cedar Cove தொடரும் இது போன்ற பகுதியில் படமாக்கப்பட்டதே )
வழியில் ஆங்காங்கே கேம்பிங் செய்யும் இடங்கள், reserve forests , sanctuaries தென்பட்டன. (மொத்தத்தில் செல்லும் மார்க்கம் அடர்ந்த காட்டின் நடுவில், ஏரிக்கரையின் ஓரத்தில் என்பது இந்நேரம் உங்களுக்கே புரிந்திருக்கும் )


அமைதியாக தோன்றும் ஏரியில் பயணிக்க ஆரம்பித்ததும் தான் அதன் தன்மை தெரிகிறது. அலைகள் கடலை போல இல்லாவிட்டாலும் மிகுந்த வலிமையுடன் உள்ளன. நாங்கள் சென்ற படகு நிறுவனத்தின் பெயரே Riptide ..

அவ்வப்போது படகினை 360 டிகிரி சுற்றுவார் ஓட்டுநர் பயணிகளை மகிழ்விக்க (?!)
வழியில் சுண்ணாம்பு கற்களால் ஆன குன்றுகள் (cliffs), தற்சமயம் உபயோகத்தில் இல்லாத கலங்கரை விளக்கங்கள் (Light houses), நீர்வீழ்ச்சிகள் , அடர்ந்த உயரமான மரங்கள் (Boreal forest species such as black spruce, white spruce, white cedar, and larch (tamarack). நிறைந்த தீவு Grand Island .
பாறைகள் பல நிறங்களில் ஜொலித்தன. ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு தாது காரணம் . [The colors in the cliffs are created by the large amounts of minerals in the rock.]
மேற்சொன்னவைகளை காணவும் புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஏதுவாக படகினை அங்கங்கே நிறுத்தினார்கள்.

25 கிலோமீட்டர் தீவை சுற்றிச் சுற்றி சலிக்கச் சலிக்கப் உடம்பு வலிக்க படகுப் பயணம்.
படகுப் பயணம் இனிதே(?!) முடிவடைய அந்த ஊரின் மற்ற பகுதிகளை காண கிளம்பினோம்.
இப்பகுதியில் 21 நீர்வீழ்ச்சிகள் உள்ளன . [Most of the waterfalls in this area are the result of water running over a shelf or cliff of hard limey sandstone called the Au Train Formation. This geologic formation resists erosion better than the softer sandstone layers just below it. ]


Miners fallsல் திருமணம் செய்து கொள்ள ஒரு குழு சென்று கொண்டு இருந்தது. மணமக்கள், பாதிரியார் (நம் ஊர் போல ஆடை அணிந்திருக்க மாட்டார்கள். suit அணிந்திருப்பார்கள்.) Bridesmaids, Flower girls ,Best man என 10-12 பேர் மட்டுமே. [ரசனையான மனிதர்கள் :) ]
அடுத்து நாங்கள் சென்ற இடம் Pictured Rocks Sand Point Beach . Beach என்று ஏன் அழைக்கிறார்கள் என்று அங்கே சென்றதும் புரிந்தது. கடல் போல ஏறி உள்ளது என்று சொன்னேன் இல்லையா? அலைகளும் மணல் நிறைந்த கரையும் இல்லாமல் இருக்குமா ?

வாழ்நாளில் காண்பேன் என்று நினைத்தே பார்க்க இயலாத ஒரு அனுபவத்தை பெற்ற மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.
Superb Superior!
No comments:
Post a Comment