கியூபா விமான விபத்து ,டெக்சாஸ் பள்ளி துப்பாக்கி சூடு ,கர்நாடகா தேர்தல் முடிவுகள் என கலந்து கட்டி செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த கடந்த வெள்ளியன்று இரவு , நான் பார்க்க நேர்ந்த ஒரு டாகுமெண்டரி 48 மணி நேரங்கள் கடந்தும் என் மனதை பாதிப்பதால் , உங்களுடன் பகிர முடிவு செய்து இதோ ஆரம்பிக்க போகிறேன்.
TV 5 Monde (Asie) என்னும் தொலைக்காட்சி சானலில் “Faux Pas Rever” (unimaginable / you can never dream of என்பது இதன் சுமாரான மொழிபெயர்ப்பு) என்ற நிகழ்ச்சியில் “Grand Nord Canadien” என்ற தலைப்பில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பனி படர்ந்த மலைச்சிகரங்களுடன், மிகக்குறைந்த மக்கள் தொகையுடன் கூடிய Yukon பகுதியை சுற்றிக் காட்டி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையினை பற்றி விளக்கினார்கள்.(ஆங்கில subtitles உடன் பார்த்தேன்)
Google Map ல் எந்த ஒரு இடத்தையோ ஊரையோ தேடினாலும் Yukon ,unorganized என்று தலைப்பிடுகிறது.
ஆர்டிக்(Arctic) பகுதியில் அமைந்திருக்கும் இந்த பகுதியை குளிர்காலத்தில் சுற்றிக் காட்டியுள்ளார்கள். ஏரிகள் ஆறுகள் என எங்கும் பனி உறைந்து .... மக்கள் ஏரியின் மேல் வீடு கட்டி வசிக்கிறார்கள். அங்கே வசித்தால் அரசுக்கு எந்த வரியும் கட்ட தேவை இல்லையாம். வீட்டிற்கு வாடகை தர தேவை இல்லையாம்.
பனி சிற்பங்கள் செய்து திருவிழா கொண்டாடுகிறார்கள். நாய்கள் ஓட்டும் sled வண்டி போட்டிகளும் உண்டு. முதலில் வருபவர்களுக்கு பரிசுகளும் உண்டு. வெளியூர்களிலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து பனியால் செய்த கோட்டைக்குள் கலை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார்கள். Ticket உண்டு. உள்ளே ஒருவிதமான கொண்டாட்டம் என்றால் வெளியே வானில் வர்ண ஜாலம் . ஆர்டிக் பகுதியில் குளிர் கால இரவுகளில் வானில் தெரியும் வர்ணஜாலங்களுக்கு Northern Lights என்று பெயர். yukon பகுதியின் இரவு நேர வானம் வண்ணக்கோலம் . கொள்ளை அழகு.
(Aurora borealis- https://www.youtube.com/watch?v=fVsONlc3OUY)
குடிநீருக்கு பனிப்பாறைகளை உடைத்து அடியில் தேங்கி உள்ள நீரை வழிகளில் எடுத்து வந்து உபயோகிக்கிறார்கள். கோடையில் பனி உருக ஆரம்பித்த பிறகு அந்த வீடுகள் நகர தொடங்கி விடுகின்றன. எப்படியும் நம் ஊர் ஏரிகள் பல தண்ணீர் இருக்கப்போவதில்லை என்பதால் மக்கள் அங்கேயே வசிக்கிறார்கள். மின்சாரத்திற்கு ஜெனெரேட்டர்களை உபயோகிக்கிறார்கள்.
பனிப்பாறைகளை உடைத்து மீன் பிடிக்கிறார்கள். Beaver என்னும் மிருகத்தை பொறி வைத்துப் பிடிக்கிறார்கள் அதன் Fur க்காக. ஆழ்கடல் Divers பனிப்பாறைகளை குடைந்து, ஓட்டையினுள்ளே சென்று ஒரு வகையான கடல் உயிரினத்தை பிடித்து மேலே எடுத்து வருகிறார்கள். Bison என்னும் காட்டெருமையை வேட்டையாடுகிறார்கள். அரசே அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க குளிர் காலத்தில் மட்டும் ஒருவர் 3 Bison காலை வேட்டையாடலாம் என்று அனுமதி அளித்துள்ளதாம். சிறப்பான high tech காமராக்களுடன் பொறி வைத்து விலங்குகளை வேட்டையாடுகிறார்கள். பொறியில் விலங்கு மாட்டினால் எங்கிருந்தாலும் ஒரு கருவியின் மூலம் கண்டு கொண்டு , விலங்கை பிடிக்கிறார்கள். Wolverine கள் மனிதர்களின் வழித்தடத்தை பார்த்து தாமும் Bison களை வேட்டையாடுகின்றன என்று வருந்தினார் பேட்டியாளர்.
ஆண்கள் மட்டுமன்றி பெண்டிரும் இது போன்ற வேட்டைகளில் ஈடுபடுகிறார்கள்.
மேலே சொன்னவைகள் அம்மக்களின் உணவு மற்றும் உடைகளுக்கான வாழ்வாதார செயல்கள்.
அடுத்தது, அவர்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்று பார்ப்போமா .... நாய்கள் இழுக்கக்கூடிய Sled வண்டிகள், Jeep , Car , jet skii , Skii plane எனப் பல விதமான பனியில் செல்ல கூடிய வாகனங்களை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு கட்டத்தில், நாம் தற்சமயம் ஆர்டிக் கடலின் மேலே பயணம் செய்து கொண்டிருக்கிறோம் 1-1.5 அடி கீழே கடல் உள்ளது என்பார் காரில் நம் பேட்டியாளரை அழைத்து செல்பவர்.
சுற்றிலும் மனிதர்களே இல்லாத ஓரிடத்தில் தம்முடைய நாய்களுடன் தன்னந்தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறார் ஐரோப்பாவிலிருந்து அங்கு வந்து தங்கியிருப்பவர்.
தனக்கு வேண்டிய சாமான்களுக்கு “Email” அனுப்புவாராம் skii plane ல் வந்து supply செய்கிறார்கள், Cheeros , Coke , kitchen towel என எது கேட்டாலும்.
பருவ நிலை நன்றாக இருந்தால் மட்டுமே அந்த பகுதிக்கு விமானத்தில் செல்ல முடியும் என்கிறார் விமானி .சுற்றிலும் பனி . அவர் ஒருவரே 23 வருடங்களாக அங்கு வசிப்பதாக கூறுகிறார்.
தனியாக இருப்பது அவருக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார். 6-7 மணி நேரங்கள் மட்டுமே வெளிச்சம் இருக்கும் நாட்களில் மட்டும் கொஞ்சம் boring ஆக இருக்கும் என்றார். சுற்றிலும் பணியும் அங்கே வசிக்கும் விலங்குகளும் மட்டுமே. இவரது வீட்டின் உள்ளே இருக்கும் வசதிகள் நகரத்திலுள்ள வீட்டை விட சிறப்பாக உள்ளது குறிப்பிடத்த்தக்கது. (எப்படி அத்தனை பொருட்களை அந்த பனிசிகரத்துக்கு எடுத்து சென்று வீட்டை கட்டி இத்தனை வசதிகளையும் செய்து கொண்டார்?)
Mt Logan இங்கே உள்ள உயரமான சிகரம். இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர் Dawson . 1860-1890 களில் தங்கம் தேடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் வாரிசுகள் இன்று இந்த ஊரில் தங்கியுள்ளார்கள்.
Dawson ல் அமைந்துள்ள வீடுகள் permafrost வகையை சார்ந்தவை. (a thick subsurface layer of soil that remains frozen throughout the year, occurring chiefly in polar regions.)
பனி படர்ந்த மலைகளின் ஊடே அமைந்த Golden Stairs எனப்படும் பாதையின் வழியே மக்கள் பயணித்து, வழியில் பலரும் செத்து மடிந்து, தங்கம் புதைந்துள்ள சுரங்கங்களை அடைந்து தங்கத்தை வெட்டி எடுத்தார்களாம். தற்சமய 1800 பேர் வசிக்கிறார்கள். -30 யிலிருந்து -50 வரை வெப்ப நிலை மாறும் இடம் இது.
தங்க சுரங்கங்களுக்கு செல்லும் வழியில் அந்நாளில் மக்கள் கட்டிய சர்ச் (Bennett Church) இன்றளவும் உள்ளது. அம்மக்களின் வீடுகள் எதுவும் இல்லை.
வருடத்தின் 6 மாதங்கள் மட்டுமே இன்றளவும் தங்க சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். மீதி 6 மாதங்கள் கடும் குளிர்.
பேட்டியாளர் : -10 டிகிரி குளிராக இருக்கிறதே நீங்கள் எப்போது gloves அணிவீர்கள் ?
அந்த ஊரில வசிப்பவர்: -30 போகும் போது போட்டுக்கொள்வேன். எப்படியும் -50 டிகிரி போகும் போது உடலை நன்றாக மூடி ஆடை அணிய வேண்டும். இப்போது தேவை இல்லை
மீன்களை பிடித்து விற்கிறார்கள். குளிர்காலத்தில் மீன்கள் தூண்டிலில் சிக்க 1-2 மணி நேரங்கள் கூட காத்திருக்க வேண்டுமாம். பேட்டியாளருக்கு ஆச்சரியம் , எதுக்கு இங்கே சிரமப்படறீங்க ஊருக்குள்ளே வந்துடுங்க என்கிறார் .
ஊருக்குள்ளே ஒரே மக்கள் கூட்டம், இங்கே இருக்கும் அமைதியும் சுத்தமும் அங்கே இல்லை எனக்கு இது பிடித்திருக்கு 1 மணி நேரம் காத்திருப்பது பெரிய விஷயமே இல்லை என்கிறார் ஒருவர்.
வித்தியாசமான நில அமைப்பு. வித்தியாசமான வாழ்க்கை முறை. இயற்கையின் அற்புதம் .
இப்படி கூட இந்த பூமியில் ஒரு இடம் உள்ளதா என வியக்க வைத்த நிகழ்ச்சி.
பின் குறிப்பு : இந்த வீடியோவின் link :
https://www.youtube.com/watch?v=P5M8lBTuF84
நிகழ்ச்சி பிரஞ்சு மொழியில் இருந்தாலும், அதை புரிந்து கொள்ள மொழி தேவை இல்லை. இந்த பதிவை படித்து விட்டு பார்த்தாலே புரியும்.
No comments:
Post a Comment