Thursday, 27 September 2018

சின்னச் சின்ன .....


கதைகள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் சிறுவயது முதலே தன் பங்களிப்பை தொடங்கி விடுகிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது சிறுகதைகளுக்கு சால பொருந்தும்.

சிறுவயதில் என் சித்தி சொல்லிய Cinderella  மற்றும் Snow White, பாட்டி கூறிய புராணக் கதைகள் தொடங்கி புத்தகங்களில் படித்த பல சிறுகதைகள் பலவும் என் நினைவில் நிற்கின்றன . 

என் வாழ்க்கையை வழிநடத்திய இரு சிறு கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதை தொடர்ந்து சில சிறந்த சிறுகதைகளை அறிமுகப்படுத்துகிறேன் .

முதலாவதாக , திரு இறையன்பு IAS அவர்கள் கூறிய(எழுதிய ) கதை .

பட்டுப்பூச்சி (butterfly)  தட்டான்பூச்சியும்(Dragonfly)  தான் கதாபாத்திரங்கள். தட்டான் பூச்சிக்கு பட்டு
பூச்சியின் அழகையும் பொலிவையும் பார்த்து பொறாமை. 

தட்டான் பூச்சி : பட்டாம்பூச்சியே நீ மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாய்?

பட்டாம்பூச்சி :  நான் அழகற்ற  கம்பளிப்புழுவாய்த் தான்  இருந்தேன். பிறகு ஒரு கூட்டுக்குள் 14 நாட்கள் உணவு தூக்கம் இன்றி சிரமத்துடன் அடைந்து கிடந்தேன். வெளியுலகை காண வரவே இல்லை. 15 ஆவது நாள் நான் வெளியில் வந்த போது இது போன்ற அழகிய தோற்றத்துடன் இருந்தேன் .

நீதி : தவம் இருந்தால் வரம் கிடைக்கும். உழைப்பே உயர்வு .

இரண்டாவது கதை ஒரு இளம் பெண்ணின் கனவு பற்றியது .

 ஒரு சிறிய ஊரில் ஒரு இளம்பெண் வசித்து வந்தாள் . இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த பெண்ணிற்கு   பியானோ இசைக்க வேண்டும் என்று ஆசை. யாரேனும் தம்முடைய பியானோவை கொடுத்தால் சில மாதங்களாவது தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்று வசித்து விட்டு, திருப்பி  தந்து விடலாம் என்று நினைப்பாள்.

அவள் தன்னுடைய அலுவலகத்திற்கு தினமும் பேருந்தில் செல்வாள். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி தன்னுடைய தோழியிடம் , நான் 6 மாதங்கள் வெளியூருக்கு செல்லப் போகிறேன் என்னிடம் உள்ள பியானோவை வாசிக்காமல் விட்டு வைக்க எனக்கு விருப்பமில்லை யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் நான் வரும் வரை அவர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட இளம்பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தான் பாதுகாப்பாக வைத்திருந்து திருப்பி தருவதாக சொல்லி பியானோவை தன் வீட்டிற்கு எடுத்து சென்று , 6 மாதங்களுக்கு பிறகு திருப்பித் தருகிறாள்.

நீதி : உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் . கனவுகளை முழுமையாகக் காண வேண்டும். சொந்தமாக பியானோ வாங்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் ??

மனதில் நின்ற சிறுகதைகளில் சிலவை மட்டும் ......

(1)God sees the truth , but waits  - Leo Tolstoy 

பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம். இன்றும் நினைவில் நிற்க என் ஆசிரியை திருமதி.விமலாவும் ஒரு காரணம். 

ஒரு வழிப்போக்கன் வெளியூருக்கு பயணம் மேற்கொள்கின்றான் .       
வழியில் , ஒரு ஊரில் தங்குமிடத்தில் ஒரு கொலை நடக்கிறது. தவறான சந்தர்ப்ப சாட்சிகளின்படி  வழிப்போக்கன் சிறையில் அடைக்கப் படுகிறான். 26 வருடங்கள் சிறையில்  செய்யாத குற்றத்திற்காக கழிக்கிறான். கொலை செய்தவன் ஒரு திருடன் தன்னுடைய தவறை ஒத்துக் கொள்கிறான். மறுநாள் வழிப்போக்கனை விடுதலை செய்ய அதிகாரி  வரும்போது ,அவன் ஏற்கனவே இறந்திருப்பான்.

(2)ஏறக்குறைய சொர்க்கம் - திரு சுஜாதா 

மிகச் சிறந்த எழுத்தாளர். பல துறைகள் பற்றியும் எழுதியுள்ளார்.  Electronic Voting Machine இல் இவரது முக்கியமானது. 1965 ஆம் ஆண்டு எழுதியவைகள் கூட இன்றைக்கும் புதுமையாகவே உள்ளன. 
இரண்டு நாட்கள் முன்பு, நூலகத்திலேயே அமர்ந்து அவரது "கணையாழியின் கடைசி பக்கங்கள் " புத்தகத்தின் சில கட்டுரைகள் படித்தேன். அவரது நகைச்சுவைக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

நடுத்தர வர்க்க குடும்பம். ஒரு தம்பதி . அழகான மனைவிக்கு திரைப்படத்தில் நடிக்க ஆசை. கணவனின் விருப்பத்திற்கு மாறாக நடிக்க செல்கிறாள். மனைவியைப் பிரிய விரும்பாத கணவனும் உடன் செல்கிறான் . உதவியாளர் போல செயல்படுகிறான். மனதை தேற்றிக் கொண்டு பணம் தரும் சுகங்களை அனுபவிக்க பழகிக் கொள்கிறான்.
நண்பர் ஒருவர் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பார். அதற்கு இவரின் பதில் ....

 "ஏறக்குறைய சொர்க்கம்"

(3)Gift of Magi - O.Henry 

இதுவும் பள்ளிப் பாடம்தான் . இது உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று .

O.Henry மிகச் சிறந்த ஆங்கில சிறுகதை எழுத்தாளர். இவரது கதைகள் குதூகலமாக ஆரம்பித்து மெல்லிய சோகத்துடன் முடியும்.

ஒரு தம்பதியின் அன்பை உணர்த்தும் கதை. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஒருவருக்கொருவர் பரிசு வழங்கும் பழக்கம் மேலை நாடுகளில் உண்டு. 
நீண்ட கூந்தலுடைய தன் மனைவி விரும்பிய மர  சீப்பினை தன்னுடைய கடிகாரத்தை விற்று பரிசாக வாங்கி வருவான் கணவன். 
அவன் மனைவியோ , கணவன் நீண்ட நாட்களாக அணிய விரும்பிய கடிகாரத்திற்கு தன்  நீண்ட கூந்தலை விற்று strap வாங்கி வருவான்.


எண்ணங்களே வண்ணங்களாக ......

Tuesday, 25 September 2018

பனிக்காட்டிலே……………


கியூபா விமான விபத்து ,டெக்சாஸ் பள்ளி துப்பாக்கி சூடு ,கர்நாடகா தேர்தல் முடிவுகள் என கலந்து கட்டி செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த கடந்த வெள்ளியன்று இரவு , நான் பார்க்க நேர்ந்த ஒரு டாகுமெண்டரி 48 மணி நேரங்கள் கடந்தும்  என் மனதை பாதிப்பதால் , உங்களுடன் பகிர முடிவு செய்து இதோ ஆரம்பிக்க போகிறேன். 

TV 5 Monde (Asie) என்னும் தொலைக்காட்சி சானலில் “Faux Pas Rever” (unimaginable / you can never dream of என்பது இதன் சுமாரான மொழிபெயர்ப்பு)   என்ற நிகழ்ச்சியில் “Grand Nord Canadien” என்ற தலைப்பில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பனி படர்ந்த மலைச்சிகரங்களுடன், மிகக்குறைந்த மக்கள் தொகையுடன் கூடிய Yukon பகுதியை சுற்றிக் காட்டி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையினை பற்றி விளக்கினார்கள்.(ஆங்கில subtitles உடன் பார்த்தேன்)

Google Map ல்   எந்த ஒரு இடத்தையோ ஊரையோ தேடினாலும் Yukon ,unorganized என்று தலைப்பிடுகிறது.

ஆர்டிக்(Arctic) பகுதியில் அமைந்திருக்கும் இந்த பகுதியை குளிர்காலத்தில் சுற்றிக் காட்டியுள்ளார்கள். ஏரிகள் ஆறுகள் என எங்கும் பனி உறைந்து .... மக்கள் ஏரியின் மேல் வீடு கட்டி வசிக்கிறார்கள். அங்கே வசித்தால் அரசுக்கு எந்த வரியும் கட்ட தேவை இல்லையாம். வீட்டிற்கு வாடகை தர தேவை இல்லையாம். 

பனி சிற்பங்கள் செய்து திருவிழா கொண்டாடுகிறார்கள். நாய்கள் ஓட்டும் sled வண்டி போட்டிகளும் உண்டு. முதலில் வருபவர்களுக்கு பரிசுகளும் உண்டு. வெளியூர்களிலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து பனியால்  செய்த கோட்டைக்குள் கலை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார்கள். Ticket உண்டு. உள்ளே ஒருவிதமான  கொண்டாட்டம் என்றால் வெளியே வானில் வர்ண ஜாலம் . ஆர்டிக் பகுதியில் குளிர் கால இரவுகளில் வானில் தெரியும் வர்ணஜாலங்களுக்கு Northern Lights என்று பெயர். yukon பகுதியின் இரவு நேர வானம் வண்ணக்கோலம் . கொள்ளை அழகு.  
(Aurora borealis- https://www.youtube.com/watch?v=fVsONlc3OUY)

குடிநீருக்கு பனிப்பாறைகளை உடைத்து அடியில் தேங்கி உள்ள நீரை வழிகளில் எடுத்து வந்து உபயோகிக்கிறார்கள். கோடையில் பனி உருக ஆரம்பித்த  பிறகு அந்த வீடுகள் நகர தொடங்கி விடுகின்றன. எப்படியும் நம் ஊர் ஏரிகள் பல தண்ணீர் இருக்கப்போவதில்லை என்பதால்  மக்கள் அங்கேயே வசிக்கிறார்கள். மின்சாரத்திற்கு ஜெனெரேட்டர்களை உபயோகிக்கிறார்கள்.

பனிப்பாறைகளை உடைத்து மீன் பிடிக்கிறார்கள். Beaver என்னும் மிருகத்தை பொறி வைத்துப் பிடிக்கிறார்கள் அதன் Fur க்காக. ஆழ்கடல் Divers பனிப்பாறைகளை குடைந்து, ஓட்டையினுள்ளே சென்று ஒரு வகையான கடல் உயிரினத்தை பிடித்து மேலே எடுத்து வருகிறார்கள். Bison என்னும் காட்டெருமையை வேட்டையாடுகிறார்கள். அரசே அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க குளிர் காலத்தில் மட்டும் ஒருவர் 3 Bison காலை வேட்டையாடலாம் என்று அனுமதி அளித்துள்ளதாம். சிறப்பான high tech காமராக்களுடன் பொறி வைத்து விலங்குகளை வேட்டையாடுகிறார்கள். பொறியில் விலங்கு மாட்டினால் எங்கிருந்தாலும் ஒரு கருவியின் மூலம் கண்டு கொண்டு , விலங்கை பிடிக்கிறார்கள். Wolverine கள் மனிதர்களின் வழித்தடத்தை பார்த்து தாமும் Bison களை வேட்டையாடுகின்றன என்று வருந்தினார் பேட்டியாளர்.

ஆண்கள் மட்டுமன்றி பெண்டிரும் இது போன்ற வேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். 
மேலே சொன்னவைகள் அம்மக்களின் உணவு மற்றும் உடைகளுக்கான வாழ்வாதார செயல்கள். 

அடுத்தது, அவர்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்று பார்ப்போமா .... நாய்கள் இழுக்கக்கூடிய Sled வண்டிகள், Jeep , Car , jet skii , Skii plane எனப் பல விதமான பனியில் செல்ல கூடிய வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். 
ஒரு கட்டத்தில், நாம் தற்சமயம் ஆர்டிக் கடலின் மேலே பயணம் செய்து கொண்டிருக்கிறோம் 1-1.5 அடி கீழே கடல் உள்ளது என்பார் காரில் நம் பேட்டியாளரை அழைத்து செல்பவர்.

சுற்றிலும் மனிதர்களே இல்லாத ஓரிடத்தில் தம்முடைய நாய்களுடன் தன்னந்தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறார் ஐரோப்பாவிலிருந்து அங்கு வந்து தங்கியிருப்பவர். 
தனக்கு வேண்டிய சாமான்களுக்கு “Email” அனுப்புவாராம்  skii plane ல் வந்து supply செய்கிறார்கள், Cheeros , Coke , kitchen towel என எது கேட்டாலும். 

 பருவ நிலை நன்றாக இருந்தால் மட்டுமே அந்த பகுதிக்கு விமானத்தில் செல்ல முடியும் என்கிறார் விமானி .சுற்றிலும் பனி . அவர் ஒருவரே 23 வருடங்களாக அங்கு வசிப்பதாக கூறுகிறார். 

தனியாக இருப்பது அவருக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார். 6-7 மணி நேரங்கள் மட்டுமே வெளிச்சம் இருக்கும் நாட்களில் மட்டும் கொஞ்சம் boring ஆக இருக்கும் என்றார். சுற்றிலும் பணியும் அங்கே வசிக்கும் விலங்குகளும் மட்டுமே. இவரது வீட்டின் உள்ளே இருக்கும் வசதிகள் நகரத்திலுள்ள வீட்டை விட சிறப்பாக உள்ளது குறிப்பிடத்த்தக்கது. (எப்படி அத்தனை பொருட்களை அந்த பனிசிகரத்துக்கு எடுத்து சென்று வீட்டை கட்டி இத்தனை வசதிகளையும் செய்து கொண்டார்?)

Mt Logan இங்கே உள்ள உயரமான சிகரம். இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர் Dawson . 1860-1890 களில் தங்கம் தேடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் வாரிசுகள் இன்று இந்த ஊரில் தங்கியுள்ளார்கள். 
Dawson ல் அமைந்துள்ள வீடுகள் permafrost வகையை சார்ந்தவை. (a thick subsurface layer of soil that remains frozen throughout the year, occurring chiefly in polar regions.)
பனி படர்ந்த மலைகளின் ஊடே அமைந்த Golden Stairs எனப்படும் பாதையின் வழியே மக்கள் பயணித்து, வழியில் பலரும் செத்து மடிந்து, தங்கம் புதைந்துள்ள சுரங்கங்களை அடைந்து தங்கத்தை வெட்டி எடுத்தார்களாம். தற்சமய 1800 பேர் வசிக்கிறார்கள். -30  யிலிருந்து -50 வரை வெப்ப நிலை மாறும் இடம் இது.

தங்க சுரங்கங்களுக்கு செல்லும் வழியில் அந்நாளில் மக்கள் கட்டிய சர்ச் (Bennett  Church) இன்றளவும் உள்ளது. அம்மக்களின் வீடுகள் எதுவும் இல்லை.  
வருடத்தின் 6 மாதங்கள் மட்டுமே இன்றளவும் தங்க சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். மீதி 6 மாதங்கள் கடும் குளிர். 

 பேட்டியாளர் :  -10 டிகிரி குளிராக இருக்கிறதே நீங்கள் எப்போது gloves அணிவீர்கள் ?
அந்த ஊரில வசிப்பவர்:  -30 போகும் போது போட்டுக்கொள்வேன். எப்படியும் -50 டிகிரி போகும் போது உடலை நன்றாக மூடி ஆடை அணிய வேண்டும். இப்போது தேவை இல்லை  
மீன்களை பிடித்து விற்கிறார்கள். குளிர்காலத்தில் மீன்கள் தூண்டிலில் சிக்க 1-2 மணி நேரங்கள் கூட காத்திருக்க வேண்டுமாம்.  பேட்டியாளருக்கு ஆச்சரியம் , எதுக்கு இங்கே சிரமப்படறீங்க ஊருக்குள்ளே வந்துடுங்க என்கிறார் . 

ஊருக்குள்ளே ஒரே மக்கள் கூட்டம், இங்கே இருக்கும் அமைதியும் சுத்தமும் அங்கே இல்லை எனக்கு இது பிடித்திருக்கு 1 மணி நேரம் காத்திருப்பது பெரிய விஷயமே இல்லை என்கிறார் ஒருவர். 

வித்தியாசமான நில அமைப்பு. வித்தியாசமான வாழ்க்கை முறை. இயற்கையின் அற்புதம் . 

இப்படி கூட இந்த பூமியில் ஒரு இடம் உள்ளதா என வியக்க வைத்த நிகழ்ச்சி.

பின் குறிப்பு :  இந்த வீடியோவின் link : 

https://www.youtube.com/watch?v=P5M8lBTuF84

நிகழ்ச்சி பிரஞ்சு மொழியில் இருந்தாலும், அதை புரிந்து கொள்ள மொழி தேவை இல்லை. இந்த பதிவை படித்து விட்டு பார்த்தாலே புரியும்.

Monday, 24 September 2018

19 May 2018

பிரிட்டிஷ் இளவரசர் Harry & Megan திருமணத்தைப்  பற்றிய முன்னோட்டங்கள்  , Transcontinental love , Transatlantic love , மணமகளின் தந்தை திரு Markle திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பது  போன்ற  தலைப்பு செய்திகள், Countdown .... மணி நேரங்கள் என கடந்த ஒரு வாரமாக ஒளிபரப்பி BBC மற்றும் CNN சானல்கள்   என் ஆர்வத்தை சற்றே தூண்டியதென்னவோ உண்மை.

வழக்கமாக தெரியாத செய்திகளுக்கு கூகுளை துணை தேடும் நான் இம்முறை , அது பற்றி யோசிக்காமல் முகூர்த்த நேரம் (?!) என்ன என்பதை மட்டும் தெரிந்து  கொண்டு தயாரானேன்.(தொலைக்காட்சியில் வேடிக்கை பார்க்கத்தான்).

சரியாக இந்திய நேரப்படி 4.30 க்கு ஆரம்பித்தது திருமண சடங்குகள். (பிரிட்டிஷ் நேரம் 12.00) 

என் கணவரையும் கல்யாணம் பார்க்கலாம் வாங்க என்று தொல்லைப்படுத்தி அருகில் அமர செய்ததும் ஆரம்பித்தது வினாடி வினா.   இந்த வினாடி வினா நிகழ்ச்சி முடியும் வரை தொடர்ந்தது

என் கணவரின் முதல் கேள்வி : (பின்னணியில் ஒலித்து கொண்டிருந்த சங்கீதத்தை கேட்டு ) 
ஏன் அழுவது போல பாடறாங்க ?
நான் : கல்யாண பாடல் பாடிட்டு இருக்காங்க, அழுவது போலவா இருக்கு ?

மணமகன் மற்றும் அவரது சகோதரர் வருகை. (அவர் தான் மாப்பிள்ளை தோழர் Best Man )
இவர்கள் டயானாவின் மகன்கள் தானே
 ஆமாம்
ஏன் இவர்கள் இருவரும் military uniform போட்ருக்காங்க ? கல்யாணத்துக்கு வேற துணி போட்டுக்க மாட்டாங்களா ?
ராஜா வீட்டு திருமணத்தில் military uniform தான் போடுவாங்க .
கல்யாண பையனுக்கு என்ன வயசிருக்கும்? தலையில் முடி குறைவா இருக்கே ?
33 வயசு (15 september 1984)
ஏன் இன்னும் அவங்க வீட்டில் இதனை வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம விட்டு வெச்சிருக்காங்க ?
ஏன் என்று எனக்கு எப்படி தெரியும். 

மணமகள் வருகை .....
5 மீட்டர் நீளமான Head piece உடன் கூடிய அழகிய வெள்ளை நிறத்திலான திருமண உடை *** அணிந்து படியேறி chapal உள்ளே நுழைகிறார். உடன் குட்டி தேவதைகள் போல flower girls & boys .
ஏம்மா எதுக்கு  இவ்வளவு நீள துணி ? தரையை கூட்டிட்டே போகுதே ?
அவர்கள் திருமணங்களில் இதுபோல தான் அணிவார்கள்.
வெள்ளை சல்லா துணியில் தான் தைப்பார்கள் . இந்த துணியின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க சிறப்பு .
(53 Common wealth நாடுகளின் பூக்களுடன் மணப்பெண்ணின் விருப்பத்திற்கிணங்க Winter Sweet மற்றும் California Poppy பூக்களும் Silk Tulle யில் கையினால் எம்பிராய்டரி செய்யப்பட்டது அந்த Head piece என்பதை பிறகு அறிந்து கொண்டேன், நம் கண்ணுக்கு எல்லாமே சல்லா துணிதான்)
ஆமாம், பொண்ணு யாரு எந்த ஊர் ?
Transatlantic Love னு போட்டாங்க, அப்போ அமெரிக்கா. (English Literature பாடங்களில் அதிகம் பயன்படுத்த பட்டிருக்கும் இந்த transatlantic)
Harry marries TV Star Megan Markle is the news headline. (அப்பாடி , அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என கேட்கும் முன்பே சொல்லிவிட்டேன்)
நல்ல வேளையாக அவர்களின் காதல் கதையை கேட்கவில்லை (எனக்கு தெரியாது)
மணப்பெண்ணின் தாயாரை காண்பித்த போது Transcontinental Love என்பதன் பொருள் புரிந்தது .

விருந்தினர்களும் உறவினர்களும் கூடியிருந்த அந்த இடத்தில் எனக்கு எலிசபெத் ராணியம்மா(பாட்டி?!), சார்லஸ் இளவரசர் மற்றும் ஹாலிவுட் நடிகர் George Clooney மற்றும் Amal Clooney யை மட்டும் தான் அடையாளம் தெரிந்தது. 

எலிசபெத் ராணியார் Electric பச்சை உடையணிந்து அனைவரிடத்திருந்தும்  தனித்து தெரிந்தார். (ராணியார் மணப்பெண்ணை விட எப்படி பளிச்சென்ற உடை அணியலாம் என்ற விமர்சனத்துக்கு அவரது பதில்: எத்தனை தொலைவிலிருந்து மக்கள் பார்த்தாலும் நான் அவர்களுக்கு தனித்து தெரிய வேண்டும்  நான் ராணியை பார்த்தேன் என்று அவர்கள் அப்போது தான் சொல்ல முடியும் )

Windsor Castle உள்ளே அமைந்திருக்கும் Chapal ல் திருமணம். chapal என்பது சிறிய பிரார்த்தனை கூடம். (Google ல் தேடினால் Chappal - a pair of sandals என்று காட்டுகிறது )

600 பேர் அமரக்கூடிய சிறிய (?!) பிரார்த்தனை கூடத்தில் திருமண நிகழ்வுகள் ஆரம்பித்தன.

வழக்கமான  திருமண நிகழ்வுகள் போல நடைபெற்றது. Vows  சொன்னதும் ஒரு பாடல் , ஒரு speech , மீண்டும் ஒரு திருமண சடங்கு, ஒரு பாடல்  , ஒரு speech , என இதே வரிசையில் ....
எல்லாருக்கும் என்ன பாடல்கள் பாடப்  போகிறார்கள் என்று அச்சடித்து கொடுத்திருந்தார்கள். (இது வழக்கம்) அனைவரும் எழுந்து நின்று படுவார்கள் , பார்த்தோ பார்க்காமலோ.

மணமக்களுக்கு பார்க்காமலே பாட தெரியும் போல(வாயசைத்தார்கள் ?!).... 
புத்தகம் இல்லாமலே பாடறாங்க (என் கணவர்)
இடையில் ஒரு whatsapp பதிவு ....

நான் சார்லஸ் டயானா திருமணத்தை பார்த்தேன் என் மகள் ஹாரி திருமணத்தை பார்க்கிறாள். அதே ஹால் அதே பிரம்மாண்டம். அதே ராணிப்பாட்டி . பெண் வீட்டு "வாத்யார்" கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவி கொண்டிருப்பதாக என் மனைவி சொல்கிறாள்.மணப்பெண்ணுக்கு இது இரண்டாம் கல்யாணம். இருந்தாலும் வெட்கப்படுகிறார். அவர்கள் நலமாக இருக்கட்டும் என ஒரு அன்பர் என் நண்பருக்கு அனுப்ப அவர் எனக்கு அனுப்பி இருந்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த இரண்டு குடும்ப பாதிரியார்களின் உபதேசம் கலந்த பேச்சுக்களின் சாரம் : பைபிளை மேற்கோள் காட்டி வாழ்க்கையை அன்புடன் விட்டு கொடுத்தலுடன் புது மணத்தம்பதியினர் வாழ வேண்டும்  மற்றும் இறைவனுக்கு நன்றி கூறுதலும்  ஆகும். (சென்னை மற்றும் திருச்சியில் நான் கலந்து கொண்ட திருமணங்களில் பகவத் கீதையையும் மேற்கோள் காட்டி பேசினார்கள். பகவத் கீதை மதம் சம்மந்தப்பட்ட புத்தகம்  அல்ல அது அனைவராலும் பின்பற்றக் கூடிய வாழ்க்கை நெறி பற்றிய புத்தகம்.)

திருமணம் இனிதே நிறைவுற்றது.  

மணமக்கள் chapal க்கு வெளியில் வந்து தரிசனம் தந்தார்கள் .
[இந்த கவுன் சரியான fitting லேயே இல்லையே கழுத்து சரியாவே தைக்கலையே ?
லண்டனில் உள்ள மிக சிறந்த டிசைனர் தைத்த கவுன் இது ,  அதனுடைய கழுத்து டிசைன் அப்படி]

பிறகு மணமக்கள் குதிரைகள் பூட்டிய  சாரட்டு வண்டியில் Windsor சாலைகளில்   ஊர்வலம் வர சாலையின் இரு ஓரங்களிலும் காலை 6 மணியிலிருந்து காத்திருந்த (உனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா ? பிபிசி காலை 6 மணிக்கே ஒளிபரப்பியதை பார்த்தேனே  ..) மக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். மக்கள் இன்றளவும் ராஜ விசுவாசிகளாக இருக்கிறார்கள்.
மோதிரம் மாற்றிக் கொண்டதும் , you may kiss the bride now தவிர்த்து அனைத்து சடங்குகளும் சாதாரணர்களைப் போல தான் நடைபெற்றது. (இல்லை நான் மிஸ் பண்ணி விட்டேனா ?)

விதம் விதமான உடைகள் அதற்கேற்ற வகையில் அலங்கரித்த தொப்பிகள் என விருந்தினர்கள் அணிந்து வந்ததை கண்டபோது, நாம் 1600-1700 களில் வசிக்கிறோமா இல்லை 2018 ல் வசிக்கிறோமா என சந்தேகம் வந்தது.

RICH AND ROYAL.

பின் குறிப்பு:

***சிலவருடங்கள் முன்பு web content writing பணியில் இருந்த சமயம் திருமண உடைகள் பற்றி எழுதும் assignment வந்த போது , நிறைய படிக்க வேண்டி இருந்தது. அதில் சில ... 

 மணப்பெண்ணின் உடை வகைகள் :A-line , Ballgown , Mermaid , Sheath etc  
Veil / Head piece- முகத்தை மூடும் சல்லா துணி மற்றும்
 உடைக்கு பின்புறம் நீண்டு தொங்கும் துணி 
Bridesmaid- மணப்பெண்ணின் தோழி - திருமணமாகாதவராக இருந்தால்  
Maid of  Honor  -மணப்பெண்ணின் தோழி ,திருமணமானவராக இருந்தால் ) 
Best man -மாப்பிள்ளை தோழர்

தொடாதே ....

கடந்த மாதத்தில் ஒரு நாள் என் மகன் என்னிடம் கேட்ட கேள்வி : அம்மா எனக்கு (எங்களுக்கு ) எந்த வயதில் Good touch bad touch பற்றி கற்றுத் தந்தாய் ? (நான் கற்றுத் தந்தது No Touch) 
நான் : சுமார் 5 வயது இருக்கும் போது 
மகன்: நன்றி அம்மா . மிகவும் பயனுள்ள ஒரு விஷயம் அது.

சிந்தனை சூழலில் சிக்கி மீண்ட போது, அந்நாட்களில் என் பெற்றோர் கற்றுத்  தந்த "No Touch " பற்றிய நினைவுகள் மேலோங்கின . சிறு வயது முதலே இது பற்றி சொல்லித்  தந்து விடுவார்கள். குறிப்பாக யாருடைய வீட்டிற்குள்ளும் செல்லக் கூடாது என்று சொல்லித் தந்தார்கள். ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது நீயும் யாரையும் தொட்டு பேசக் கூடாது என்பதையும்  கற்றுத் தந்தார்கள். எவ்வளவு அன்புக்குரியவராக இருந்தாலும் யார் அழைத்தாலும் அவர்கள் வீட்டிற்குள் பெற்றோருடன் மட்டுமே செல்லலாம் என்பது முக்கியம்.

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றியதால் நன்மையே . 

மேலை நாடுகளில் பெற்றோர் விவாகரத்து செய்தலும் மறறொருவரை  திருமணம் செய்வதும் , திருமணமாகாமலே கூடி வாழ்வதும் சகஜம். அங்கே பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறையாக "Good touch bad touch" ஐ மிகச் சிறிய வயதிலேயே கருத தந்து விடுவார்கள். 

No Touch மறைந்து Good touch bad touch கலாச்சாரம் எப்போது ஆரம்பித்தது என்பது புரியவில்லை .

இந்நாளில் மேலை நாடு நாகரிகத்தை பின்பற்றி வயது வந்த பிள்ளைகளை கூட  கட்டியணைத்து கொஞ்சுதல் சகஜமான ஒன்றாகி விட்டது. இது தொடுதல் பற்றிய புரிந்துணர்வைக் குறைக்கிறது என்றே நான் நினைக்கிறன்.

அந்நாளில் 4-5 வயதானவுடனேயே பெற்றோர் பிள்ளைகளை தேவை இல்லாமல் தொட்டு பேசுதலை தவிர்த்தார்கள். 

ஆணோ பெண்ணோ ,எந்த குழந்தையாக இருந்தாலும் , உடலளவில் ஒதுங்கியும்  உள்ளத்தளவில் மிக  நெருங்கியும்  வளர்த்தல் மிக அவசியம். 

பதின்பருவத்தினை எட்டிய  குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றிய அடிப்படை செய்திகளை அவசியம் கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமை. (மேலை நாடுகளில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது பற்றி 13 வயதில் கற்றுத் தந்து விடுவார்கள் என்று கேள்வி )

பெண் குழந்தைகள் தந்தையுடனும் ஆண் குழந்தைகள் தாயுடனும் நெருக்கமாக இருப்பது இயல்பு.(Oedipus complex & Electra complex_ Sigmund Freud ). குழந்தைகள் வளர வளர , அவர்கள் மனம் நோகாத வகையில் புரிய வைத்து "No Touch " பற்றிக் கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமை என்றே கருதுகிறேன் . தம்மை தற்காத்துக் கொள்ளக் கற்றுத் தர வேண்டியது முக்கியமானது. (செல்லம்.. இப்போ நீ  வளர்ந்துட்டே ..அப்பாவால் /அம்மாவால் உன்னை மடியில் வெச்சுக்க முடியலை கீழே உட்கார்ந்துக்கோ தங்கம்... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் etc etc )

பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் ஒரு விளம்பரம்.  பெண்களை துன்புறுத்தக் கூடாது , 
அவர்களை மதிக்கவேண்டும் என  உங்கள் மகனுக்கு சிறுவயது முதலே கற்றுக் கொடுங்கள் என்று ஒரு பிரபல பெண்மணி கூறுவார். பெண்களின் மீதான வன்முறைக்கு எதிரான மேற்கண்ட விளம்பரமும் மிக முக்கியமானதே . 

சமீபத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு you tube குறும்படம் "MAA". 

ஒரு பதின்பருவ (Teenage ) மாணவி தன்னுடைய தாயாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்வார். முதலில் அதிர்ச்சியடையும் அந்த தாய், சக மாணவன் தான் காரணம் என்பதை அறிந்து கொள்கிறார். தந்தையாருக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்து விடுகிறார். புத்திமதி கூறி பள்ளிக்கு அனுப்புகிறார். (காலம் கடந்த புத்திமதி ?)

பலவருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு ஆங்கில படம்(பெயர் நினைவில்லை. கதாநாயகி ,பதின்பருவ பெண்,பெயர் ஜூன் ) சக மாணவனால் கர்ப்பமாகி , தந்தையார் எதிர்க்க மாற்றாந்தாய் மகளுக்கு ஆதரவாய் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று குழந்தை பிறக்கும் வரை உடனிருந்து , அக்குழந்தையை தத்து கொடுக்க ஏற்பாடு செயகிறாள். குழந்தையின் தந்தைக்கு எதுவுமே புரிபடாமல் திருதிருவென விழித்தபடி நிற்பார். (தன்னுடைய செயலுக்கான பின்விளைவினை அறிய நேரும் போது  ஏற்படும் குழப்பமான மனநிலை)    
சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் அதே பையனுடன் மைதானத்தில் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருப்பாள் . 

இது மேலை நாட்டு கதை என்றாலும் அங்கும் Teenage pregnancy  ஏற்றுக் கொள்ளப்  படாத  ஒன்று. இந்த கதையிலும் "தொடல் " பற்றிய புரிதல் இல்லாதது தான் பிரச்சினைகளுக்கு காரணம். 

ஆண்  பெண் சுதந்திரம் என்பது அவசியமான ஒன்றே. அதன் அளவுகோல் என்ன என்பதை பொறுத்தே சுதந்திரம் அமைகிறது என்பதில் ஐயமில்லை .

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் யாரோ ஒரு இளம் பெண் எழுதிய  கட்டுரையை படிக்க நேர்ந்தது.  மனதில் பதிந்த சில கருத்துக்கள் சில. 

நாம் நம் விருப்பபடி ஆடை அணியலாம் . ஆண்கள் சிலகாலம் (?!) முறைத்து பார்ப்பார்கள். பிறகு கண்டு கொள்ள மாட்டார்கள். நாம் யாருடன் வேண்டுமானாலும் நட்பு வைத்து கொள்ளலாம். Live in முறையில் வாழலாம். தேவையான கர்ப்ப தடை சாதனங்களை உபயோகித்தால் போதுமானது. பெண்கள் மது அருந்தலாம். தப்பே இல்லை ... இப்படியே பல கருத்துக்கள் .

இவைகள் அவருடைய சொந்த கருத்துக்கள் . இதை படிக்கும் இளம்பெண்களில் ஒரு சிலருக்காவது இவைகளை நடைமுறை படுத்திப் பார்க்க தோன்றினால் ?? என்ன செய்யலாம் என்று சொல்லி தந்தவர் அதற்கான பின் விளைவுகளையும் சேர்த்தே சொல்லி இருக்கலாமோ?

கடந்த சில வாரங்களாக செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை காண்பதை அறவே தவிர்த்து வருகிறேன் .  6 மாத குழந்தை பாலியல் பலாத்காரம், 80 வயது பெண்மணி பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டார் , ஐடி நிறுவன பெண் ஊழியருக்கு டாக்சி ஓட்டுனரால் பாலியல் தொல்லை என்பது போன்ற செய்திகளை தலைப்பு செய்திகளாக காண நேர்வது கொடுமையிலும் கொடுமை. 

6 மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு உட்படும் இக்காலகட்டத்தில் , தொடுதல் பற்றிய புரிதல் மிக முக்கியம்.

4 வயது ஆன ஆண் பெண் இருபாலருக்கும்  "தொடுதல்" பற்றிய விவரங்களை கற்றுத்  தாருங்கள். (No Touch தான் சிறந்தது , Good Touch Bad Touch என்று அவசர , ஆபத்து காலங்களில் பாகுபடுத்தி பார்க்க இயலாது.)

ஆடை அணியும் விதம் பற்றியும்  பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே எடுத்துக் கூறுவது முக்கியம். சிறுவயதில் பெற்றோர்கள் கற்றுத் தராத பட்சத்தில் , அரைகுறையாக ஆடை அணிவது தப்பில்லை என்ற கருத்துக்கு சிறுவர்கள் ஆளாகி விடுவார்கள். 4 கண்டங்களை (continents) கண்டு வந்தவள் என்ற முறையில் சொல்கிறேன், எந்த நாட்டிலும் எந்த கண்டத்திலும் திரைப்படங்களில் காட்டுவது போல யாரும் ஆடை அணிந்திருக்கவில்லை பொது இடங்களில் நெருங்கி பழகவில்லை .  

பதின்பருவ குழந்தைகளுக்கு இன்னும் நன்றாக புரியும் வகையில் கற்றுத் தாருங்கள். சுதந்திரம் என்பது உடுத்தும் உடையிலோ தொடுதலிலோ இல்லை என்பதை உணர்த்துங்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பிள்ளைகளுக்கு புரியும் படி விளக்குங்கள். 

பாலியல் வன்முறைக்கான தீர்வு வீட்டிலிருந்து , பெற்றோரிடமிருந்தே தொடங்க வேண்டும். 

வருமுன் காப்போம் .

Good touch or bad touch??

"NO TOUCH"

Superb Superior !


செப்டம்பர் 1, 2016 அன்று விமானத்தில் சிகாகோ நகரை நெருங்கிய சமயம் மேலிருந்து கீழே நோக்குகையில்... இதென்ன இவ்வளவு அகன்ற நீர்ப்பரப்பு?  இப்பகுதியில் கடல் எங்கே வந்தது என வியக்க வைத்த மிகப் பெரிய அந்த நீர்ப்பரப்பு  ஒரு மிகப் பெரிய நன்னீர் ஏரி. அதன் பெயர் மிச்சிகன் என்பதை பின்னர் அறிந்தேன் . 
அதை விட அதிக பரப்புள்ள சுப்பீரியர் ஏரியினை அடுத்த சில நாட்களில் காண்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. 

ஏழாம் வகுப்பு புவியியல் பாடத்தில் படித்த வட அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளாவன : சுப்பீரியர் , மிச்சிகன், ஹியூரான் ,எரீ ,ஒன்டாரியோ (பரப்பளவில் பெரியது முதல் சிறியது வரை வரிசையில்  )என்பதாகும். ((Lake Superior, Lake Michigan, Lake Huron, Lake Erie and Lake Ontario)

மிச்சிகன் ஏரியைத் தவிர மற்ற ஏரிகள் வட அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பொதுவானவை. மிச்சிகன் ஏரியில் என் அனுபவங்கள் பற்றிப் பின்னொரு நாளில்  கூறுகிறேன்.

மகன் வசித்த ஊரான Green Bay , Wisconsin லிருந்து 3:30 மணி நேர கார் பயண நேரத்தில் , வடக்கு மிச்சிகன் மாகாணத்தில் உள்ள  Munising என்னும் ஊருக்கு சென்று, Pictured rocks National Lakeshore என அழைக்கப்படும் பகுதியில், Grand Island என்னும் 25 கிலோமீட்டர் பரப்பளவுள்ள Lake Superior இல் அமைந்துள்ள  தீவினை,  Jet Speed boat இல் சுற்றி வந்தது  வித்தியாசமான  அனுபவம்.  திகிலானதும் கூட .
 
விஸ்கான்சின் மாகாணம் பால் பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது.  மிச்சிகன் மற்றும் சுப்பீரியர் ஏரிகள் இந்த மாகாணத்தில் உள்ளன. எங்கெங்கும் பசுமை. வழியெங்கும் மக்காச்சோளம், திராட்சை பயிர்கள். குட்டையான ஊசியிலை மரங்கள். (Coniferous trees) தென்பட்டன.[பல கண்டங்களிலும் மிக உயரமான ஊசியிலை மரங்களை தான் கண்டிருக்கிறேன். கிறிஸ்துமஸ் மரம் என்று சொல்வோமே அதே தான் .]

வழியில் ஆங்காங்கே vineries , breweries , dairy farms , fire works factory /outlets தென்பட்டன . 

மிச்சிகன் மாகாணத்தில் உயரமான மரங்கள் எங்கெங்கும் தென்பட்டன.  இலையுதிர் காலத்தின் ஆரம்ப கட்டம் என்பதால் இலைகளின் நிறம் மாற தொடங்கி இருந்தது. 

Munising செல்லும் பாதையை ஒட்டி பல மைல்களுக்கு நம்முடன் பயணிக்கிறது மிச்சிகன் ஏரியும்.  அமைதியான அழகான பரந்து விரிந்த ஏரி .  

இரண்டு மணிப் நேர பயணத்திற்குப் பிறகு Central Time Zone ஆரம்பம். (+ 60 நிமிடங்கள் )

வழியெங்கும் Cedar மரங்கள். அதையொட்டி Cedar st , Cedar dr , Cedar falls , Cedar avenue , Cedar grove (Netflix ல் பார்த்த Cedar Cove தொடரும் இது போன்ற பகுதியில் படமாக்கப்பட்டதே )

வழியில் ஆங்காங்கே கேம்பிங் செய்யும் இடங்கள், reserve forests , sanctuaries தென்பட்டன. (மொத்தத்தில்  செல்லும் மார்க்கம் அடர்ந்த காட்டின் நடுவில், ஏரிக்கரையின் ஓரத்தில் என்பது இந்நேரம் உங்களுக்கே புரிந்திருக்கும் )

Munisingலிருந்து பல விதமான படகுகள் செலுத்தப் படுகின்றன. அங்குள்ள படகுத் துறையிலிருந்து தான் Pictured  Rocksஐ காண கிளம்ப வேண்டும் .  [Pictured Rocks derives its name from the 15 miles (24 km) of colorful sandstone cliffs northeast of Munising. The cliffs reach up to 200 feet (60 m) above lake level. They have been naturally sculptured into a variety of shallow caves, arches, and formations resembling castle turrets and human profiles. Near Munising, visitors can also visit Grand Island, most of which is included in the separate Grand Island National Recreation Area.]

சுப்பீரியர் ஏரி ஆழ்ந்த நீல நிறத்தில், ஒரு வித அமைதியுடன் , முடிவு எங்கே என்றே தெரியாது பரந்து விரிந்து (surface area of 31,700 square miles (82,103 km2),  எவ்வளவு ஆழம் இருக்கும் (Its average depth is 483 ft; 147 m with a maximum depth of 1,333 ft; 406 m.] என்று கணிக்கவே முடியாத அளவில் இருக்கிறது. என்றோ படித்த Great Lakesன் மிகப் பெரிய ஏரியான சுப்பீரியரைக் காண்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை . 

அமைதியாக தோன்றும் ஏரியில் பயணிக்க ஆரம்பித்ததும் தான் அதன் தன்மை தெரிகிறது. அலைகள் கடலை போல இல்லாவிட்டாலும் மிகுந்த வலிமையுடன் உள்ளன. நாங்கள் சென்ற படகு நிறுவனத்தின் பெயரே Riptide ..
அலைகளை கிழித்து கொண்டு செல்வது போல , கரடு முரடான சாலைகளில் செல்லும் பேருந்துகள் போன்ற பயணம். Bumpy ride . Safety belt மட்டுமே. [ துறையிலேயே விபத்து எதுவும் நடந்தால் எங்கள் மேல் வழக்கு தொடர கூடாது என ஒப்பந்தத்தில் ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி கொண்டார்கள். ] ஏதேனும் பிரச்சினை என்றால் Coast Guard படகுகள் வரும் என்றார்கள். Emergency Life Jackets படகின் முன்பகுதியில் உள்ளன. அவசர காலத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.(?!) ஏரியின் அகலம் கண்ணுக்கு தெரியாதது போல ஆழமும் தெரியாது. (சுமார் 800 மீட்டர்கள் என பின்னர் அறிந்தேன்.)

அவ்வப்போது படகினை 360 டிகிரி சுற்றுவார் ஓட்டுநர் பயணிகளை மகிழ்விக்க (?!) 

சரி ...Pictured rocks ஐ காணலாம் இப்போது.

வழியில் சுண்ணாம்பு கற்களால் ஆன குன்றுகள் (cliffs), தற்சமயம் உபயோகத்தில் இல்லாத கலங்கரை விளக்கங்கள் (Light houses), நீர்வீழ்ச்சிகள் , அடர்ந்த உயரமான மரங்கள் (Boreal forest species such as black spruce, white spruce, white cedar, and larch (tamarack). நிறைந்த தீவு Grand Island . 

பாறைகள் பல நிறங்களில் ஜொலித்தன. ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு தாது காரணம் . [The colors in the cliffs are created by the large amounts of minerals in the rock.]

மேற்சொன்னவைகளை காணவும் புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஏதுவாக படகினை அங்கங்கே நிறுத்தினார்கள். 

1.30 மணி நேர படகுப் பயணம் அது. கிளம்பிய 40 நிமிடங்களில் ஓரிடத்தில் நிறுத்தி யாருக்காவது தலை சுற்றுகிறதா, ரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறதா, தலை வலிக்கிறதா என்று படகோட்டி விசாரித்தார். சிலர் ஆமாம் என்று சொன்னதும் படகை கிளம்பிய இடத்திற்கே திருப்பி அவர்களை இறக்கி விட்ட பிறகு மீண்டும் தொடர்ந்தது பயணம், அச்சமயம் கிட்டத் தட்ட இரண்டு மணி நேர பயணமாக மாறி விட்டது.

எனக்கும் தலை கனக்கத் தொடங்கி இருந்தாலும் என் மகன் நான் பயணத்தைத் தொடர வேண்டும் என்று விரும்பினார்.

25 கிலோமீட்டர் தீவை சுற்றிச் சுற்றி சலிக்கச் சலிக்கப் உடம்பு வலிக்க படகுப் பயணம்.

படகுப் பயணம் இனிதே(?!) முடிவடைய அந்த ஊரின் மற்ற பகுதிகளை காண கிளம்பினோம்.

இப்பகுதியில் 21 நீர்வீழ்ச்சிகள் உள்ளன . [Most of the waterfalls in this area are the result of water running over a shelf or cliff of hard limey sandstone called the Au Train Formation. This geologic formation resists erosion better than the softer sandstone layers just below it. ]

நாங்கள் Munising waterfall , Miners falls ஆகியவைகளை மட்டும் கண்டோம்.  சிறிது தூரம் காரில்  பயணம் செய்து அடர்ந்து உயர்ந்த   மரங்களினிடையே சிறிது trekking செய்து இந்த நீர் வீழ்ச்சிகளை கண்டோம். இவற்றின் நீரானது Brown நிறத்தில் இருந்தது வித்தியாசமான காட்சி. மரங்களின் ஊடே வருவதால் மரப்பட்டைகளின் நிறத்துடன் காணப்படுவதாக குறிப்பு இருந்தது. மூலிகை நீர். 

Forest Ranger பெண்மணி  வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். Munising waterfall  மற்றும்  Miners fallsஐ அவர் Beauty and the Beast என்று குறிப்பிட்டார் . கடந்த வாரத்தில் 4 inches  மழை பெய்ததால் நீர்வீழ்ச்சிகளில் பனி உருகி வருவது போல நீர் கொட்டுகிறது அவசியம் கண்டு செல்லுங்கள் என்கிறார். 

Miners fallsல் திருமணம் செய்து கொள்ள ஒரு குழு சென்று கொண்டு இருந்தது. மணமக்கள், பாதிரியார் (நம் ஊர் போல ஆடை அணிந்திருக்க மாட்டார்கள். suit அணிந்திருப்பார்கள்.) Bridesmaids, Flower girls ,Best man என 10-12 பேர் மட்டுமே. [ரசனையான மனிதர்கள் :) ]

அடுத்து நாங்கள் சென்ற இடம் Pictured Rocks Sand Point Beach . Beach என்று ஏன் அழைக்கிறார்கள் என்று அங்கே சென்றதும் புரிந்தது. கடல் போல ஏறி உள்ளது என்று சொன்னேன் இல்லையா? அலைகளும் மணல் நிறைந்த கரையும் இல்லாமல் இருக்குமா ?
அங்கு ஏரியின் நீரை ருசித்துப் பார்த்தேன். அருமையான சுவையுடன் கூடிய நன்னீர். இயற்கையின் அற்புதப் படைப்பு.  நீர் மிதமான குளிர்ச்சியுடன் இருந்தது.  வருடத்திற்கு இரண்டு முறை ஏரியின் மொத்த நீரும் ஒரே வெப்பநிலையில் இருக்குமாம்.[Lake  Superior  is  generally considered as the largest freshwater lake in the world by surface area. It is the world's third-largest freshwater lake by volume and the largest by volume in North America. Twice per year, however, the water column reaches a uniform temperature of 39 °F (4 °C) from top to bottom, and the lake waters thoroughly mix.]

வாழ்நாளில் காண்பேன் என்று நினைத்தே பார்க்க இயலாத ஒரு அனுபவத்தை பெற்ற மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.

Superb Superior!






















WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...