நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறினேன்.
Saturday, 31 October 2020
முதல் வட அமெரிக்கப் பயணம் [பகுதி - 2]
முதல் வட அமெரிக்கப் பயணம் [பகுதி - 1]
என்
இனிய வாசகர்களே |
முதலில்
என் வெளிநாட்டு பயண மற்றும் காத்திருப்பு
நேர அனுபவங்களை எழுத ஆரம்பித்ததும்
இவ்வளவா? என நானே ஆச்சரியப்படும்
விதத்தில் நிறைய அனுபவங்கள் உள்ளன. எனவே பல பகுதிகளாகப்
பிரித்து பதிவிட எண்ணி உள்ளேன்
.
அந்தந்த
கண்டத்தில் /தேசத்தில் / ஊர்களில் பெற்ற அனுபவங்களை அவ்வப்போதே எழுதி வந்திருக்கிறேன்.
அவைகளுக்கான
links ஐயும் இந்த பதிவுகளில் தரத்
திட்டமிட்டுள்ளேன்.
என்
உள் நாட்டுப் பயண விவரங்கள் பற்றிய
பதிவை படித்த நண்பர்களின் கேள்வி: எப்படி எல்லா நிகழ்வுகளையும் தேதிகளையும் தவறாமல் எழுதி இருக்கிறீர்கள்? டைரியில் குறித்து வைத்துக் கொள்வீர்களா ?
என்
பதில்: இல்லை. அனுபவங்களை நான் மறப்பதில்லை. என்
நினைவிலிருந்தே எழுதுகிறேன். சந்தேகங்கள் தோன்றினால் என் கணவர் மற்றும்
பிள்ளைகளை கேட்டு உறுதி செய்து கொள்வேன். (ஓரிரு முறைகளே கேட்டிருக்கிறேன்.)
உங்களின்
ஆதரவிற்கு நன்றி.
இனி
கட்டுரைக்கு செல்வோம் .......
வெளிநாட்டுப்
பயணங்கள் பலவிதம் – 1 [பகுதி - 1]
Aug 25, 2010-Sep 22, 2010
CHENNAI – BRUSSELS- NEW YORK- SAN
FRANCISCO [Jet Airways – American Airlines]
முதல் வெளிநாட்டு பயணம். வழியனுப்பும் குழுவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மகன், என் நண்பர் மற்றும் சகோதரர் இடம் பெற்றிருந்தனர். என் கணவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே கிளம்பி சென்று விட்டார் தனியாக செல்வதால் துணை தேவை (Guidance needed) என்ற option கேட்டிருந்தோம். சென்னை விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அமர்த்தி தள்ளி சென்றார்கள். நடந்து வந்து guidance கொடுக்க மாட்டார்கள் போல ...எனக்கு தேவைப்படவில்லை.
(உடல்நிலை
சரியில்லாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கான சேவை அது.)
வழியனுப்பு
குழுவினர் சக்கர நாற்காலி தள்ளியவருக்கு 100 ரூபாய்களை கொடுத்து பார்த்து ஏற்றி விடுங்கள் (??) என்று சொல்லி சென்றார்கள். Immigration வரை ஒருவர் அதற்கு
பிறகு மற்றொருவர் என அழைத்து சென்று
Gate அருகில் விட்டு விட்டு காணாமல் போய் விட்டார்கள்.
அதிகாலை
1.30 க்கு சென்னையிலிருந்து மழைக்கு இடையில் கிளம்பியது. அழகான தமிழில் வரவேற்பு,பாதுகாப்பு விதிகள் என துவங்கியது பயணம்
. கிளம்பிய சிறிது நேரத்தில் சாப்பிட கொடுத்தார்கள். (உப்புமா என்று பின்னர் அறிந்து கொண்டேன்).
நான்
அலுவலகத்தில் உதவி மேலாளராகப் பணி
புரிந்து கொண்டிருந்த காலம். கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு
இடது கை சுட்டு விரலில்
நகசுற்று வந்திருந்தது. மருத்துவமனைக்கு செல்ல நேரமில்லை. வலியுடன் கிளம்பி விட்டேன். விமானம் கிளம்பியதும் நகசுற்று தன் வேலையை காட்ட
ஆரம்பித்தது. விடிய விடிய கடுமையான வலி...கையில் எந்த மருந்தும் இல்லை.
அரை
குறையாக தூங்கி, விடியற்காலை ஐந்து மணிக்கே விழித்துக் கொண்டேன். பல்துலக்கி (நீண்ட பயணங்களில் யாரும் பல் துலக்குவதே இல்லை
என பின்னாளில் அறிந்து கொண்டேன்.) காபி வாங்கி குடித்தேன்.
எட்டு
மணிக்கு அனைவரையும் எழுப்பி முகம் துடைக்க சூடான நாப்கின்(இடுக்கியால் எடுத்து) தந்து , ஜூஸ் மற்றும் உப்பு
நிலக்கடலை தந்தார்கள். (விமானத்தில் சுப்ரபாதம் எல்லாம் பாட மாட்டார்கள். எல்லா
விளக்குகளையும் போட்டு விடுவார்கள். வெள்ளை விளக்குகள் எரிந்தால் தூங்கியது போதும் எழுந்திருங்கள் சாப்பாடு கொடுக்க போகிறோம், நீலம் மற்றும் பிங்க் நிறத்தில் மங்கலான விளக்குகள் எரிந்தால் அனைவரும் தூங்குங்கள். மக்கள் விடிய விடிய இருக்கைக்கு முன்னால் இருக்கும் சிறிய டிவியில் - INFLIGHT
ENTERTAINMENT திரைப்படம்
பார்த்துக் கொண்டோ பாட்டு கேட்டு கொண்டோ வருவார்கள். வெளிச்சம் கண்ணை உறுத்தும். போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு தூங்க வேண்டியது தான். நீண்ட பயண நேரங்களில் socks, கண்ணை மூடிக்
கொள்ளும் திரை, காதுக்கு வைத்து கொள்ள அடைப்பான்கள் தருவார்கள்.) சற்று நேரத்தில் சுடச்சுட பொங்கல், வடை என காலை
உணவு தந்தார்கள்.
3,4,3 என இருக்கைகள்
நான் சென்ற விமானத்தில். சென்னையிலிருந்தே BOEING 747.
எனது
இடப்புற நான்கு இருக்கைகளில் ஒரு பிரஞ்சு குடும்பம்.
இந்தியாவிற்கு சுற்றி பார்க்க வந்துவிட்டு France திரும்பிக்கொண்டு இருந்தார்கள். 8 வயதில் ஒரு பெண் 4 வயதில்
ஒரு ஆண் என இரு
குழந்தைகள். குழந்தைகளின் தகப்பனார் தனக்கும் மற்றவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் வெள்ளெழுத்து கண்ணாடி
அணிந்து புத்தகம் படித்து கொண்டே வந்தார். தாயார் பிள்ளைகளின் சண்டைகளை பஞ்சாயத்து செய்வது, தூங்க வைப்பது, சாப்பிட வைப்பது என போராடி கொண்டே
வந்தார். இரவு தரையில் படுத்து
உறங்கினார். [பின்னாளில் ஒரு முறை என்
மகள் தன்னுடைய குட்டி பையனை அழைத்துக் கொண்டு இந்தியா வந்த போது பையன்
இவருடைய இருக்கையையும் ஆக்கிரமித்து கொண்டு இடம் தர மாட்டேன்
என்று அடம் பிடிக்க தான்
தரையில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறினார். இனி மேல் பயணம்
செய்யும் போது விமானத்தில் தரை
டிக்கெட் என ஒரு பிரிவு
இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் அம்மா.]
பொங்கலை
ஊட்ட ஆரம்பித்ததும் சிறுவன் எழுந்து ஓட ஆரம்பிக்க விமான
பணிப்பெண் துரத்த .....
200 gm alpenleibe மிட்டாய் பாக்கெட்டை லஞ்சமாக கொடுத்து பொங்கலை சாப்பிட வைத்தார். அவரது அக்கா தனக்கும் வேண்டும் என கேட்க தர
மாட்டேன் என்று இவர் சொல்ல அம்மா
சொம்பும் துண்டும் இல்லாத
நாட்டாமையானார். அதற்குள் நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.
குட்டி
பெண் பேசிக்கொண்டே வந்தார் என்னுடன். அன்புக்கு மொழி தேவையில்லையே.குட்டி பெண் French மொழியில் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்தார்.(அவரது தாயார் மொழி பெயர்த்து கொண்டே
வந்தார்) குட்டி பையன் என் மடியில் அமர்ந்து
ஜன்னல் வழியே அருகில் பறந்த JET விமானங்களை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தார். ஜன்னல் இருக்கைக்கான சண்டை வேறு நடந்தது.
Brussels விமான நிலையத்தின்
அருகிலேயே மற்றொரு JET விமான தளம் உள்ளது பக்கத்தில்
டவுன் பஸ் போல விமானங்கள்
பறந்து சென்றன. (பின்னாளில் ஐரோப்பிய பயணத்தில் இந்த ஊரை சுற்றி
பார்க்க நேர்ந்தது, அதுவும் குறிப்பாக 2016ல்
அங்கே நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வுக்கான எதிர்ப்பு தினத்தன்று)
அங்கே
விமானத்தை நிலையத்திற்கு வெகு தொலைவில் தள்ளி
நிறுத்தி எரிபொருள் நிரப்பினார்கள். தண்ணீர் tanker போல பெரிய டேங்கரிலிருந்து
மிகப்பெரிய குழாயின் மூலம் எரிபொருளை நிரப்பினார்கள். விமானத்திலிருந்து
இறங்கி பேருந்தில் டெர்மினல் செல்லும் வரையில் அருகில் ஏறி இறங்கிய ஜெட்
விமானங்களில் புகையின் டிசைன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். (எப்பவும் பராக்கு பார்ப்பதே உன் வேலை _ என்
குடும்பம்)
இந்தியாவின்
பல்வேறு நகரங்களிலிருந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் ப்ரஸ்ஸல்
வரும் பயணிகளை இறங்க சொல்லி, யார் எந்த ஊருக்கு
செல்கிறார்களோ அவர்களை சீட்டு குலுக்குவது போல தனி தனி
குழுக்களாக்கி மீண்டும் பயணத்தை தொடர வைப்பார்கள்.
இடைப்பட்ட
நேரத்தில் மீண்டும் செக்யூரிட்டி பரிசோதனை. அதற்கென தனி அறை கிடையாது. வரிசையில்
செல்ல செல்ல சோதனை. எனக்கு முன்னால் நம் ஊர் பெண்மணி
ஒருவர் ஜரிகை பார்டர் வைத்த புடவை ரவிக்கை அணிந்து வந்திருந்தார்.
Security officer ஆகிருதியான பெண். மெட்டல் டிடெக்டர் கத்தியது. (தங்க நகைகள் அணிந்திருந்தால்
இந்தியா தவிர மற்ற நாடுகளில் சத்தம் கொடுக்கும்.)
S.O: Remove your blouse.
நம்
பெண்மணி: why?
S.O: Metal detector beeps, it is
gold
நம்
பெண்மணி: No gold, it
is matching blouse
S.O: No no, gold remove
நம்
பெண்மணி: (புடவை பார்டரையும் ரவிக்கை பார்டரையும் காண்பித்து) No no matching
matching saree blouse
பெரும்
போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக அந்த
பெண்மணியை உள்ளே விட்டார்கள்.
(Security checking சமயத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அனுபவம் எனக்கு. அதற்கு தனிப் பதிவே போடுகிறேன்.)
ப்ரஸ்ஸஸ்
விமான நிலையத்தில் உடன் பயணித்த சென்னை
தம்பதியினருடன் நட்பானேன். அவர்கள் நியூயார்க் சென்று கொலம்பஸ் என்ற ஊருக்கு செல்ல
வேண்டியவர்கள். பேசிக்கொண்டே வந்ததில் சரத்குமார் படம் போல, எங்கள்
சென்னை வீட்டிற்கு மிக அருகாமையில் வசிப்பவர்கள்
என்பது தெரிந்தது. அவரது பெயர் திருமதி ராதா. இன்றளவும் அவரது முகவரி என்னிடம் உள்ளது. ஏனோ தொடர்பு கொள்ளவில்லை.
நியூயார்க்
செல்லும் விமானத்தில் ஏறினேன்.
(அனுபவங்கள்
தொடரும் .....)
Sunday, 16 August 2020
உள் நாட்டு விமானப் பயண அனுபவங்கள்...[சென்னை முதல் இமயம் முடிய]
ஜனவரி 1, 2006
[புதுடில்லி
- ஹைதராபாத் – சென்னை]
குர்காவ்னில்
பேஷன் டிசைனர் ஆக வேலை பார்த்துக்
கொண்டிருந்த மகளைக் காண கணவர் மகனுடன்
சென்ற பயணம் அது .போகும்போது ரயில்
வரும் போது விமானம். (Spice jet) முதல் விமானப் பயணம் கூட.
மாலை
6.30 மணிக்கு விமானம் கிளம்பும் நேரம்
அங்கு
கடும் பனி மூட்டம்.விமானி 50 மீட்டருக்கும்
குறைவான visibility தான் இருக்கிறது, இறங்கி
வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.
இறங்கி
டெர்மினல் உள்ளே செல்வதற்குள் குளிரில் விறைத்து போனோம். சென்னைக்கு தானே செல்லப்போகிறோம் என்று
ஒரே ஒரு ஸ்வெட்டர் தவிர
மீதியை மகளிடமே கொடுத்து விட்டோம்.
அதற்கிடையில்
என் கணவர் டிக்கெட்டுகளை 3 ஆம் தேதிக்கு மாற்றி
வாங்கி வந்தார். [ குளிரில் நடுங்கி கொண்டு எதிரில் யார் வருகிறார்கள் என்றே
தெரியாத நிலையில் நான் டிக்கெட்டை மாற்றிக்
கொண்டு
வந்தேனே அது பற்றி எழுதவே
இல்லை என்று கோவித்துக் கொள்ளக் கூடாது இல்லையா என் கணவர்?]
அந்த
பகுதியில் அந்த நேரத்தில் பயணித்துக்
கொண்டிருந்த என் மகளின் வகுப்பு
தோழர் எங்களை அழைத்துச் சென்றார். வெடவெடப்பு
அடங்க 2 மணி நேரங்கள் ஆனது.
3 ஆம்
தேதி விமானப் பயணத்தைப் பற்றி சொல்லவே இல்லையே .... ஹைராபாத் வரை சுகமான நிம்மதியான பயணம்.
அங்கிருந்து கிளம்பும் சமயம் பாதுகாப்பு விதிகள் பற்றி விளக்கும் போது உங்கள் இருக்கையில்
இருக்கும் cushion ஐயே floatation ஆக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
வங்காள
விரிகுடா கடல் மேலே பறக்கும்
போது பிரச்சினை வந்தால் cushion ஐ கட்டிகொண்டு கடலில்
குதியுங்கள் என்பதே அதன் பொருள் . கேட்டதும்
ஒரே படபடப்பு எனக்கு. எங்கே எப்படி அந்த cushion ஐ எடுக்க வேண்டும் என்று
என் மகனைக் கேட்டால் யாருக்கு தெரியும் என்று பதில் வந்தது. பயந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தோம்.
பிப்ரவரி, 2008
[பூனே
– சென்னை]
அலுவல்
நிமித்தம் பூனேவிற்கு சில நாட்களுக்கு செல்ல
வேண்டி இருந்தது. (தனியாக). திரும்பி வரும் நாளில் சகோதரிக்கு பூனே அலுவலகத்தில் [நாங்களிருவரும் ஒரே அலுவலகத்தில் இருந்தோம்] வேலை
இருந்ததால் வழக்கமாக வரும் டாக்ஸி ஓட்டுநர் வந்து உன்னை அழைத்து செல்வார் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். மதியம் 1.30 விமானம்
கிளம்பும் நேரம். 12 மணி . ஓட்டுநர் வரவேயில்லை
. வழக்கமான ஓட்டுநர்
வராமல் அவரது மகனை (20 + வயதுகள்)
அனுப்பி இருந்தார். மகன் நான் receptionல்
பெட்டியுடன் காத்திருந்ததை கவனிக்காமல், reception பகுதியில் கேட்காமல் .மாடியில் நான் தங்கி இருந்த
அறைக்கு சென்று தேடி விட்டு காணவில்லை
என்று receptionல் சொல்ல ...அவர்கள் என்னை
அடையாளம் காட்ட ...
12.15 pm
காரில்
ஏறி புறப்பட்டோம். அவருக்கு ஏர்போர்ட்
போக வழியே தெரியவில்லை . 10 அடிக்கு ஒரு முறை நிறுத்தி
"ஏரோடோ" எப்படி செல்வது என்று மராத்தியில் கேட்டார். மேடு, பள்ளம், சாக்கடைகள், குடிசைகள்
என அமைந்திருந்த குறுகலான பகுதிக்குள்ளெல்லாம் புகுந்து பூனே நகரை சுற்றி காண்பித்தார். நான் ஆங்கிலத்தில் அலற
அவர் மராத்தியில் பேச.... உதவிக்கு சகோதரியை தொலைபேசியில் கூப்பிட்டேன். அதுவும் வேலைக்கே ஆகவில்லை . மீண்டும் ஏரோடோ ஏரோடோ
மட்டுமே ..வாக்கியமாக கூட கேட்கவில்லை. அவரின்
நடவடிக்கைகளை கண்டு எனக்கு விமானத்தை பிடிக்க முடியுமா என்ற கவலையை மீறி
சிரிப்பை அடக்க முடியவில்லை.
12.45 pm
ஒரு
வழியாக ஆங்கிலத்திற்கு மாறி "airport" என்று கேட்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில்
அகலமான சாலைப்பகுதிக்கு வந்திருந்தார். சாலைகளில் பலகைகளில் ஆங்காங்கே ஏர்போர்ட் போகும் வழி என்று
எழுதி அம்புக் குறி இருக்கே
அதை பார்த்து ஓட்டுங்கள் என்று நான் சொல்ல... அவருக்கு
புரிந்தால் தானே ? மீண்டும் airport விசாரணை...
பொறுமை மீறி go straight என்று நான் வழி காட்ட
ஆரம்பித்தேன்.
1.15. pm
விமான
நிலையத்திற்கு மிக அருகில் ஒரு
திருப்பம் . இடது புறத்தில் மிலிட்டரி
பகுதி வலது புறத்தில் விமான
நிலையம் . நம்மவருக்கு இடதா
வலதா என்று பலத்த சந்தேகம். நன்கு யோசித்து இடது புறம் திரும்ப
ஆரம்பிக்க நான் right right என்று அலற....
1.20 pm
விமான
நிலையம் .
பூனே
விமான நிலையம் மிக சிறியது. Terminal என்பது சிறிய
hall தான். கதவை தாண்டியவுடன் 100 மீட்டர்
நடந்தால் விமானம் நின்று கொண்டிருக்கும்.
கடைசியாக,
தாமதமாக, ஓட்டமாக ஓடி வேறு சென்றதால்
கடுமையான security
check. வெளியில் விடவே இல்லை. விட்டதும் ஓட்டமாக விமானத்தை நோக்கி ஓடி படிக்கட்டுகளில் ஏறினேன்.
Mofussil பஸ் நிலையங்களில்
கண்டக்டர் பின் கதவிலிருந்து எட்டி
பார்த்து பயணிகள் ஏறியதும் ரை...
ரை ....என்று கூவுவதற்காக காத்திருப்பது போல air hostess எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஏறி விமானத்தின்
கதவுக்கு அருகில் கடைசி இருக்கையில் (அது ஒன்று தான்
காலி ) சரியாக கூட அமரவில்லை ... ரை... ரை... இல்லாமலே
விமானம் கிளம்பி விட்டது .
டிசம்பர்
2015 / ஜனவரி 2016
[சென்னை
- மும்பை -மஹாபலேஷ்வர்]
ஜனவரி
1 ஆம் தேதி காலை மும்பையில் விமானம் ஏறினோம்
. 1.50 மணி நேர பயணம் . மார்கழி மாதம் . சென்னையில் கடும் பனிமூட்டம் . திருப்பதி அருகே
இருந்தபோது காலை 9 மணி ஆகியும் சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை
என்று கூறப்பட்டது.
விமானம்
திருப்பதி விமான நிலையத்தின் மேலே சுற்றி சுற்றி சுற்றி (3 முறை) ஒரு மணி நேரம் பறந்து
கொண்டே இருந்தது.
எப்போது
தரையிறங்குவோம், விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விடாதா இப்படி பல யோசனைகள்.
இருக்கைக்கு
முன்பாக இருந்த டிவியில் ஒரு திரைப்படம் பார்த்து
முடித்த சமயம் சென்னையில் தரையிறங்கினோம்
.
நவம்பர், 2017
[சிம்லா,
குலு, மணாலி]
டெல்லி
வரை விமானம் அங்கிருந்து innova காரில் மற்ற இடங்களுக்கு பயணம்.
விமானத்தில்
ஏறியதும் விமானத்தின் உட்புறம் வித்தியாசமாக காட்சியளித்தது . சிகாகோ O 'Hare விமான நிலையத்திலிருந்து சென்னை வரும் விமானம் அது.புத்தம் புதிய
விமானம் . ஜன்னலின் வடிவமைப்பு, இருக்கைகள், உள்ளமைப்பு எல்லாமே வித்தியாசம். இருக்கையில் அமர்ந்ததும் அங்கே இருந்த விமானம் பற்றிய குறிப்புகள் இருந்த அட்டையை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். காரணம்
நான் பயணம் செய்ய மிகவும் விரும்பிய Boeing 787-8 மாடல் விமானம் அது. ஜன்னலில் ஒரு
பட்டனை அழுத்தினால் எவ்வளவு tint வேண்டுமோ அந்தளவுக்கு மாறும்.
[Boeing நிறுவனத்தின் விமானங்கள்
Boeing 737, Boeing 747, Boeing 777.... என
ஒவ்வொரு model க்கும் ஒவ்வொரு எண்ணைக்
கொண்டிருக்கும் . ஏர்பஸ் நிறுவனத்தின்
விமானங்கள் A 318, A
320 , A 321 , A 380 என்பது
போல இருக்கும்.
Boeing 787 என்பது latest model விமானம். "Dreamliner"
என்பது அதன் செல்லப் பெயர்.
ஆரம்பத்தில் இந்த model விமானத்தில் மின்சாரக் கோளாறுகள் ஏற்பட்டமையால் சில காலம் பறக்காமல்
நிறுத்தி வைக்கப் பட்டு, அந்த பிரச்சினை சரி
செய்யப்பட்ட பிறகு
மீண்டும் வானில் பறக்க விடப்பட்டது.
Boeing 747 மற்றும் A380 ஆகியவை double decker வகைகள் .
Boeing 747க்கு நான்கு
என்ஜின்கள், Boeing 777க்கு இரண்டு என்ஜின்கள்.
இந்த வகை விமானத்தில் விபத்துக்கள்
மிகக் குறைவு.
விமானங்கள்
, விமான விபத்துக்கள் பற்றிய தகவல்கள் படிப்பது , பார்ப்பது என் மகனிடமிருந்து கற்றுக்
கொண்ட பொழுது போக்கு. விமானப் பயணத்திற்கு சில நாட்கள் முன்பு
இந்த பொழுது போக்கை தற்காலிகமாக நிறுத்தி விடுவோம்.
டிசம்பர்
25-27, 2017
[சென்னை
– கோவை]
[அச்சமயத்தில்
கோயம்பேடு - ஆலந்தூர் , ஆலந்தூர் - விமான நிலையம் என இரண்டு ரயில்களில் பயணிக்க வேண்டும்.
ஆலந்தூரில் இறங்கி இரண்டு தளங்கள் மேலேறி ...விமான நிலையம் வந்தடைந்தோம்.
விமான
நிலையத்தில் escalator, travelator , lift , connecting bridge எதுவுமே இல்லை. படிக்கட்டுகளில்
பெட்டியை சுமந்து கொண்டு இறங்கி உள்நாட்டு விமான நிலையம் சென்றோம்.]
அடுத்த
நாளே மீண்டும் கோவை - சென்னை வந்து சேர்ந்தோம்.
மார்ச்/ ஏப்ரல், 2018
[சென்னை
- டில்லி- ஸ்ரீநகர்]
ஜம்மு
காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் / பஹல்காம் / குல்மார்க் பயணம். Air India விமானப் பயணம் .
அங்கே
நாங்கள் தங்கியிருந்த 4 நாட்களில் ஒருநாள் குல்மார்க், மீதி நாட்கள் ஸ்ரீநகர்
என்றே சுற்றி பார்க்க முடிந்தது. பகல்காமில் துப்பாக்கி சூடு, குல்மார்க் ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு 3 நாட்களுக்கு. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் ஊரை சுற்றி பார்த்தோம்.
ஊருக்குள்
எங்கெங்கும் CRPF வீரர்கள், காஷ்மீர் மாநில காவலர்கள் துப்பாக்கி இந்திய வண்ணம் நின்று கொண்டு இருந்தார்கள்.(100 அடிக்கு ஒருவர் )
விமானம்
மேலேறியதும் தெரிந்த பனிமலைகள் இயற்கையின் அற்புதம். எங்கே ஆரம்பம் எங்கே முடிவு என்று தெரியாத மலைத்தொடர்கள்.]
உள்நாட்டு
பயணங்கள் ஒரு வகை என்றால் வெளி நாட்டு பயணங்கள் வேறு வகை.
ஒவ்வொன்றும்
ஒருவிதம்...
பின்
குறிப்பு : மேற்கூறிய அனைத்து பயணங்கள் பற்றிய பதிவுகளும் என் facebook timeline மற்றும்
manjooz .blogspot .com ல் உள்ளன .





