Saturday, 31 October 2020

முதல் வட அமெரிக்கப் பயணம் [பகுதி - 2]

 நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறினேன்.

Brussels to New york சென்ற விமானத்தில் ALL Ladies Crew.
கேப்டன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேசும் போது நியூயார்க் இங்கிருந்து 5500 km. விமானத்தில் எரிபொருள் நிரம்பி உள்ளது. நியூயார்க் நகரை அடைவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக turbulence எதிர்பார்க்கப் படுகிறது. வழக்கம் போல குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த நகரத்தை சென்றடைந்து விடுவோம்,ஆனால் தரையிறங்க சிறிது நேரம் காத்திருக்க நேரலாம், காரணம் நியூயார்க் நகர விமான நிலையம் நொடிக்கு ஒரு விமானம் ஏறி இறங்கும் பிஸியான நிலையம் என்பது நீங்கள் அறிந்ததே என்று கூறினார்.
ப்ரஸ்ஸஸ் நகரில் ஏறிய பயணிகள் வெள்ளை நிறத்தில் நீண்ட அங்கி அணிந்து தலையில் குல்லாய் அணிந்து வித்தியாசமான தலையலங்காரத்தில் காதருகே குழல் குழலாய் முடி தொங்கி கொண்டிருக்க சிறுவர் முதல் பெரியவர்கள் வரை (ஆண்கள்) என.வித்தியாசமான உடை மற்றும் தலை அலங்காரத்தில் இருந்தார்கள். அவர்கள் யார் எந்த ஊரை /நாட்டை சேர்ந்தவர்கள் என்று இன்றளவும் தெரியவில்லை.( யாரோ அவர் யாரோ என்ன ஊரோ?) பின்னாளில் ப்ரஸ்ஸஸ் நகருக்குள் நடந்து சென்று சுற்றி பார்த்த போதும் அது போன்ற உடையில், தோற்றத்தில் யாரையும் காண இயலவில்லை.
Jet airways விமானத்தில் பயணம் என்பதால் பொங்கல் உப்புமா இட்லி சாதம் சாம்பார் சீடை தட்டை பாயசம் என அருமையான உணவுகள். விமானத்தின் பறப்பது போன்ற உணர்வே இல்லை. என்ஜினின் சீரான ஓசை கூட மிக லேசாக தான் கேட்டது.
மொத்த பயண நேரத்தில் இரண்டு முறைகளே எழுந்து restroom சென்றார். தூங்கி கொண்டே வந்தார். Red wine வாங்கி ஒரு sip குடித்து விட்டு திருப்பி கொடுத்து விட்டார். நியூயார்க் வந்ததும் தலைசீவி (free hair தான்) லிப்ஸ்டிக் பூசி கொண்டு இறங்கி சென்று விட்டார் கையில் ஒரு handbag மட்டுமே.
நான் aisle எனப்படும் ஓர இருக்கையில், நடு இருக்கை காலி, ஜன்னல் இருக்கையில் ஒரு இளம் பெண் சென்னை - நியூயார்க் உடன் பயணித்தார். பொதுவாக இடையில் மாறி வேறு விமானத்தில் ஏறும் போது ஆட்களும் இருக்கைகளும் மாறும். இப்போது நினைத்து பார்க்கையில் அதே பெண்ணே எப்படி பக்கத்தில் வந்தார் என்பது வியப்பாக உள்ளது. அந்த பெண் படித்துக் கொண்டு அல்லது வேலைக்கு செல்பவர் போன்ற தோற்றத்தில் இருந்தார். நியூயார்க் விமான நிலையம்…
முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் மருமகன், “அம்மா காபி வேண்டும் என்றால் starbucks என்ற பெயரில் ஒரு கடை நியூயார்க் விமான நிலையத்தில் இருக்கும் வாங்கி குடியுங்கள்” என்று சொல்லி இருந்தார்.
சில மாதங்கள் முன்பே அமெரிக்கா கிளம்பிச் சென்ற என் கணவர் அனுப்பி இருந்த புகைப்படங்கள், தகவல்கள் மற்றும் உடன் பயணித்த நண்பர்களின் உதவியுடன் 23 kg அளவுள்ள இரண்டு பெட்டிகள் மற்றும் 7 kg அளவுள்ள கைப்பெட்டியை கைப்பற்றி (விமானத்திலிருந்து தான்), immigration counter ல் விசா அனுமதி பெற்று ஒரு வழியாக Gate 48 என்று அச்சிட்ட போர்டிங் பாசை வாங்கி கொண்டு அங்கு போய் சேர்ந்தேன். [Airlines மாறும் போது பெட்டிகளை வாங்கி மீண்டும் Check-in செய்ய வேண்டும்.]
அருகில் சர்க்கரை பொட்டலங்கள் மற்றும் ஒரு பெரிய்ய்ய flask ல் குளிர்ந்த பால் வைத்திருந்தார்கள். (cream என்று சொல்கிறார்கள் காய்ச்சாத பாலை) என் காப்பியில் 1/4 டம்ளர் அளவுக்கு வாஷ்பேசினில் கொட்டி விட்டு அந்த பாலை ஊற்றி சர்க்கரையை கொட்டி கலந்தேன். உவ்வே ... எவ்வளவு சர்க்கரை போட்டாலும் காய்ச்சாத பாலை விட்டதால் காபி கழுநீர் போலவே இருந்தது. கடைசியாக மிகவும் யோசித்து வாஷ்பேசினில் கொட்டி விட்டு கடையை விட்டு வெளியில் வந்தேன். $2.67 போச்சு... (leave some space for cream என்று சொல்லு _ நியூயார்க் சகோதரர்)
காத்திருப்பு நேரத்தில் அந்தப் பெயரில் உள்ள கடைக்கு சென்று நீ...ண்ட வரிசையில் காத்திருந்து அவர்களின் கேள்விகளுக்கு புரிந்தவரை பதிலளித்து, பெரிய்ய்ய கப்பில் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்ட சுடுநீரை (காப்பி தான்) கையில் வாங்கியதும் அதை எப்படி குடிப்பது என்றே தெரியவில்லை. [வெளி நாடுகளில் காபி என்று ஆரம்பித்தால் small, medium, large என்று கப்பின் அளவில் ஆரம்பித்து cappuccino, americano, espresso 2:1 ,1:1, double hot என விதம் விதமான தகவல்களில் நமக்கு தேவையானவற்றை கூறினால் நாம் எதிர்பார்க்கும் விதத்தில் காபி கிடைக்க மிக சுமாரான வாய்ப்பு உண்டு, அமிஞ்சிக்கரையையே தாண்டி இராத எனக்கு அதெல்லாம் எப்படி தெரியும்? காப்பி என்றால் நம் ஊரைப்போல தருவார்கள் என்று நினைத்திருந்தேன்.] ஐரோப்பா ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு சென்ற போது உடன் வந்த அன்பர்கள் madam இந்த மெஷினிலிருந்து எப்படி காப்பி குடிப்பது என்று கேட்ட அவர்களுக்கு என்ன combinationல் button களை அழுத்த வேண்டும் என்று சொல்லி தரும் அளவுக்கு தேறி விட்டேன்.
அந்த இடத்தில் இருந்த விவர பலகை Spain என காண்பித்தது. இன்னும் நான் செல்ல வேண்டிய விமானம் வரவில்லை போல என்று எண்ணியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நாடு மதம் இனம் மொழி கடந்து எங்கெங்கும் சிறுவர் சிறுமியர் சாப்பிட பெற்றோரை படுத்தி எடுக்கிறார்கள் என புரிந்து கொண்டேன். maa airfe... என கூறிக்கொண்டே சிறுவன் ஓட தாயார் துரத்தி துரத்தி சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தார். இது போல பல நிகழ்வுகள்.
[டீயில் black pearl டீ என்று ஒரு வகை. ஆறிப்போன டீயில் கருப்பு நிற சாயத்தில் தோய்த்த ஜவ்வரிசியை போட்டு ஐஸ் கட்டிகளை மிதக்க விட்டு தருவார்கள். உவ்வே...($4.50 போச்சே). Hot Chocolate குடிக்க நன்றாக இருக்கும். சூடான பாலில் சாக்லேட் கலந்து, நம்ம ஊர் பூஸ்ட், போர்ன்விட்டா போல இருக்கும். சூடாகவும் இருக்கும்.] பல trial and errorகளுக்கு பிறகு தற்சமயம் வெளிநாட்டு பயண சமயங்களில் நான் குடிப்பது espresso latte. நம் ஊர் நாயர் கடை போல ஒரு பாத்திரத்தில் பால் காய்ந்து கொண்டே இருக்கும். அது தான் latte. சிலருக்கு மேலே பொங்கி வரும் நுரையை போட்டு தருவார்கள். சிலருக்கு பால் மட்டும். சிலருக்கு இரண்டும் கலந்து. 2:1 என்பது 2 அளவு decoction ஒரு அளவு பால், அவரவரின் விருப்பத்திற்கு தக்கபடி. இது போல பலப்பல செய்திகள் காப்பியை பற்றி மட்டும் சொல்லி கொண்டு போகலாம். நியூயார்க்கில் என்னுடன் பயணித்த தம்பதியினரை அவர்கள் கேட் அருகே (கொலம்பஸ் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள்) விட்டு விட்டு என் boarding passல் இருந்த Gate 48 ல் வந்து காத்திருந்தேன்.
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தாற்போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு (3.30 மணி நேரங்கள் lay over) விமானத்தை பிடிக்க தவறினேன். சென்னைக்கு பிறகு எங்கும் Guidance needed என்ற சேவையை நான் பயன்படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் நியூயார்க்கில் விமானத்தை தவற விட்டிருக்க மாட்டேன்.
சென்னை நகரை சேர்ந்த எனக்கு விமான நிலைய அறிவிப்பு பலகையில் அதிகபட்சம் 10 விமானங்கள் பற்றிய தகவல்களே இருக்கும். வெளிநாடுகளில் கோயம்பேடு பேருந்து நிலையம் போல ஒவ்வொரு நொடியும் ஒரு விமானம் ஏறும் இறங்கும் அது பற்றிய தகவல்கள் பலகையில் மாறிக் கொண்டே இருக்கும் (பொடி எழுத்துக்களில்) எந்த gate காலியாக இருக்கிறதோ அங்கே விமானம் வந்து நிற்கும். மிகுந்த கவனமாக இருந்தால் மட்டுமே நம்முடைய விமானத்தை பிடிக்க முடியும். சில சமயங்களில் வேறு டெர்மினல் கூட கடைசி நேரத்தில் செல்ல (ஓட..) வேண்டி இருக்கும்.[ஓடுதல்... என்பது விமான நிலைய ரயிலில்(சிங்கப்பூர்), பேருந்தில்(சிங்கப்பூர், ப்ரஸ்ஸஸ்), underground ரயிலில்(லண்டன்), கால் நடையாக நடந்து (travelator), Guidance needed சேவையை கேட்டிருந்தால் சக்கர நாற்காலியில் அல்லது நிஜமாகவே ஓடுதல்...] சாம்பார் பொடி கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறத்தில் எந்த பொடியும் கொண்டு செல்ல கூடாது என்பது போன்ற தகவல்களை தந்தவர்கள் மேற்கண்ட தகவலை பற்றி சொல்லவில்லை. (உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன் என் பாஸ்போர்ட்டை பாருங்கள் என்று பெருமை பட்டுக் கொண்டவர்கள் உட்பட ) [என் சகோதரி muscat ல் பல வருடங்கள் வசித்தவர். அவரிடம் பயண tips கேட்ட பொழுது தன்னுடைய முதல் வெளி நாட்டு பயணம் பற்றி கூறினார் . திருமணமாகி 15 நாட்கள் இருந்து விட்டு அவரது கணவர் Muscat சென்று விட்டார். ஒரு வருடம் கழித்தே இவர் சென்றார். அந்நாட்களில் passport பெறவே 6-8 மாதங்கள் ஆகும்.
விமானத்தில் ஏறியதும் technical snag என்றார்கள். உள்ளே சிறிது நேரம் காத்திருந்தபோது, தூக்கம் கண்ணை அழுத்திய நேரம் கீழே இறங்க சொன்னார்கள். மீண்டும் Boarding pass வாங்க சொன்னார்கள். ழ ழ ழ ...என்று அறிவிப்பு… எதுவும் புரியவில்லை. அருகிலிருந்த ஒரு ஆசிய பெண்ணிடம் என்னவென்று கேட்டு புரிந்து கொண்டு மீண்டும் Boarding pass வாங்கி, வெளியே சிறிது நேரம் காத்திருந்து பின் கிளம்பினோம்.
முதல் பயணம் தனியாக. அங்கே சென்றிறங்கியதும் அழைத்து செல்ல வருகிறேன் என்று சொன்ன கணவர் வரவில்லையாம். 15 நாட்களே பார்த்திருக்கிறார் முகமும் சரியாக நினைவில்லையாம் கையில் பணமும் இல்லை மொழியும் தெரியாது, அவருக்கும் தன்னை அடையாளம் தெரியவில்லையோ என்ற எண்ணம் வேறு. நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு அருகிலிருந்த ஒருவரின் உதவியுடன் கணவருக்கு தொலைபேசிய போது, வந்து கொண்டே இருக்கிறேன் என்று கூறினாராம். ... நீ படித்தவள் விவரமானவள் உனக்கு டிப்ஸ் தேவையே இல்லை என்று கூறி விட்டார்] 6.00 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 5.50 ஆகியும் விமானம் வரவில்லையே என்ற சந்தேகத்தில்(?!) அங்கிருந்த ஊழியரிடம் கேட்க அவர் கையால் விமானம் கிளம்பி விட்டது என்று சைகை காட்டினார். என்னை மிகத் தெளிவாக பட்டிக்காட்டு முட்டாள் என்பதை புரிந்து கொண்டு விட்டார் போல எனக்கு ஆங்கிலம் புரியாது என்று நினைத்து சைகையில் பேசினாரா?? அந்த இக்கட்டான நொடியிலும் சிரிப்பு தான் வந்தது எனக்கு. உடனே Jet Airways counter க்கு சென்று உதவி கேட்டேன். அங்கிருந்த இந்திய ஊழியர் உதவினார். ஆனால் விமானம் கேட் 40லிருந்து புறப்பட்டு விட்டது. கடைசி நொடியில் ஓடி ...(இது பற்றி தனி பதிவு உள்ளது) மறுநாள் காலை விமானத்தில் சான்பிரான்ஸிஸ்கோ....... American Airlines .... இம்முறை நியூயார்க் சகோதரர் செக்யூரிட்டி செக் வரை கொண்டு வந்து விட்டு விட்டு நான் சரியான Gate ற்கு செல்கிறேனா என்று கண்காணித்து விட்டு சென்றார். Gate 3 கண்ணெட்டும் தொலைவில் இருந்தது. (அமெரிக்காவில் செக் இன் செய்யும் இடம் வரை நம்மை வழியனுப்ப வருபவர்களும் உடன் வரலாம். எங்கக்கா இவங்க.. நேத்து flight miss பண்ணிட்டாங்க , இன்னிக்கு காலைல தான் போகப் போறாங்க…) .... நியூயார்க் நகர விமான நிலையம் கடலை ஒட்டி அமைந்திருப்பதால் runway ஊருக்கு நடுவே செல்கிறது. விமானம் பாலத்தின் மேலே செல்ல, கீழே மற்ற வாகனங்கள் சென்று கொண்டிருந்தது வித்தியாசமான காட்சி.
https://manjooz.blogspot.com/2020/06/2010.html
விமானத்தின் இறக்கையின் அருகில் என் இருக்கை. தட தட வென சத்தம். எனக்கு அதுவரை பயமே தெரியவில்லை. என்ஜின் சத்தம் விதவிதமாக கேட்கவும் மிகவும் பயமாக இருந்தது. விமான பணிப்பெண் “வாட வாட “என உரக்க கூவிக்கொண்டே நடந்து வந்தார். என்னவாக இருக்கும் என்று எட்டி பார்த்தேன். கல்யாண வீடுகளில் கல்கண்டு தட்டு ஏந்தி வருவது போல தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்தார். வேண்டியவர்கள் எடுத்து கொள்ள வேண்டும்.] உள்நாட்டு விமானங்கள் கிராமப்புறத்து town bus போல. யார் முன்னால் செல்வது என பறந்து பறந்து 5 மணி நேர பயணம் 4.30 மணி நேரங்களில் முடிந்து மதியம் 2 மணியளவில் சான்பிரான்ஸஸிஸ்கோ சென்று சேர்ந்தேன் . மேற்கு நோக்கிய பயணம் என்பதால், அதுவும் 12.30 மணி நேர கால வித்தியாசம் உள்ள ஊருக்கு செல்வதால் உறக்கம் கெட்டு மொத்த பயணமும் மப்பும் மந்தாரமுமாகவே இருந்தது. சாதாரணமாக 24 மணி நேரங்களில் சென்று சேர வேண்டிய பயணத்தை 45 மணி நேரங்களில் சென்று சேர்த்தேன் . பசி. விமான நிலையத்திற்கு தக்காளி சத்தம் பீட்ரூட் பொரியல் செய்து கொண்டு வந்திருந்தார் என் மகள்.அங்கேயே உண்டு விட்டு வீடு சென்றோம். (வாழ்க வளமுடன்) முதல் நாளே சென்று சேர்ந்து விட்ட என் பெட்டிகளை தேடி எடுத்துக் கொண்டு வீடு சேர்ந்தோம். Foster City என்னும் அழகிய சிறிய ஊரில் மகளின் குடும்பம் அப்போது வசித்து வந்தது. ஊரின் நடுவே Bay நீர் ஆறு போல வாய்க்கால் வழியாக திருப்பி விடப்பட்டு அதன் இரண்டு பக்கமும் வீடுகளும் பூங்காக்களுமாய் கொள்ளை அழகுடன் இருக்கும். இலையுதிர் காலத்தில் சென்றதால் இலேசான குளிர். 22 நாட்களே இருந்த அந்த பயணத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி, லாஸ் ஏஞ்சல்ஸ் , சான் டியாகோ மற்றும் சான் பிரான்ஸஸிஸ்கோ நகர் என சுற்றி பார்த்தோம். அந்த பயணத்தில் நான் கண்ட இடங்கள் பற்றிய பதிவுகளுக்கான links ஐயும் இங்கே பதிவிட்டுள்ளேன்.
https://manjooz.blogspot.com/2014/09/the-terminal.html
https://manjooz.blogspot.com/2014/10/zxing-thing.html
https://manjooz.blogspot.com/2014/09/blog-post_6.html
(To view: Keep the cursor on the link, PRESS CTRL button, and click on the links)
(அனுபவங்கள் தொடரும்...)










No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...