Friday, 7 May 2021

வசந்த காலக் கோலங்கள் .....


அமெரிக்க தொழிலாளர் தின விடுமுறை வார இறுதியை ஒட்டி நண்பர் குடும்பத்தினருடன் 3 நாட்கள் வெளியூர் பயணம் .
வடக்கு கலிபோர்னியாவின் அரவமற்ற Lost Coast எனப்படும் கடற்கரைப் பகுதியில் பசிபிக் மகா சமுத்திரத்துடன் கிங் ரேஞ்ச் (King Range ) எனப்படும் மலைத் தொடர் சேரும் இடத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஷெல்டர் கோவ் (shelter cove). கடற்கரையில் அமைந்த ஒரு விடுமுறை இல்லத்தில் தங்கி சமைத்து உண்டு ஓய்வெடுத்து திரும்புவது தான் திட்டம்.
ஊரை தாண்டியதும் மலை தொடர்களும் ஊசியிலைக் காடுகளும் red wood எனப்படும் பழமையான ,உயரமான ,அகலமான, அடர்த்தியான செம்மரக் காடுகளுமாய் , ஷெல்டர் கோவ் சென்றடைந்த போது இரவாகி விட்டது.
மறு நாள் காலை ஜன்னல் வழியாகக் கண்ட காட்சி அற்புதம். சூரியனின் கிரணங்கள் பட்டுக் கடல் நீரின் நிறம் அகுவா மரைன், நீலம், அடர் நீலம்,பச்சை , இள நீலம் என ...மாறிக் கொண்டே இருந்தது. கடற்காற்று ஒரு விதம் மலைக்காற்று ஒரு விதம் இரண்டும் கலந்த காற்று வித்தியாசமான தன்மையுடன் இருந்தது.
கடற்கரையும் அங்கே அமைந்திருந்த வீடுகளும் தொலைவில் துள்ளிக் குதித்து விளையாடிய டால்பின்களும் [குசேலன் பட டால்பின் காட்சியை நினைக்காமல் இருக்க முடியவில்லை], வானில் பறந்த ஜெட் விமானங்களும் [ஒரு ஜெட் விமானம் பறந்து சென்ற அதே பாதையில் அது வெளிப்படுத்திய புகை கோட்டின் மேலேயே மற்றொரு ஜெட் விமானம் பறந்து சென்றது], கடற்கரை காவல் படை விமானமும், கடல் பறவைகளின் துள்ளாட்டங்களும் , இரவின் லேசான குளிர் காற்றும், வானத்து நட்சத்திரங்களும் மனதுக்கு இதம்.
மதியம் அருகில் உள்ள Black sands beach சென்றோம். கடற்கரையில் மணல் இல்லை கருப்பு நிறத்தில் பலவடிவங்களில் கூழாங்கற்கள். கடல் நீர் பட்டு கற்கள் பல உருவங்களில் தேய்ந்து விதம் விதமாக பெரிய கற்கள் முதல் பொடிபொடி கற்கள் வரை இருந்தது- granite . [அந்த கற்களின் வடிவில் மயங்கி என் பெரிய பேரன் உங்களுக்கு souvenir எடுத்து வெச்சிருக்கேன் ஊருக்கு எடுத்துட்டு போய் தாத்தாவிடம் காட்டுங்க என்றார்.] பார்த்துக் கொண்டிருக்கும்போதே அலைகளின் ஆர்ப்பரிப்பு கூடியது. சூரியனின் கிரணங்கள் பட்டு கடல் நீர் வெள்ளியாய் தகதகத்தது. குளிர்காற்று வீசத் தொடங்கியது.
விடுமுறை இல்லத்தின் உள்ளே இருந்த பொழுதுபோக்கு பகுதியில் table tennis விளையாடியும் [அம்மா எல்லாருடனும் விளையாடிட்டேன், அந்த சின்ன பாப்பாவை கூப்டேன் வர மாட்டேன்னு சொல்லுடுச்சு என் மகனின் குறை, பாப்பாக்கு 2 வயது ] தொலைக்காட்சி பார்த்தும் புத்தகங்கள் படித்தும் பேசியும் பாடியும் பொழுது கழிந்தது. குழந்தைகளின் விளையாட்டுக்களும் கத்தல் கூச்சல்களும் கூடுதல் பொழுது போக்கு. [இது கண்ணாடி யானை தொடக்கூடதும்மா_ குட்டிப் பையனுக்கு குட்டிப் பெண்ணின் உபதேசம் ]. Thoureau இரவு முழுதும் கண்விழித்து ரோஜாப்பூ மலரும் அழகைக் காண விழித்திருந்தது பற்றி சொல்ல ஒரு தோழியாரும் கிடைத்தது மகிழ்ச்சி. [same interests]. இரவில் பால்வெளியில் கண்ட நட்சத்திரக் கூட்டம் பற்றிய மருமகனின் விளக்கங்களும் புகைப்படமும் நினைவில் நிற்பவை. எங்கள் பெண்களின் சமையலும் உபசரிப்பும் மறக்க முடியாதவை.
ஊர் திரும்பும் வழியில் காண நேர்ந்த செம்மர காடுகள் மற்றும் ஊசியிலை மரங்கள் அடர்ந்த பள்ளத் தாக்குகள் வழியாக, அழகான அகலமான சாலைகள் கொள்ளை அழகு. ஒழுங்கான சாலைகள் சீரான போக்குவரத்து என பயணம் செய்வது அலாதியான அனுபவம் எப்போதும்.
இது போல வாய்ப்பு கிடைத்தால் தவற விடவே கூடாதும்மா !!
பின் குறிப்பு; சான் பிரான்சிஸ்கோவின் Bay எனப்படும் விரிகுடா பகுதியின் அழகும் , golden gate பாலமும், Bay Bridge என அழைக்கப்படும் இரண்டடுக்கு பாலமும் , கப்பல் செல்லும் வகையில் ஏற்ற இறக்கத்துடன் அமைக்கப்பட்ட ஓக்லாண்ட் பாலமும் மழைத் தொடர்களும் வழியில் கண்ட சான் பிரான்சிஸ்கோ, பெர்க்லி பல்கலைகழகங்களும் என வழியெங்கிலும் கண்கொள்ளாக் காட்சிகள்.
15
Sudarsan Govindarajan, Geetha Murali and 13 others


No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...