Sunday, 8 November 2020

கெய்சர் என்றென்றும் உங்களுடன்.... (Kaiser Permanente)

அக்டோபர் 30, 2012.........

காலை 9.37 குட்டிப் பேரன் பிறந்த செய்தி கேட்டவுடன் சாண்டா கிளாராவில் இருந்த மருந்துவ மனைக்குச் சென்றோம். மாலை 4 மணியளவில் தான் மகளும் குட்டிப் பாப்பாவும் அறைக்கு (ஆப்ரேசன் பண்ணினாங்கல்லோ..... அதேன் இம்பூட்டு நேரம்) வந்தார்கள். அதுவரை குட்டிப் பையனிடம் சொன்னது போல பிக்னிக் தான். விளையாடி, சாப்பிட்டு, ஹாலோவின் பார்ட்டியில் october மாதத்தின் இறுதி நாள் halloween பண்டிகை)  பங்கெடுத்து.... நேரத்தைக் கடத்தினோம். குட்டிப் பாப்பா ரோஜாப்பூ குவியல் போல இருந்தார்.... (உங்க அம்மா facebook ல குட்டி பாப்பா ரோஜாப்பூ குவியல் போல இருக்கன்னு status போட்ருக்காங்க _மருமகன்) 

இரண்டாவது நாள் காலை.... கேசவனை யாரெனக் கேட்ட செவிலி..... அவரைப் பார்த்து..... WoW..... Congratulations You have become a big bro...ther என்று வாழ்த்தினார். (அனைவரும் வாழ்த்தினார்கள்) இவர் புளகாங்கிதமடைந்தார்......புல்லரித்துப் போனார்.... குடும்பமே நடனம் ஆடுவது போல பரங்கிக்காய் பொம்மை வரைந்து வந்து பாப்பாவுடன் படம் எடுத்துக் கொண்டார். (இன்று இந்த பயலுகளோட ஆட்டத்தால மொத்த குடும்பமும் அதில் இருப்பது போல ஆடித்தான் போயிருக்காங்க)

ஒரு செவிலி ஃபைவ் ஸ்டார் உணவகம் போல ஒரு மெனு கார்டை நீட்டி நாளைக்கு உங்களுக்கு என்ன சாப்பாடு வேண்டும் , குறித்து கொடுங்கள் என்றார். நான் மகளிடம் ரொட்டியும் பாலும் போதும் கண்ணா என்றதை கவனித்த செவிலி, யார் அது உன்னுடைய அம்மாவா... அப்ப அவங்க சொல்றது சரியாத்தான் இருக்கும் என்றார்..... (Mother Knows Best _Tangled)
செவிலி, மகளுக்கு ஜூரம், ரத்த அழுத்தம் பார்ப்பார்...... அடுத்தது பாப்பாக்கு ஜூரம் இருக்கா?
மகளுக்கு மருந்து.......பாப்பாக்கு தடுப்பூசி..
மகளுக்கு சாப்பாடு..... பாப்பாக்கு ரத்த பரிசோதனைக்கான ரத்த சேகரிப்பு,
மகளுக்கு மருந்து, சுத்தம் செய்தல், வேறு உடை மாற்றுதல்.... பாப்பாக்கு இங்கா. டையபர்,
செவிலியின் நீண்ட லெக்சர் இடையிடையே (when the baby cries first check his diapers என்று ஆரம்பிப்பார்கள் எல்லாரும் எப்போதும்....,அருமையான பயிற்சி)
நடுவில் ஒரு குழந்தை நல பயிற்சி மருத்துவர் , மூத்த மருத்துவர் ஒருவருடன் வந்து பாப்பாவை பார்த்து பார்த்து என்னவோ கற்றுக் கொள்வார்.......குறிப்பெடுத்துக் கொள்வார்.
சைக்கிள் கேப்ல , பாப்பாவிற்கு காது கேக்குதா கண் தெரியுதா...... பரிசோதனைகள்....
(இருவருக்கும் தனித் தனி செவிலியர், தனித்தனி மருத்துவர்....இடையில் பயிற்சி மருத்துவர் தனி)
தூங்கவே விடமாட்டார்கள்.... அடிக்கடி தலைக்கருகில் உள்ள தொலைபேசியில் ஏதாவது வேண்டுமா வேறு....(உன் கணவருக்கு என்ன சாப்பாடு வேண்டும்னு கேட்டு சொல்லுங்க.......)
மதியம் 2 மணி......அடுத்த முறைக்கான நேரம் வந்து விட்டது...(shift) அடுத்த செவிலி வருவார்.....மீண்டும் மகளுக்கு ஜுரம் இருக்கிறதா , பாப்பாக்கு ஜுரம் இருக்கிறதா ...........
ஹாலோவீன் திருநாள் வேறா........கொண்டாட்டம்தான்.......
(அம்மா இங்கே நிம்மதியா தூங்கவே முடியலைம்மா...... வீட்டுக்கு போலாம் என்று மகள் அழவே ஆரம்பித்து விட்டார்.........)

ஒரு முறை ஒரு செவிலி மகளிடம் உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் சொல்லு என்று சொல்லிக் கொண்டிருந்ததை கவனித்த கேசவ், Doctor I want Raspberry juice என்றார். உடனே அவர் என் மகளிடம் I will be right back என்று சொல்லி விட்டு ஓடோடிச் சென்று 2 ராஸ்பெர்ரி, 2 ஆப்பிள், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மற்றும் பிஸ்கட்டுகள் கொண்டு வந்து தந்து , இது போதுமா இன்னும் வேணும்னாலும் கேளு என்றார். மீண்டும்......when the baby cries first check his diapers

மூன்றாவது நாள் வீடு கிளம்பத் தயாராவதற்குள் பலபல படிவங்கள் (சோசியல் செகியூரிடி எண், பிறப்பு சான்றிதழ்) பூர்த்தி செய்து முடித்து கிளம்பும் நேரம். கார் சீட் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்கள். மீண்டும்......when the baby cries first check his diapers
கடைசியில்தான் அம்மா அப்பா பாப்பா மூவரின் கைப்பட்டியும் கழற்றப் பட்டது.(குறிப்பிட்ட எல்லைக்கு மேல் இந்த பட்டையுடன் சென்றால் அலாரம் அடித்து செக்யூரிடி வந்து விடுவார்கள், குழந்தை திருட்டைத் தடுக்கும் முயற்சி)
செவிலியர்கள், மருத்துவமனை செக்யூரிடிகள் புடை சூழ, சக்கர நாற்காலியில் அம்மாவின் மடியில் பாப்பா இருக்க..... நாங்கள் பைகள், இட்ஸ் எ பாய் பலூன் இன்ன பிறவற்றுடன் உடன் நடக்க காரில் அமரும் வரை நம்மை மேற்பார்வை பார்த்துச் சென்றார்கள்.
ஒரு வழியாக பிரதிவாதி பயங்கரம் முர்(Female) மற்றும் பிரதிவாதி பயங்கரம் முர்(Male) என்கின்ற ராகவ் ஆகியோரை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

(அப்பாடா..... வீடு வந்தாச்சு............ இனிமேல் நிம்மதியா தூங்கலாம்.......... _மகள்)

பின் குறிப்பு : குட்டிப் பாப்பாவின் மேல் எள்ளளவும் பொறாமை ஏற்படாத வண்ணம் மருத்துவ மனையில் மனதளவில் தயார் செய்து விடுகிறார்கள்.(பிக் ப்ரதர் கிளாஸ், பிக் சிஸ்டர் கிளாஸ் மூலம்), மூத்த குழந்தைக்குத் தான் முதல் கவனிப்பு........







No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...