கடந்த அமெரிக்க பயணத்தின் போது , வழக்கமாக Netflix ல் ஆங்கில தொடர்கள் மற்றும் திரைப்படங்களுடன் வெவ்வேறு நாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை கண்டேன் . முக்கிய காரணங்கள் வெவ்வேறு விதமான நிலப்பரப்புகள், மக்களின் வாழ்க்கை முறைகள் கலாச்சாரம் பற்றி, மொழியை எவ்வாறு பேசுகிறார்கள் (ஆங்கிலத்தையே ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள் ) என்பது பற்றி .... அறிந்து கொள்ளும் ஆர்வமே . (subtitles இருக்க பயமேன் ?)
ஆஸ்திரேலியா(Wanted), மலேசியா(Hati Perampuan),மெக்ஸிகோ(Unauthorized living) தென் அமெரிக்கா(Velvet), ஆப்பிரிக்கா(The lion king- movie)ரஷ்யா மற்றும் சில நாடுகளின் தொடர்களையும் காண நேர்ந்தது.
சற்றே மிகைப்படுத்தப் பட்ட காட்சிகள் இருந்தாலும் அடிப்படை செய்திகள் மாறாது இல்லையா? என் மனதை பாதித்த இரண்டு தொடர்களை பற்றிய சிறு தொகுப்பு இங்கே ....
துருக்கிய நாட்டு தொலைக்காட்சி தொடர் : What happens to my family ?
ஒரு மத்தியதர குடும்பம். வீட்டின் முன்புறம் துருக்கிய உணவு வகைகளை உடனுக்குடன் தயாரித்து விற்கும் கடை வைத்திருக்கும் தகப்பன் மட்டும். தாய் இல்லை. 2 மகன்கள் 1 மகள் . அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். விதவை அத்தையும் இவர்களுடன் வசிக்கிறார் .
பிள்ளைகள் மூவரின் காதல் மற்றும் திருமணம் முடிய செல்லும் கதை .
அத்தையின் கண்டிப்பான வளர்ப்பில் பிள்ளைகள். காலையில் சீக்கிரம் எழுந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு வெளியில் கிளம்புதல்(சாப்பிடாமல் வெறும் வயிற்றில் போகாதேப்பா) வயதில் மூத்தோரிடம் பணிவுடன் நடந்து கொள்ளுதல் ,வீட்டை சுத்தமாக பராமரித்தல் (வெளியில் அணிந்து செல்லும் செருப்பை வீட்டிற்குள் அணிந்து நடமாடினால் அத்தை கொன்றுவிடுவார் _ பிள்ளைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனம் )
அத்தை மூன்று நேரமும் சமைப்பார். துணிகளை துவைத்து வீட்டு தோட்டத்தில் கொடி கட்டி காய வைப்பார். வீட்டிற்கு வெளியில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்திருப்பார் . யாராவது வெளியில் சென்றால் அவர்கள் கிளம்பிய உடனே அந்த நீரை நல்ல சகுனத்திற்க்காக தெருவில் வீசி இறைப்பார். (நாங்கள் கொஞ்சம் முன்னே சென்ற பிறகு நீரை ஊற்ற கூடாதா அத்தை ?)
பிள்ளைகளுக்கு தெரிந்த இடங்களில் சொல்லி வைத்து தகுந்த வரன்களை பார்த்து மணமுடிக்கிறார்கள். காதலித்தால் குடும்பம் குலம் தகுதி பார்த்து சம்மதிக்கிறார்கள். மணமகனின் வீட்டார் பெண் வீட்டிற்கு பூக்கள் மற்றும் chocolates வாங்கி வந்து பெண் கேட்கிறார்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் வாங்குதல் என்று இந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள்.
மருத்துவரான மூத்த மகன் ஒரு பணக்கார பெண்ணை மணக்கிறார். மத்தியதர மக்கள் வாழும் இடமென்பதால் எங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று தந்தையாரின் கடையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கிறார்கள். வம்பர்களும் உண்டு.
அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே ஒரு சிறிய மண்டபத்தில் reception வைக்க ஏற்பாடு செய்ய , அனைவரும் திரண்டு வந்து உதவி செய்து மகிழ்ந்து, பணக்கார சம்மந்தியையும் மகிழ்விக்கிறார்கள்.
இப்படி பலப்பல ...... நம் பழக்க வழக்கங்களை அந்த நாட்டு மக்கள் கடைப்பிடிப்பது போல தோன்றியது .
அடுத்து ........
அமெரிக்க தொலைக்காட்சி தொடர் "Switched at birth"
இந்த தொடர் குறிப்பாக பதின்பருவ பிள்ளைகளை (teenagers)பற்றியது.
தென் அமெரிக்க, வடஅமெரிக்க தம்பதிகளுக்கு பிறக்கும் பெண் குழந்தைகள் மருத்துவமனையில் (ஏதோ காரணம் _ மறந்து போய்விட்டேன் )
மாறி விடுகின்றன .
தென் அமெரிக்க தம்பதியின் குழந்தை வெள்ளை நிற தலைமுடி நீல கருவிழி என இருக்க ( அதன் மூன்றாவது வயதில் மூளைக்காய்ச்சலால் பாதிக்க பட்டு காது கேட்கும் திறன் போய் விடுகிறது) வட அமெரிக்க தம்பதியின் பெண் சற்றே குட்டையாக கருவிழிகளுடன் கருகருவென்ற தலைமுடியுடன் இருக்கிறார்.
இது பின்கதை .
வட அமெரிக்க தம்பதியின் மகள் உயிரியல் வகுப்பில் எதேச்சையாக DNA test செய்து பார்க்க உண்மை வெளியாகிறது .
இதிலிருந்து தொடங்கி எப்படி மகள்களை கண்டுபிடித்து எல்லாரும் ஒரே வீட்டில் வசித்து, எப்படி எல்லாரும் இரு மகள்களையும் ஏற்று கொள்கிறார்கள் என்பது கதை.வட அமெரிக்க தம்பதிக்கு மூத்த மகனும் உண்டு. இந்த மூவரும் தினமும் கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கவே பெற்றோர்களுக்கு நேரம் சரியாக இருக்கும் .
Boyfriend /girlfriend வைத்துக் கொள்வது (அங்கே இது social pressure ) குடிப்பழக்கம், போதைமருந்து, கர்ப்பத்தடை மாத்திரைகள் , வேண்டாத கர்ப்பம் என விதம்விதமான பிரச்சினைகளை பெற்றோர்கள் சந்திக்கவேண்டி உள்ளது. தினமும் இதுபோன்ற எமோஷனல் பிரச்சினைகளுக்கிடையே எப்படி படிக்கிறார்கள்??
(அம்மா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் _ மகன்
என்ன ஆச்சு போதை மருந்து ஏதாவது வெச்சிருந்து போலீஸ் பிடிச்சுட்டாங்களா உன்னை இல்லேன்னா எந்த பெண்ணையாவது கர்ப்பமாக்கிட்டியா ?
ஐயோ அம்மா ஸ்கூலில் excursion கூட்டி போகிறார்கள்_மகன்)
வட அமெரிக்க அம்மா தினமும் 3 வேளையும் சமைத்து பிள்ளைகளுக்கும் கணவருக்கும் பரிமாறுவார். மதிய உணவு கொடுத்தனுப்புவார்.
18 வயதானதும் பிள்ளைகள் தனியாக இருக்க வேண்டும் சம்பாதித்து தங்கள் செலவுகளை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். (19 வயசாச்சு இன்னும் நாம் தான் அவனுக்கு telephone bill கட்டுகிறோம்)
ஒரு பெண்ணுக்கு காது கேளாது என்பதால் ASL (American Sign Language ) நிறைய இடம்பெறுகிறது இந்த தொடரில். (மொழி படம் நினைவுக்கு வருகிறதா ?) ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த sign language மாறுபடும். SL, அவர்களுக்கான பள்ளிகள் கல்லூரிகள் எப்படி போதிக்கிறார்கள் வேலை வாய்ப்புக்கள் என்னென்ன என நிறைய தகவல்கள்.
[இந்த தொடரினை நான் பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள் என் சிறிய பேரன் (6 வயது kindergarten வகுப்பு) , சில சைகைகளை செய்து காண்பித்தார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்ட போது பள்ளியில் அவனுடைய ஆசிரியை கற்றுத் தந்தார் என்று கூறினான். ஆசிரியையுடைய சகோதரி காத்து கேளாதவர் என்பதால் ஆசிரியை சைகை மொழியை அறிந்துள்ளார். எங்களுக்கும் கற்றுத் தந்துள்ளார் என்று கூறினான்.
மற்றொரு அனுபவம். கரிபியன் தீவுகளில் நடக்கும் துப்பறியும் தொடர். ஒரு முறை கதையின் போக்கில் தொலைக்காட்சியில் weather report காட்டினார்கள் . கவனித்து பார்த்த போது 90, 93, 95 பாரன்ஹீட் என இருந்தது.
அப்போது தான் புரிந்தது ..மக்கள் ஏன் க்ரூஸ் கப்பல்களில் ஏறி கரிபியன் தீவுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் என்று. கடும் குளிர் நாடுகளில் சூரியனின் வெளிச்சம் இருக்கும் ஆனால் வெப்பத்தை உணர முடியாது . (இங்கே வாங்கப்பா ..90 + எங்களுக்கு சகஜமப்பா _ mind voice)
சமீபத்தில் என் குட்டி பேரனின் வருகையின் போது 102 டிகிரி என்று சொல்லி கொண்டு இருந்தேன் . பாட்டீ .. அப்போ ஐஸ் கிரீம் சாப்பிடலாமா என்று கேட்டான் . வேண்டாம் என்றேன். அவன் பதில் : பாட்டீ எங்கள் ஊரில் 80 டிகிரி போனாலே எங்கள் அம்மா வாங்கி தருவார் என்றான். குளிர் நாடுகளின் நடப்பு இது] ]
மற்றொரு அனுபவம். கரிபியன் தீவுகளில் நடக்கும் துப்பறியும் தொடர். ஒரு முறை கதையின் போக்கில் தொலைக்காட்சியில் weather report காட்டினார்கள் . கவனித்து பார்த்த போது 90, 93, 95 பாரன்ஹீட் என இருந்தது.
அப்போது தான் புரிந்தது ..மக்கள் ஏன் க்ரூஸ் கப்பல்களில் ஏறி கரிபியன் தீவுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் என்று. கடும் குளிர் நாடுகளில் சூரியனின் வெளிச்சம் இருக்கும் ஆனால் வெப்பத்தை உணர முடியாது . (இங்கே வாங்கப்பா ..90 + எங்களுக்கு சகஜமப்பா _ mind voice)
சமீபத்தில் என் குட்டி பேரனின் வருகையின் போது 102 டிகிரி என்று சொல்லி கொண்டு இருந்தேன் . பாட்டீ .. அப்போ ஐஸ் கிரீம் சாப்பிடலாமா என்று கேட்டான் . வேண்டாம் என்றேன். அவன் பதில் : பாட்டீ எங்கள் ஊரில் 80 டிகிரி போனாலே எங்கள் அம்மா வாங்கி தருவார் என்றான். குளிர் நாடுகளின் நடப்பு இது] ]
எல்லா நாட்டு மக்களுக்கும் பொதுவான பிரச்சினை , தம் பிள்ளைகளின் நலம், படிப்பு , பெரியவர்களிடம் மரியாதை, தகுந்த வரனை திருமணம் செய்தல் இப்படி பல.
பணக்கார வீடுகளில் வேறு விதமான வாழ்க்கை முறையை காட்டுகிறார்கள். நம் ஊர் தொடர்களை போல நள்ளிரவிலும் முழு makeup , நகைகள், கலையாத கூந்தல் அங்கும் உண்டு.
எவ்வளவு கண்டங்களை சுற்றி வந்தாலும் ஒரு நாட்டைப் பற்றிய விவரங்களை அதன் கலாச்சாரத்தின் மூலம் தான் கண்டு கொள்ள முடியும் என்பது முற்றிலும் உண்மை.
தொடரும் தொடர்கள் .....
பின் குறிப்பு : தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பது என் முக்கிய வேலை இல்லை .
No comments:
Post a Comment