முதல் பயணம் 22 நாட்கள் மட்டுமே என்ற காரணத்தால் புது அனுபவங்கள் இந்த பயணத்தில் நிறைய கிடைத்தன.
நவராத்திரி சமயம் என்பதால் பெரிய பேரனுக்கு தினமும் ஒரு வித அலங்காரம் செய்தோம். இன்று இந்த வேஷம் என்று சொல்லி விடுவார் பேரன், நானும் மகளும் அதற்கான ஆடை ஆபரணங்களை தயார் செய்து வைப்போம்.
மகள் குடியிருந்த தெருவிற்கு மறுபுறம் Cropley பகுதி.
கர்ப்பவதியான மகளுடன் நடைப்பயிற்சி செய்ய சென்ற சமயம் போதை மருந்து உட்கொண்ட 3 பேர் பேபி பேபி பேபி என்று கத்தி கொண்டே எங்கள் பின்னாலேயே வர நாங்கள் ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தோம். (அதன் பிறகு நடைப்பயிற்சி செய்ய வெளியில் போகவே பயம்)
பிரசவ தினத்திற்கு
முன் தினம் கோமள விலாஸில் (Sunnyvale) சாப்பிட வேண்டும் என ஆசையாக என்றார் மகள். அங்கே முன்பு பிரதி ஞாயிற்றுக்கிழமை தலைவாழை இலையில் திருவல்லிக்கேணி ரத்னா கபே போல வரிசையில் அமரவைத்து பரிமாறுவார்கள். மெனு அரைத்து விட்ட முருங்கைக்காய் சாம்பார், ரசம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிய பொரியல், அப்பளம், பாயசம் என அன்லிமிடெட் மீல்ஸ். பார்த்து பார்த்து பரிமாறுவார்கள். [தற்சமயம் நடைமுறையில் இல்லை]
ஒரு ஆங்கிலேய பெண்மணி (மெக்ஸிக்கோவை சேர்ந்தவராக இருக்கலாம்) பெரிய முறத்தில் சாதம் பரிமாறினார், இடது கையால்(?!).
என்ன குழந்தை எப்போது due date என மகளை குசலம் விசாரித்து உன் மகனுக்கு உருளைக்கிழங்கு பொரியல் கேக்குது போல, இன்னும் கொஞ்சம் சாப்பிடு என அதிகப்படியாக உபசரித்தார்.
மருமகன் பணம் கொடுத்து விட்டு வருவதற்குள் நாங்கள் வெளியே நின்று கொண்டு இருந்தோம். [அமெரிக்காவில் Bill = Check (cheque), Cheque =
Bill. பில் கொண்டு வாருங்கள் என்பதை check கொண்டு வாருங்கள் என்பார்கள். பணத்தை bill என்பார்கள். scan
பார்க்கையில்
ஆணா பெண்ணா என்று கூறி விடுவார்கள் அங்கே, என் மகன் பிறந்த சமயத்தில் இந்தியாவிலும்
கூறினார்கள்.]
அச்சமயம் அங்கு வந்த கோமள விலாஸின் மேனேஜர் மக்களிடம் என்று due date என்று கேட்டார். மறுநாள் என்றதும்
பதட்டத்துடன் நாளைக்கு
என்று சொல்கிறாய் இன்று இங்கே என்ன வேலை , சீக்கிரம் வீட்டிற்கு போ அம்மா என்று கோபித்துக் கொண்டார்.(தமிழில்). என் தாயாரும் உடன் இருக்கிறார் என்றதும் சற்றே அமைதியானார். சரி சரி சீக்கிரம் வீட்டுக்கு செல்லுங்கள் என்கிறார்.
Cropley என்னும் பெயருடைய Light Train Station (நம் நாட்டு electric train, metro train போல ஊருக்குள் மட்டும் செல்லும்) மகள் குடியிருந்த communityக்கு நேரெதிரில் தெருவைக் கடந்தவுடன் ...முதல் மாடியில் வீடு என்பதால் சமையலறை ஜன்னலில் இருந்தே ரயில்கள் வந்து செல்வது தெரியும். (4 am - 11 pm) எப்போதும் சிவப்பு விளக்கு எரியும் ரயில் வந்தால் பச்சை விளக்கும் சேர்ந்து எரியும்.
ஒரு முறை எழுத்தாளர் திருமதி அனுராதா ரமணன் எழுதியது: (என் வார்த்தைகளில்)
நான் அதிகம் படிக்கும் பழக்கம் உள்ளவள், எழுதுவது என் வேலை, அமெரிக்கா சென்றாலும் என்னால் பொழுதை நல்ல படியாக போர் அடிக்கிறது என்று சொல்லாமல் கழிக்க முடியும் என்று நினைத்தேன். மகளும் மருமகனும் மாடியிலிருந்து வரும்போதே அலுவலகம் செல்லும் அலங்காரத்தில் வருவார்கள். அவர்களின் குழந்தையை ஸ்பானிஷ் மொழி பேசும் nanny வரும் வரை நான் பார்த்து கொள்ள வேண்டும். Nannyக்கும் எனக்கும் மொழி பிரச்சினை. நான் ஒன்று சொல்ல அவர் ஒன்று செய்ய… மாலை வரை போராட்டம். தினமும் 5 மணிக்கு தொலைக்காட்சியில் ஒரு ஓவியர் ஓவியம் வரைய கற்றுத் தருவார். தினமும் பார்ப்பேன். ஒரு கட்டத்தில் அவர் மேல் எனக்கு காதலே வந்து விட்டது. மகளிடம் கூறிய போது, அந்த ஓவியர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.
அது போல எனக்கும் ரயில்களின்
மேல் காதல் ஏற்பட்டது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். பேரனுக்கு ரயிலைக் காட்டி,
மரத்திலிருக்கும் பறவைகளைக் காட்டி சாப்பாடு ஊட்டுவேன். பால் குடிக்க வைப்பேன். ஒரு முறை பல நாட்களுக்கு சிவப்பு விளக்கு எரியவில்லை. என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள நேரில் சென்று பார்த்தோம்.
குட்டி பேரன் halloween பண்டிகைக்கு முதல் நாள் (அக்டோபர் 30) பிறந்தார். எங்கெங்கும் கோலாகலம் மருத்துவமனை உட்பட. அக்டோபர் 31 அன்று மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் விருந்து அவரவர் அறையில். இந்திய உணவுகளுடன் மகளுக்கும் மருமகனுக்கும் apple wine (non -alcoholic) கொடுத்தார்கள்.
நாங்கள் வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவை சாப்பிட்டு விட்டு மற்றவற்றை யாருக்கோ கொடுத்தோம்.
அங்கே கணவன் மனைவி மட்டுமே தனியாக பிரசவத்திற்கு செல்வார்கள் பெற்றோர்கள் உடன் இருப்பது அரிது. எனவே செவிலியரும் மருத்துவர்களும் குழந்தை பெற்ற மகளுக்கு வண்டி வண்டியாய் உபதேசம் செய்தார்கள். என் மகள் இது எனக்கு இரண்டாவது குழந்தை என்று அலற அலற. ஹோட்டல் மெனுகார்ட் போல 3 நாட்களுக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று டிக் செய்து தர சொன்னார்கள். நான் பிரட் பால் என்று கூறியதும், ஓ ..அம்மாவா ... அம்மா strict ஆகத்தான் இருப்பாங்க அவர் சொல்படி கேளுங்க என்று சொல்லி சென்றார் செவிலி.
பேரன் பிறந்த 5 வாரங்கள்.டிசம்பர் 2. திங்கட்கிழமை. மருமகன் புது அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த நாள்.
காலை 11 மணியளவில் மாடியிலிருந்து கீழே இறங்கியதும் வலது பாதம் மிக லேசாக மடங்கி ankle எலும்பு hair line crack ஆனது.
Travel Insurance இருந்தால் மட்டுமே அமெரிக்காவில் வைத்தியம் செய்து கொள்ள கட்டுப்படியாகும். எலும்பு முறிவு தானா என்று கண்டு பிடிக்க வெள்ளிக்கிழமை ஆனது. வார இறுதி நாட்களில் மருத்துவர்கள் வேலைக்கு வரமாட்டார்கள் அங்கே.
சனி, ஞாயிற்றுகிழமைகளில் கூகுளில் தேடி எந்த மருத்துவருக்கு நல்ல review கொடுத்திருக்கிறார்கள் என்று கண்டு பிடித்து, அவருக்கு நம்முடைய வியாதி பற்றி ஈமெயில் அனுப்பி அவர் அதற்கு இவ்வளவு பணம் ஆகும் என்று estimate அனுப்பி , அதன் பிறகு appointment வாங்கி திங்களன்று சென்று கட்டு போட்டு கொண்டு வந்தோம். வலியான வலி. எந்த மருந்தும் தேவை இல்லை என்று அனுப்பி விட்டார் வயதான அந்த தெற்காசிய மருத்துவர்.
plaster of paris எனப்படும் மாவுக்கட்டு எந்த நிறத்தில் வேண்டும் என்று கேட்டார்கள். நான் கருப்பு நிறம் கேட்டேன். (பாட்டி ... get well soon அப்பிடீன்னு எழுதி கையெழுத்து போடலாம்னு இருந்தேனே...கருப்பு நிறத்தில் போடமுடியாதே) எனக்கு 21 நாட்கள் கட்டு, இந்தியா வந்த பிறகும் சேரவில்லை என்று x-ray சொன்னது. மருந்து மாத்திரைகள். 15 kg எடை கூடியது. சாதாரணமாக நடக்க ஒரு வருடம் தேவைப்பட்டது.
[நான் இந்தியா திரும்பி வந்த சில நாட்களில் என் இளைய சகோதரிக்கு இதே போல எலும்பு முறிவு. சில மணி நேரங்களுக்குள் என் மற்றொரு சகோதரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டார். crepe bandage எனப்படும் துணியால் ஆனா bandage ஐ கட்டி விட்டு 10 நாட்கள் காலை மேலே வைத்து கொள்ளுங்கள் சரியாகி விடும் என்று அனுப்பி விட்டார் மருத்துவர். 2 நாட்களுக்கு ஒரு முறை நான் சமைத்து கொடுக்க சகோதரி சிறியவர் வீட்டில் deliver செய்ய ...11 ஆவது நாள் அவர் இரண்டு மாடிகள் கீழிறங்கி ஸ்கூட்டரில் மகனை பள்ளிக்கு அழைத்து சென்றார்.]
காலில் கட்டு இருந்த நாட்களில் எப்பொழுது பேரன் பள்ளி செல்வான் என்று காத்திருந்து காலை முதல் மாலை வரை தொடர்ந்து Netflix பார்த்தது ,Mr. Monk என்ற தொடர் நாடகத்தை Netflix ல் பார்த்தது ,
பூங்காவில் ஏற்பட்ட நட்புகள், மருத்துவ மனைக்கு செல்லும் மார்க்கத்தில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை கண்டது , பக்கத்து வீட்டில் திரு தாமஸ் அவர்களின் குடும்பத்தினருடன் நட்பு , பெரிய பேரன் பிறந்த 100 ஆவது நாளில் studio சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது போல சின்ன பேரனுடனும் studio சென்று புகைப்படங்கள் எடுத்து கொண்டது, Cupertiono நகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற Apple நிறுவனத்தை கண்டது, நூலகம் சென்று கதை
நேரத்தில் பேரன்களுடன் கலந்து கொண்டது , நிறைய புத்தகங்கள் படித்தது (ஒரு கார்டுக்கு
100 புத்தகங்கள் எடுத்து செல்லலாம். 21 நாட்கள் . மீண்டும் renewal செய்து இரண்டு
21 நாட்களுக்கு வைத்திருக்கலாம், குட்டி பாப்பாவிற்கும் கெட்டி அட்டை போட்ட புத்தகம் உண்டு ), Dr .
Suess பிறந்த நாள் , Thanks Giving Day , St .Patrick 's day போன்ற முக்கியமான நாட்களை
பற்றி அறிந்து கொண்டது , [பாட்டீ இன்னிக்கு St .Patrick 's day. ஓ அப்படியா ...நாம்
என்ன செய்யணும்? பச்சை நிற உடை உடுத்த வேண்டும்..shamrock இலை போல, golden pot போல
கிப்ட் செய்யணும் ]... என பல அனுபவங்கள்.
[
அச்சமயம் பேரன் iron man மேல் மிகுந்த காதலுடன் இருந்தார். அந்த உடையை அணிந்து கொண்டால் கழட்டவே மாட்டார்]
Physiotherapyக்கு நான், பேரன், மருமகன் பிரதி சனிக்கிழமை செல்வோம். அங்கே இவர் உன் மனைவியா என்று என் மருமகனை கேட்க அவர் இல்லை இல்லை என் மனைவியின் தாயார் என்று கூறினார். (அங்கே வயது வித்தியாசம் தம்பதிகளுக்குள் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் இல்லை).
Physiotherapyக்கு செல்ல முதல் appointment .(ஒவ்வொரு முறையும் $80). நாங்கள் கிளம்பியதும் வீட்டிற்கு தொலைபேசி முரளிதரன் இருக்கிறாரா அவருக்கு 11 மணிக்கு appointment என்று கூறினார்களாம். என் மகள் தெளிவாக என் தந்தை இந்தியா சென்று விட்டார் என்று கூறியிருக்கிறார். நான் உன் அம்மாவை கேட்டேன் என்றதும் சுதாரித்து கொண்டு கிளம்பி விட்டார் வந்து கொண்டிருக்கிறார் என்று கூறினாராம்.
பாஸ்போர்ட்டில் என் பெயருடன் என் கணவர் பெயரும் இருப்பதே காரணம்.
[என் மகளது பாஸ்ப்போர்ட்டில் பிரதிவாதிபயங்கரம் முரளிதரன் ............. எங்கு சென்றாலும் கணினி mur முடிய தான் எடுத்துக் கொள்ளும்.
பிரதிவாதிபயங்கரம் முர் .....என்றதும் நான் தான் என்று எழுந்து செல்வார் மகள்.
பேரன் பிறந்த போது மருத்துவமனையில் அவர்
பிரதிவாதிபயங்கரம் முர் Female , பாப்பா பிரதிவாதிபயங்கரம் முர் Male)
குளிர்கால அனுபவமும் புதிது. தண்ணீரில் கைவைக்க முடியாது. அங்கே குழாய்களை எப்போதும் வெந்நீர் வரும் என்பதால் கவலை இல்லை.
jetlag சமயத்தில் 3 மணிக்கு எழுந்து அரிசி ஊற வைத்து 5 மணிக்கு கிரைண்டர் போட்டு 6 மணிக்கு இடியாப்பம் பிழிந்து வைத்தது , இரவில் வாஷிங் மெஷின் போடக்கூடாது என தெரியாமல் போட்டது (கீழ் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சத்தம் கேட்க கூடாது), பால்கனியில் துணி உலர்த்த கூடாது , சிறுவர் சிறுமியரை இடுப்பில் ஆடையில்லாமல் யார் கண்ணிலும் படவிடக் கூடாது , டயபர் ரெஸ்ட்ரூம் உள்ளே தான் மாற்றி விட வேண்டும் , மற்றவர்களின் குழந்தைகளை தொட்டு பேசக்கூடாது இப்படி பல விஷயங்களை அறிந்து கொண்டேன்
குட்டி பாப்பாவிற்கு Birth Certificate, Social Security
Number, PIO கார்டு, Passport வாங்கி கொண்டு .......
ஏப்ரல் 6, 2013 ...மீண்டும் இந்தியாவை நோக்கி மகளின் குடும்பத்துடன் பயணம்.
வெளிநாடுகளில் wheel chair (முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள்) , stroller ( சிறுகுழந்தை) போன்றவற்றிக்கு மதிப்பு மிக அதிகம். விமானத்தில் ஏறுவதற்கு முன்னுரிமை உண்டு .
[ உடல் ஊனமுற்றவர் (நான் தான , கால் உடைந்து கட்டு பிரித்து
மீண்ட நொண்டி நடந்த காலகட்டம்) ,stroller (சின்ன பேரன்), சிறு குழந்தை (4 வயது பெரிய பேரன்) என நாங்கள் பூங்காவிற்கு செல்லும் போது 100 மீட்டர்கள் தள்ளி காரை நிறுத்தி விட்டு நாங்கள் கடந்து சென்ற பிறகு பொறுமையாக ஓட்டி செல்வார்கள்.]
குழந்தைக்கு அங்கே பொது இடங்களில் diaper மாற்ற கூடாது என்பதால் restroom சென்றிருந்தார் மகள்.
Stroller நின்றிருப்பதை கண்டதும் விமான பணிப்பெண் ஓடோடி வந்து பாப்பா எங்கே உடனே முதலில் விமானத்தில் உள்ளே போகலாம் வாருங்கள் என்று அழைத்தார்.
Bassinet எனப்படும் தொட்டிலுடன் கூடிய இருக்கை மகள் குடும்பத்திற்கு. எனக்கு நேர் பின்னால்
இருந்த இருக்கை .
கிளம்பிய சிறிது நேரத்திற்குள்ளாக சாப்பாடு கொடுக்க மாட்டார்கள் என்பதால் (மதியம் 2.30 மணி விமானம்) பசிக்கும் என விமான நிலையத்தில் pizza உண்டு விட்டோம் .(சிறிதளவே)
போயிங் 747 விமானம். 16 மணி நேரங்கள் தொடர்ந்து பறக்க வேண்டுமே ...அதற்கேற்ப எரிபொருள், மக்கள், அவர்களின் பெட்டிகள் என பெரும் சுமையுடன் கிளப்பும் விமானம் வானில் சுதாரித்து பறக்க ஆரம்பிக்க எப்படியும் 30-45 நிமிடங்கள் ஆகும். [ஒவ்வொரு முறையும் உருப்படியாய் Bay Area வைக் கடப்போமா என்று தோன்றும்)
பிறகு சாப்பிட கொடுத்தார்கள்.
முதல் நாளே என்னுடைய Jain meal பற்றி airline க்கு பேசி உறுதி படுத்திக் கொள்ளலாம் என்று நான் கூறியபோது மகள் அதெல்லாம் தேவை இல்லை என்று கூறி விட்டார்.
மூடியுடன் கூடிய ஒரு சிறிய கப்பில் நான் கண்டிராத ஒரு உணவு. Prawn salad என்று பின்னாளில் அறிந்தேன். நான் மகளை கூப்பிட ..மகள் விமான பணிப்பெண்ணை கூப்பிட .... மொத்தத்தில் சைவ உணவு அந்த பயணத்தில் எனக்கு தரப்போவதில்லை எனப் புரிந்தது.
வழக்கமாக குழந்தைகளுடன் வரும் பொழுது அவசரத்திற்கு என சப்பாத்தி இட்லி என கொண்டு வருவார் மகள். அந்த உணவு மற்றும் மகளின் உணவு என சாப்பிட்டு பயணத்தை கடத்தினோம்
(16 மணி நேரங்களில் பெரும்பகுதி அமெரிக்க நேரப்படி இரவு தானே , ஒரு நேரத்திற்கு பிறகு உணவு தேவைப்படவில்லை)
குட்டி பேரன் அழுது, சிரித்து, விளையாடி
தூங்க ஆரம்பிப்பார் . Bassinet உள்ளே விட்ட உடனே turbulence வருகிறது கையில் வைத்து கொள்ளுங்கள் பெல்ட் போட்டுக் கொள்ளுங்கள் என்பார் விமானப் பணிப்பெண் .
மீண்டும் அழுகை சிரிப்பு தூக்கம் .....மீண்டும் turbulence ....
Pantry க்கு மிக அருகில் எங்கள் இருக்கை . அப்பா sandwich வேண்டும் அப்பா ஜூஸ் வேண்டும் அப்பா பசி ஆப்பிள் வேண்டும் .....டிவி போட்டு குடுங்க ....பாட்டி மட்டும் நல்ல சினிமா பாக்கறீங்க எனக்கு நல்ல சினிமா இல்லை....பெரிய பேரனின் அலம்பல்கள்.
ஹாங்காங் விமானநிலையம். வலது கால் வீங்கி இருந்தது. உயரே தூக்கி வைத்திருந்து மீண்டும் இந்தியா செல்லும் விமானத்தில் ஏறி சென்னை வந்து சேர்ந்தோம்.
விமான நிலையத்தை அடைந்ததும் நான் எங்கள் வீட்டிற்கு செல்ல கிளம்பியதை கண்ட பேரனுக்கு பலத்த சந்தேகம். அவர் preschool சென்று கொண்டிருந்த சமயம்.
இவ்வளவு நாட்களாக பாட்டி நம்முடைய Family என்று சொன்னீர்கள், எல்லாரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தோம், இப்போது என் அவர்கள் வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்கிறார் நம்முடன் ஸ்ரீபெரும்புதூருக்கு ஏன் வரவில்லை? என்று கேட்டார். [ Family மற்றும் உறவு முறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்து பாடம் சொல்லி தருவார்கள் அங்கே
step-father, step-sister உட்பட]
நல்ல கேள்வி, ஆனால் பதில் இல்லை எங்களிடம்.
**இந்த பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்த பதிவுகளை கீழே தொகுத்து தந்துள்ளேன். (To read the links keep the cursor
on the link, ctrl+click)
1.தாத்தா உம்மாச்சி
2.குட்டி பேரனின் பிறப்பு
https://www.facebook.com/sundararajan.manjula/posts/759894067361541
3.சொர்க்கமே என்றாலும் ....
https://manjooz.blogspot.com/2014/09/blog-post_10.html
4.Mr. Monk
https://manjooz.blogspot.com/2015/01/its-jungle-out-there.html
4.School pick up routine
https://manjooz.blogspot.com/2014/09/bro.html
5.பேரன்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அனுபவம்
https://manjooz.blogspot.com/2014/09/do-picture-people-paint-their-wall.html
6.ஆப்பிள்
https://manjooz.blogspot.com/2014/09/a-for-apple.html
7.Thomas mama
https://manjooz.blogspot.com/2014/09/blog-post_29.html
அனுபவங்கள் தொடரும் .....