9/9/99 -----முதன்முதலாக வலைத்தளத்துக்குள் நான் நுழைந்த நாள். Hotmail கணக்கு ஆரம்பித்து , படிப்படியாக பலவும் கற்றுக் கொண்டேன். கொண்டிருக்கிறேன் .
Social media எனப்படும் Twitter , Facebook போன்றவை பிரபலமாகாத காலகட்டம்.
ஒரு ஆர்வக்கோளாறில் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்த அதே நாளில் அதிக options இல்லாததால் ,அன்றே அந்தக் கணக்கை delete செய்து விட்டேன். முதல் 4 வருடங்கள் Facebook இன் பயன்பாடு என்னவென்றே பிடிபடவில்லை . instagram,shtyle,yahoo, Google +,Linked In, Pinterest .... எங்கே புதுக்கணக்கு தொடங்கினாலும் அங்கே நம்ம பழைய நட்பு வட்டம் தான் இருந்தது, இருக்கிறது . கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, Facebook மட்டும் தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்தேன்.
கடந்த வருடத்தில் நடந்த பரபரப்பான பல சம்பவங்களைத் தொடர்ந்து, நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில் மீண்டும் twitter.பரபரவென பலவிஷயங்கள் வந்து கொட்டுகிறது. பல புது options. புரிந்தும் புரியாமலும் வந்து போகும் பதிவுகள் பகிர்வுகள்.
முகநூலிலும் பலப்பல பதிவுகள். மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. ( நம் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் அனைவரது பதிவுகளும் தற்போது வந்து போவதில்லை, நமக்கு தேவையானதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம் , நமக்கு தேவையே இல்லாததை Facebook தானாகவே கொட்டுதே ?)
Whatsapp , /You tube .....
இந்தியாவில் இருந்தவரை எல்லாம் நல்ல விதமாக இருந்தது. அமெரிக்கா வந்த பிறகு , மேற்கண்ட நிலையில் நிறைய மாற்றங்கள்.
Twitter நான் தேர்வு செய்து தொடருபவர்களை இங்கே தொடர விடுவதில்லை. தானாகவே அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை Trending ஆக்குகிறது. சில சுவாரசியமான தலைப்புகளும் வரும்.
நம்ம ஊர் கமல்ஹாசன், சுப்ரமணியம்ஸ்வாமி , மோடிஜி போன்றோர் என்ன பதிவிடுகிறார்கள் ??? சீமான் என்ன சொல்றார்? இரோம் ஷர்மிளாவிற்கு திருமணம் முடிந்து விட்டதா ? அவர்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே நான் தற்சமயம் .
ட்விட்டரில் சர்வ சகஜமாக இங்கே நான் காணும் trending தலைப்புககளிலிருந்து சில ....
Sunday memories,monday musings,tuesday thoughts,wednesday wordings,thursday ......., friday ....... saturday ..... என வாரம் முழுவதும் ..... trending headings
4 words about Mr.x , 5 words about how to eat , thoughts about your date ....
சினிமா நடிகர்களின் பிறந்த நாட்கள், தினமும் ஏதாவது அவார்டு , டிரம்ப், KISSING DAY,PANCAKE DAY,HISPANIC HERITAGE MONTH,நான் இது வரை கேள்விப்பட்டிராத பல பிரபலங்கள், நம் ஊர் கண்ணம்மாபேட்டை vs கொருக்குப்பேட்டை கிரிக்கெட் போட்டிகள் போல கால்பந்து போட்டிகள் என பல தலைப்புகள் .... எப்போதாவது மோடி
IRMA IRMAன்னாங்க ரெண்டு நாள் , அது புளோரிடாவை தாண்டக் கூட இல்லை, அதை குருமாவாக்கிட்டு Apple event,Apple park,Steve Jobs என மூன்று தினங்களாயும் trending still ...
அமெரிக்காவில் இருக்கும் வரை twitter என்னுடன் ஒட்டார் என்பது புரிந்து விட்டது.
முகநூலின் முகம் புதைக்க நினைத்தால் , முன்பக்கத்தில் ஒரு உலக வரைபடம் இருக்குமே, அதுவும் இங்கே வந்தவுடன் அமெரிக்கா கண்டத்தைதான் காட்டுகிறது.
(எந்த கண்டத்தில் இருக்கிறோமோ அந்த கண்டம் தெரியும். Facebook பக்கத்தின் அட்ரஸ் பாரில் உள்ள முகவரியுடன் /4 என சேர்த்தால் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அவர்களின் பக்கத்திற்கு கொண்டு செல்லும். அவரை unfriend பண்ண முடியாது , அதனால் நான் அவரை என் friend ஆக்கிக்கவே இல்லை, தற்சமயம் இவர்களது அலுவலகம் இருக்கும் (Menlo park) இடத்தில் இதற்கு முன்னால் SUN JAVA நிறுவனம் இருந்தது என்பதெல்லாம் சில கூடுதல் தகவல்கள்)
முகநூலில் வரும் பதிவுகள் பல விதம்.
குறிப்பாக அடுத்தவர் பதிவிட்டதை அப்படியே repost செய்வது தான் இங்கே வழக்கம். அடிக்கடி காண நேரும் சில வகைப் பதிவுகள்
ஆமென் என type அடிங்க, ஆண்டவன் அருள் பெருகும் , ............ படத்தை உற்றுப் பாருங்கள் என்ன உருவம் தெரிகிறது, 8 என type அடித்து விட்டு படத்தையே பாருங்கள் , இந்த படத்தை கண்ட 12 நொடிகளுக்குள் (இதென்ன 12 நொடி கணக்கு?? புரியவே இல்லை) 10 நண்பர்களுக்கு private messageல forward பண்ணுங்க (ஏன் public ஆக பண்ண கூடாது?)
Paleo diet (வெண்ணையும் காலிபிளவரும் நிறைய சேர்த்துக் கொள்ள சொல்லி ஒரு டயட் சார்ட் பார்த்தேன்), எட்டே நாட்களில் தொப்பையைக் குறைக்க என்ன வழி, எலுமிச்சம் பழத்தின் பயன்பாடுகள்( இதே வேகத்தில் போனால் தலையில் தேய்த்துக் கொள்ள நேரலாம் ) , பாட்டி வைத்தியம் , ABS exercises (தினமும் ஒரு புது பதிவு , இதில் எதை பின்பற்றினால் ஏஞ்சலினா ஜோலி போலவோ தீபிகா படுகோனே போலவோ ஆகலாம்?)
யார் எந்த ஹோட்டலுக்கு சென்று உணவருந்துகிறார்கள் , எந்த கோவிலுக்கு சென்றார்கள் ... யாருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு, யாருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இடையில் sarahah வேற ... Will you marry me ன்னு ரெண்டு நாள் முன்னால் நிச்சயதார்த்தம் ஆகி post போட்ட ஒரு பெண்ணின் கேள்வி ... அதுக்கு தானே நிச்சயதார்த்தம் ?? பையனிடமிருந்து பதிலே காணோம் :) இன்று வரை.
ரயில் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை, முக்கு டீக்கடை, காவல் நிலையங்களில் என காணாமல் போய் , யாராலோ கண்டு பிடிக்கப்பட்டு செய்தியாக பரப்பப் படுபவை. இது போல செய்திகள் மீண்டும் மீண்டும் .
இந்த குழந்தைக்கு cancer ஒரு like போடுங்க , இந்த பாப்பாவோட அப்பா 10 ,000 லைக் கிடைச்சா ஸ்மோக்கிங் விட்டுடுவாராம் , எனக்கு யாருமே இல்லை Happy Birthday சொல்லுங்க ...
சமையல் குறிப்புகள் .. சென்னையில் இருந்தால் இந்திய சமையல் இங்கே கேக் , muffin , salad
நேற்று ஒரு மருத்துவ குறிப்பு படித்தேன் . Bay leaves (பிரிஞ்சி இலை) ஐ வீட்டில் வைத்து எரித்தால் மனஅழுத்தம் குறையும். உடனே எனக்கு மனதில் தோன்றியது ... அமெரிக்காவில் அட்டை கட்டை வீடுகள் . வீட்டினுள்ளே எரித்தால் fire alarm அடித்து ஊரைக் கூட்டி , 911 க்கு தகவல் போய், போலீஸ் வீடு தேடி வருவார்கள். சும்மா இல்லைங்க அவங்க சேவைக்கு ஒரு முறைக்கு $1000 கட்டணம் தரணும். Bill வீடு தேடி வரும்.
இப்போ சொல்லுங்க மனஅழுத்தம் கூடுமா குறையுமா ??
நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் வாடகைக்கு வீடு தேடினால், holidayக்கு அலாஸ்கா போனால் , நமக்கும் அது தொடர்பான பதிவுகள். (செம algorithm,ஆனால் நமக்கு அனாவசியமான தகவல்) Big brother is watching all of us!!
மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை.
சமீபத்தில் படித்த ஒரு ஜோக் .
இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் : இங்கே புதிதாக ஒரு கோர்ஸ் ஆரம்பித்துள்ளோம் , நிறைய சேர்க்கை
நண்பர் :என்ன கோர்ஸ்?
இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் : மீம்ஸ் இன்ஜினியரிங்
யாரும் சொந்தமாக யோசித்து எந்த புது விஷயமும் பதிவிடுவதில்லை என்று நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார் . True.
Twitter is better.Twitter ஒரு தகவல் களஞ்சியம் , அதன் அருமை அதன் நிர்வாகத்திற்கு புரியவில்லை என்பது போல ஒரு கட்டுரை படித்தேன்.
சோசியல் மீடியாவில் நன்மைகளும் உண்டு. இவைகள் தகவல் களஞ்சியங்கள் என்பதில் ஐயமில்லை ஆயினும் கட்டற்ற சுதந்திரம் சமயத்தில் சலிப்படைய செய்வதென்னவோ உண்மை. நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வது நம் கையில்.
Whatsapp தகவல்கள் ஒரு விதம். குரூப் மெசேஜ் பல சமயங்களில் ...அய்யகோ ...
இந்த படத்தை பார்த்தவுடன் 10 பேருக்கு அனுப்பு, இல்லைன்னா ரத்தம் கக்கி சாவாய் ......இங்கும் உண்டு. ( சிறுவயதில் நிஜமென்று நம்பி நானே என் கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறேன் ;) )
போஸ்ட்கார்டு இன்று smartphone ஆக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது அவ்வளவுதான்.
தினம் ஒரு DP இங்கே சகஜம் . DP க்கள் பலவிதம் .
யாராவது மாற்றித் தரும் வரை அதே படம், தினத்திற்கு 3 படம், நடிகர்கள், சாமிகள், கோவில்கள், குழந்தைகள்,பூக்கள், இயற்கை காட்சிகள் ...
அவர்கள் குழந்தையா இருந்தப்போ எடுத்தது, கும்மிருட்டில் உருவமே தெரியாமல் எடுத்தது, முதுகு தெரிய எடுத்தது (கண் திருஷ்டி பட்டுடும்ங்க)...நண்பர் ஒருவரின் DP யைப் பார்த்தாலே அடுத்த தெருவில் ஆரம்பித்து ஆர்டிக் அண்டார்டிக் வரை யார் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
[உங்க necklace சூப்பர், வைரமா ? எங்க வாங்கினீங்க ? _ பெண்கள்
அமெரிக்கால இருக்கீங்களா இல்லை இந்தியா? aeroplane படம் DP போட்டிருக்கீங்களே ? _ஆண்கள் ]
Whatsapp ல் Statusன்னு வேற புது வசதி. அதிலும் மக்கள் படம், பொன்மொழிகள்னு போட்டு கொளுத்திடறாங்க. Bitmoji கார்ட்டூன்ஸ் வேற ... playstore போனாலே 100 app .
you tube பக்கம் போனால் அங்கே வேறு மாதிரி ....
Daily trending videos .....
ஜஸ்டின் பைபர் பாடிய Despacito பாடலுக்கு நம்ம மக்கள் நடனம் ஆடி, கர்நாடக இசையின் ஸ்வரங்களை சேர்த்துப் பாடி, Cello வில் வாசித்து, தெலுங்கு கன்னடம் தமிழ் என அதனுடன் கலந்து பாடி .... விதம் விதமான விடீயோக்களை பதிவிட்டிருக்கிறார்கள். . Ed sheeran பாடிய Shape of you வும் மக்கள் கையில் கிடந்து பாடாய் படுது.
நம்மிடம் இல்லாத இசையா நடனமா?
மலர்கள் கேட்டேன் .... நல்லை அல்லை ... கிடார் நோட்ஸ் , கர்னாடிக் நோட்ஸ் ,பியானோ நோட்ஸ் , பலரும் வேறு பாட்டுக்களுடன் பாடி ஆடி .....மக்கள் எதையும் விட்டு வைப்பதில்லை .
IDEA short films (5 ,10 ,15 நிமிட குறும்படங்கள்) , கருத்துள்ள விடீயோக்கள் என சென்னையில் பார்ப்பேன். தற்சமயம் அவைகள் trendல் இல்லையா அல்லது நான் trendல் இல்லையா ?
ஜிமிக்கி கம்மல் ......

No comments:
Post a Comment