Saturday, 16 September 2017

என்னவென்று சொல்வதம்மா

சென்னை மாநகர வாசிகளால் உனக்கென்னப்பா வெய்யிலுக்கு தப்பி அமெரிக்கா போறே என்ற பொருமல் எந்த தேவதையின் காதில் விழுந்ததோ ....

வெயிற்காலத்தில் முதல் முறையாக அமெரிக்க பயணம்.  .

மே மாதம் முதல் வாரம். வந்திறங்கியதும் பிரிட்ஜ் உள்ளே  இருப்பது போன்ற அந்த குளுமை காணவில்லை .ஒவ்வொரு முறை சான்பிரான்சிஸ்கோவில் விமானம் தரை இறங்கியதும் சக அமெரிக்க பயணிகள் Its sunny.Have a  great  day என வாழ்த்துவார்கள். இம்முறை யாரும் வாயே திறக்கலை அப்பவே நான் சுதாரிச்சிருக்க வேணாம்  ...ஹ்ம்ம்ம்

வசந்த காலத்தின் இறுதி கட்டமாக எங்கெங்கும் பச்சை பசுமை . கத்தரிப்பூ நிறத்தில் பூக்கள்.  ஒவ்வொரு பருவ நிலைக்கும் மாறுபட்ட நிறங்களில் பூக்கள் பூக்கும்
எங்கெங்கும் ராஜாக்களும் செம்பருத்தியும் விதம் விதமான நிறங்களில்.

ஜூன்  ஆரம்பம் .  வெய்யிலின் தாக்கம் ஆரம்பம். குடிக்கும் தண்ணீர் உடம்பில் ஒட்டாமல் வெளியேறும். இந்த ஊர் மக்கள் சொல்வது போல சொன்னால் its weird (இவங்களுக்கு எல்லாமே weird தான்றது வேறு விஷயம் )

இங்கே 80  டிகிரி க்கே சென்னையின் 100 டிகிரிக்கு சமமான வெப்பம். அவ்வப்போது வியர்வை. இரவுகளில் அய்யகோ.... குளிர்கால உடைகளை பெட்டியின் அடிப்பாகத்தில் வைத்து நம்ம ஊர் ஆடைகளை அணிய ஆரம்பித்தேன்.... இப்படி சில நாட்கள்.

பள்ளிகளுக்கு  ஜூன் 10 - ஆகஸ்ட் 13 விடுமுறை. வெய்யில் காலத்தில் வெளியில் விளையாட முடியாது என்பதால், நூலகங்களில் நாங்கள் A /C போடுகிறோம் அனைவரும் இங்கே வாங்கன்னு அழைப்பு மேல் அழைப்பு விடுக்கிறார்கள்.

அடுத்த சில நாட்களில், குளிர ஆரம்பித்தது. வெய்யில் 68 -70 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் .  பெட்டிக்கு அடியில் போன ஆடைகள் மீண்டும் மேலே.

அடுத்த சில நாட்கள் காற்றுடன் கூடிய மிதமான வெய்யில். கடைக்குச் சென்று shrug எனப்படும் லேசான கம்பளி ஆடை வாங்கி அணிய ஆரம்பித்தேன்.

ஜூலையில் வெய்யில்  ஆரம்பித்தது. . மேலே உயரே உச்சியிலே ....102  டிகிரி பாரன்ஹீட் வெப்பம் .  Northern hemisphere வெய்யில் . மதியம் 3 - 7 தான் உச்சத்தில் இருக்கும். 8 .30 க்கு அஸ்தமனம். 10 மணி ஆனாலும் வெளிச்சம்.  மீண்டும் 4 மணிக்கே விடியத் தொடங்கும். ( பாட்டி இன்னும் sun மறையவே இல்லை , எதுக்கு தூங்க சொல்றீங்க _ சின்ன பேரன் )

ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் twitter மற்றும் பல பத்திரிக்கைகளில் "summer is about to end " என்று சோக கீதம் பாடி இருந்தார்கள். ஆங்கில இலக்கியத்தில் படித்த பல கவிதைகள் நினைவுக்கு வந்தன. குளிர் நாடுகளில் வெய்யிற் காலம் என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும்  metaphor குளிர் காலம் என்பது துக்கம் , இறப்பு , சோகம் எனக் கொள்ளப் படுகிறது.

செப்டம்பர் 1 மற்றும் 2  தேதிகளில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூபர்டினோவில் . வருடம் முழுவதும் கம்பளி ஆடைகள் இல்லாமல் இருக்க முடியாத சான் பிரான்சிஸ்கோ நகரில் ௧௦௨ டிகிரி பாரன்ஹீட் வெப்பம்  .
ஹீட் wave alert , red alert என்று செய்திகள் அலற, வீட்டிற்குள் பிள்ளைகள் கதற ...
aircon , 4 table fans .... எதுவும் உரைக்கவில்லை. Asphalt சுவர்களும் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் சூட்டை உள்ளே வாங்கி வெளியே விடாமல்.... (இவ்வகை வீடுகள் குளிர் நாட்களுக்கு, நாடுகளுக்கு  மட்டுமே ஏற்றவை )

முக நூலில் 106 என்று ஸ்டேட்டஸ் போட்டேன் (அப்போது 107 டிகிரி போகும் என்று நினைக்கவில்லை )  சென்னையில் மழை , சிங்கப்பூரில் குளிர்சாதனப் பெட்டியே உபயோக படுத்தாத அளவுக்கு இரவுகள்,east coast மக்கள் இங்கே குளிர் அப்படின்னு comment போட்டு என்னை மேலும் சூடாக்கினார்கள்.

பின்புறம் உள்ள பூங்காவில், உச்சி வெய்யில் மண்டையைப்  பிளந்து கொண்டிருக்கும் வேளையிலும் பிள்ளைகள்  மிகுந்த உற்சாகத்துடன் கால் பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.பல மக்கள் handphone , laptop சகிதம் இருப்பார்கள். சில மக்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு  வெய்யில் (குளிர்??) காய்ந்து கொண்டிருப்பார்கள், இதெல்லாம் எங்களுக்கு ஜகஜமப்பா ரீதியில். பிறந்த நாள்  விழாக்களுக்கும் potluck விருந்துகளுக்கும் பஞ்சமே இல்லை. (நண்பர் ஒருவரது comment : முதல் நாள் சமைத்து வைத்ததை வரும்போது microwave அடுப்பில் சுடவைத்து டப்பாவில்   போட்டு கொண்டு வருவார்கள்)

வியட்நாம், சீனா நாடுகளை சேர்ந்த வயதில் மூத்த ஆண்களும் பெண்களும் இசைக்கு ஏற்ப நடனம் (உடற்பயிற்சி ) செய்து கொண்டு இருப்பார்கள். மாலை 5 ஆனதும் தென்னிந்தியர்கள் , வடஇந்தியர்கள் , சீனர்கள் என பல குழுக்கள் நடைப் பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி (தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழிகளும் கலந்து கட்டி அனைவருக்கும் புரியும் படி பேசும் பயிற்சி ). சிலர் இந்த வெய்யிலுக்கு ஸ்வெட்டர் சால்வை சகிதம் வருவார்கள்.

weather .com மிக சரியாக கணிக்கிறது. 7  மணிக்கு drizzling  என்றால் கண்டிப்பாக லேசான தூறல் இருக்கும்.(என் சொந்த அனுபவம்)

மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் குளிர், கைகால்கள் விறைத்துப் போகின்றன . பகலில் cloudy . IRMA வின் புண்ணியத்தில்.
புளோரிடா மக்கள் வெவ்வேறு ஊர்களுக்கு வெளியேறி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் , இந்த குளிரையும் அனுபவிக்க மனமில்லை.

இலையுதிர் காலம் ஆரம்பிக்கிறது. அதிகார பூர்வமாக செப்டெம்பர் 22 முதல்.
maple மர இலைகள் நிறம் மாறாத தொடங்கி விட்டன .. ஆயினும் weather.com  இல்  80 + தான்

மக்களுக்கான என் நேற்றைய ஆசீர்வாதம் : நீண்ட ஆயுளுடனும் குறிப்பாக summer இல் மிகுந்த ஆரோக்கியத்துடனும் இருங்க ....

வெய்யில் தாங்கலை.... ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா....

சொர்க்கமே என்றாலும்...... நம்ம ஊரில் A/C கொஞ்சமாவது உறைக்குமே










No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...