Saturday, 16 September 2017

கடைக்கு போலாம் கைவீசு .....

பல வருடங்களுக்கு முன்பு .....

வெளிநாட்டில் வசிக்கும் உறவினர் மற்றும் நண்பர்கள் , ஊருக்கு வரும் போது பரிசுப் பொருட்கள் வாங்கி வருவார்கள். வெளிநாடு என்பது அரேபிய நாடுகள், இலங்கை, பர்மா ,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து என கோபால் பல்பொடி range தான் அதிகம் இருக்கும். அமெரிக்காவெல்லாம் மிக அரிது . அமெரிக்காவென்றால் அதிக பட்ச அன்பின் வெளிப்பாடாக ஒரு picture postcard அனுப்புவார்கள்.

அரேபிய நண்பர்கள் perfumes (ஒரு விதமான மணத்துடன் இருக்கும்) மற்றும் சேலைகள் வாங்கி வந்து பரிசளிப்பார்கள். மற்ற கிழக்காசிய நாடுகளில் இருந்து chocolates , ரொட்டி மிட்டாய் என்றழைக்கப்படும் wafers , சிறு  பிள்ளைகளுக்கு ஆடைகள்.   Kit kat chocalate bar  முதன் முதலில் சிங்கப்பூரில் விற்கப்பட்ட போது நிறைய வாங்கி வந்து தந்தார்கள். ஆசையுடன் அக்கம் பக்கத்தாருக்கு கொடுத்தது இன்னும் மறக்கவில்லை.

சரி ...flash back போதும்........

இப்போதெல்லாம் அமெரிக்கா வந்து செல்வது என்பது வாசலுக்கும் கொல்லைக்கும் நடப்பது போல ஆகிவிட்டது. (அனைத்து கண்டங்களுக்கும் இது பொருந்தும் )

ஊரின் அமைப்பு பற்றிய ஒரு சிறு அறிமுகம் முதலில் ....

அமெரிக்காவில் வீடுகள் ஒரு பகுதியிலும் கடைகள் பல மைல்கள் தள்ளி வேறு பகுதியிலும் இருக்கும். இந்தியா போல பெட்டிகடை, முக்கு கடை, நாடார் அண்ணாச்சி கடை, நாயர் டீக்கடை ,கையேந்தி பவன் எதுவும் இல்லை. கடைகளும் சிறிய அளவில் இல்லை. பெரிய பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் தான்.

Wholesale - Cotsco , உணவு பொருட்கள் - Safeway , சாப்பாடு - subway , McDonald , General goods -Target , Walmart , Stationery - Staples , Art and Crafts - Michaels   உதாரணத்திற்கு சில .
அவை தவிர இந்தியன் ஸ்டோர்ஸ், Saravana bhavan,aappa kadai, anjappar ஆங்காங்கே உண்டு. இந்தியர்கள் உண்ணும்  காய்கறிகள் ,பழங்கள், கீரைகள், மளிகைப் பொருட்கள் , உணவுப் பொருட்கள், சாட் உணவுகள் என கிடைக்கும். இதே போல சீனர்கள் ஜப்பானியர்கள் என அவரவருக்கு ஏற்ற கடைகளும் உண்டு.

கடை எல்லாம் சரிதான். ஏதேனும் பொருள் வாங்கணும்னா எப்படி போவது ?  போக்குவரத்துக்கு அவரவரே கார் ஓட்டி செல்ல வேண்டும். மகளா மருமகனா?  சஸ்பென்ஸ் !! (patti, don't you know driving? press the accelator with one leg, brake with another leg, hold the steering wheel with one hand ..._ Niece's 3 year old son)

வாரம் முழுவதும் தேவையான பொருட்களின் லிஸ்ட் தயாராகும். வார இறுதியில் பால் ,தயிர் என லிஸ்டில் இருக்கும் பொருட்களை வாங்கி வந்து வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பொருள் ஒவ்வொரு கடையில் கிடைக்கும். அநேகமாக standard size . Deal வரும் சமயம் பலரும் ஒரே நிற ஆடைகள் அணிந்திருப்பார்கள். ஜூலை 4th  அன்று ஒரு பூங்காவில் பல  பல ஆண் குழந்தைகள் என் பேரன்கள் அணிந்திருந்த சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டையில் இருந்தார்கள். அநேகமாக online purchase தான். (உபயம் google express, amazon)

ஒரு பொருள் வாங்க பல நாட்கள் ஆகும் சமயத்தில் .
கடந்த முறை கூபர்டினோ வந்தபோது , என் மகனுக்கு ஒரு bike  (நம்ம bicycle தாங்க) வாங்க வேண்டி இருந்தது. Walmart  சென்று பார்த்த போது ஸ்டாக் இல்லை. ஆர்டர் போட்டு விட்டு வந்து விட்டார்கள். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பிறகு , கடைக்கு பொருட்கள்  வந்த  பிறகு அதை assemble செய்து விட்டு , ஈமெயில் அனுப்பினார்கள். மருமகனும் மகனும் SUV யில் சென்று அந்த bike ஐ வீட்டிற்கு எடுத்து வந்தார்கள். (கடைகள் பல மைல் தொலைவில் என்பதை நினைவில் கொள்க )

ஒரு உபரி தகவல் இங்கே.

சென்னையிலிருந்து இயங்கும் கருட வேகா கூரியர் சேவையில் வேலை செய்யும் ஒரு பெண்மணி அமெரிக்காவின் பல ஊர்களுக்கும் இந்தியாவிலிருந்து மாதாந்திர மளிகை சாமான்கள் அனுப்பப் படுவதாகக் கூறினார். ஒவ்வொரு பொருளும் 2  கிலோ அனுப்பலாம். காரணம் கேட்டபோது அவர் சொன்னது, பல ஊர்களில் கடைகள் 2  மணி நேரப்பயணத்தில் உள்ளதால் , நேரம் பணம் அலைச்சல் எல்லாம் இதனால் மிச்சப்படுவதாக கூறினார். குறிப்பாக East Coast . Silicon valley மாம்பலம் , மைலாப்பூர் போல. கடைகள் மிக அருகில் ,  மைல் தொலைவிற்குள் உள்ளன .

ஊருக்கு வேண்டிய பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்குவது இன்னும் சிரமமான வேலை. பள்ளி அலுவலகம் செல்லும் போது உடன் செல்ல  முடியாது , திரும்பி வரும் நேரம் (ஒவ்வொரு பேரனுக்கும் ஒவ்வொரு dispersal time .) பயல்களுக்கு பசி வந்துடும். ஷாப்பிங் போனால் அதகளம் தான்.  இரவு 8 மணி வரை ஏதேதோ வகுப்புகள். ஏற்றி இறக்கி ....
இடையில் கிடைக்கும் 10  நிமிடத்தில் நம்மை உடன் அழைத்து சென்று , சீக்கிரமா வாங்குங்க என்பார் மகள். அவ்வளவு பெரிய கடையில் நமக்கு வேண்டிய பொருள் எங்கே இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கவே 10 நிமிடம் போதாது , எங்கே வாங்கறது? எதற்கு போனோம் என்பதே மறந்து போகும் அநேகமாய் .

தற்சமயம் இங்கே uber இல் செல்ல முடியும் என்றாலும் தொலைபேசி இல்லாத காரணத்தால் தனியாக அனுப்ப மாட்டார்கள். (whatsapp  wifi  புண்ணியத்தில் )     நம்  கைப்பணத்தை செலவு செய்ய விடமாட்டார்கள். அவர்கள் card தான். எந்த கடையில் என்ன discount , deal , எந்த கூப்பன்(கூப்பன் இல்லே அது கூப்பான் ) எதற்கு செல்லும் , யாமறியோம் பராபரமே ! (பண்டிகை கால விற்பனை சமயத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அம்மா , வாங்கி வைக்கிறேன்)

துணிகள் நன்றாக இருப்பதாக எண்ணி எடுத்து பார்த்தால் Made in India .

எந்தக் கடையும் நடந்து செல்லும் தூரத்தில் இல்லை .....

 மிக சில இடங்களுக்கு எப்போதாவது ஒரு பேருந்து அல்லது ரயில் செல்லும். நமக்கு தேவையான கடைகள் அந்த பகுதியில் இருக்காதே ...

(இங்கு வந்து செல்லும் அனைத்து பெற்றோருக்கும் இவைகள்  பொருந்தும்.)

4 மாதங்கள் இருக்க போகிறோம் என்றால்  எப்போதெல்லாம் கடைகளுக்கு அழைத்து செல்கிறார்களோ அப்போதே ஒவ்வொன்றாக வாங்கி வைக்கணும். ஒரு கடை இல்லைன்னா மறறொரு கடை என்ற பேச்சே இல்லை.

கடைசி நிமிட ஷாப்பிங் என்பது சொல்லில் அடங்காத சிரமத்திற்கு உரியது. பச்சை நிறத்தில் கோடு  போட்ட வெள்ளை சட்டை, 7  ஆம் number செருப்பு .... என்பதெல்லாம் வேலைக்கே ஆகாது. (ஹ்ம்ம்ம் ....ஒரு செருப்பு , அதை கூட வாங்கி வர முடியலை) 10 மைல் பயணித்து கடைக்கு போனாலும் கடையில் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். வேறொரு branch க்கு பயணித்துக் கொண்டிருந்தால் விமானம் நாம் இல்லாமலே கிளம்பி விடும் .

பல பிரச்சினைகளுக்கு இடையில் நாங்கள் வாங்கி வைத்து தரும் chocalate க்கு கிடைக்கும் கமெண்ட் : இதெல்லாம் இங்கே தெரு முனை கடைலையே கிடைக்குது எதுக்கு சிரமப்பட்டு தூக்கிட்டு வந்தீங்க
Food preserving / freezer  boxes : கல் உப்பு போட்டு சமையல் மேடையில் அடுப்புக்கு அருகில் வீற்றிருக்கும் நாம் அடுத்த முறை பார்க்கும்  போது
முத்து பவழம் etc : நீ குடுத்த strand ஐ எங்கே வெச்சேன்னே நினைவில்லை ( எங்கு எப்போது bead show நடைபெறுகிறது என்று பார்த்து ,போக வர 120 மைல்கள் பயணம் செய்து வாங்கி வந்தது யாருக்கும் தெரியாது)

வார இறுதி நாட்களுக்காகக் காத்திருக்கிறேன் ....
Shopping செய்ய அழைத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ...வார இறுதி நாட்களும் பிஸியான நாட்களே ... கோவில், பாட்டு வகுப்பு, சமஸ்க்ருத வகுப்பு, குமான் வகுப்பு, தமிழ் வகுப்பு, ஸ்லோக வகுப்பு,பிறந்த நாள் பார்ட்டிகள் , பள்ளி விழாக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங்குகள் ........

ராமரும் கிருஷ்ணரும் விநாயகரும் தம் பிறந்த நாளைக் கொண்டாட வார இறுதி நாட்களுக்காகக் காத்திருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம் ??

அமெரிக்கவாழ் உறவினர்களே நண்பர்களே ....

Tulsi  brand  California Prunes எங்கே கிடைக்கும் ?

என்னவென்று சொல்வதம்மா

சென்னை மாநகர வாசிகளால் உனக்கென்னப்பா வெய்யிலுக்கு தப்பி அமெரிக்கா போறே என்ற பொருமல் எந்த தேவதையின் காதில் விழுந்ததோ ....

வெயிற்காலத்தில் முதல் முறையாக அமெரிக்க பயணம்.  .

மே மாதம் முதல் வாரம். வந்திறங்கியதும் பிரிட்ஜ் உள்ளே  இருப்பது போன்ற அந்த குளுமை காணவில்லை .ஒவ்வொரு முறை சான்பிரான்சிஸ்கோவில் விமானம் தரை இறங்கியதும் சக அமெரிக்க பயணிகள் Its sunny.Have a  great  day என வாழ்த்துவார்கள். இம்முறை யாரும் வாயே திறக்கலை அப்பவே நான் சுதாரிச்சிருக்க வேணாம்  ...ஹ்ம்ம்ம்

வசந்த காலத்தின் இறுதி கட்டமாக எங்கெங்கும் பச்சை பசுமை . கத்தரிப்பூ நிறத்தில் பூக்கள்.  ஒவ்வொரு பருவ நிலைக்கும் மாறுபட்ட நிறங்களில் பூக்கள் பூக்கும்
எங்கெங்கும் ராஜாக்களும் செம்பருத்தியும் விதம் விதமான நிறங்களில்.

ஜூன்  ஆரம்பம் .  வெய்யிலின் தாக்கம் ஆரம்பம். குடிக்கும் தண்ணீர் உடம்பில் ஒட்டாமல் வெளியேறும். இந்த ஊர் மக்கள் சொல்வது போல சொன்னால் its weird (இவங்களுக்கு எல்லாமே weird தான்றது வேறு விஷயம் )

இங்கே 80  டிகிரி க்கே சென்னையின் 100 டிகிரிக்கு சமமான வெப்பம். அவ்வப்போது வியர்வை. இரவுகளில் அய்யகோ.... குளிர்கால உடைகளை பெட்டியின் அடிப்பாகத்தில் வைத்து நம்ம ஊர் ஆடைகளை அணிய ஆரம்பித்தேன்.... இப்படி சில நாட்கள்.

பள்ளிகளுக்கு  ஜூன் 10 - ஆகஸ்ட் 13 விடுமுறை. வெய்யில் காலத்தில் வெளியில் விளையாட முடியாது என்பதால், நூலகங்களில் நாங்கள் A /C போடுகிறோம் அனைவரும் இங்கே வாங்கன்னு அழைப்பு மேல் அழைப்பு விடுக்கிறார்கள்.

அடுத்த சில நாட்களில், குளிர ஆரம்பித்தது. வெய்யில் 68 -70 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் .  பெட்டிக்கு அடியில் போன ஆடைகள் மீண்டும் மேலே.

அடுத்த சில நாட்கள் காற்றுடன் கூடிய மிதமான வெய்யில். கடைக்குச் சென்று shrug எனப்படும் லேசான கம்பளி ஆடை வாங்கி அணிய ஆரம்பித்தேன்.

ஜூலையில் வெய்யில்  ஆரம்பித்தது. . மேலே உயரே உச்சியிலே ....102  டிகிரி பாரன்ஹீட் வெப்பம் .  Northern hemisphere வெய்யில் . மதியம் 3 - 7 தான் உச்சத்தில் இருக்கும். 8 .30 க்கு அஸ்தமனம். 10 மணி ஆனாலும் வெளிச்சம்.  மீண்டும் 4 மணிக்கே விடியத் தொடங்கும். ( பாட்டி இன்னும் sun மறையவே இல்லை , எதுக்கு தூங்க சொல்றீங்க _ சின்ன பேரன் )

ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் twitter மற்றும் பல பத்திரிக்கைகளில் "summer is about to end " என்று சோக கீதம் பாடி இருந்தார்கள். ஆங்கில இலக்கியத்தில் படித்த பல கவிதைகள் நினைவுக்கு வந்தன. குளிர் நாடுகளில் வெய்யிற் காலம் என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும்  metaphor குளிர் காலம் என்பது துக்கம் , இறப்பு , சோகம் எனக் கொள்ளப் படுகிறது.

செப்டம்பர் 1 மற்றும் 2  தேதிகளில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூபர்டினோவில் . வருடம் முழுவதும் கம்பளி ஆடைகள் இல்லாமல் இருக்க முடியாத சான் பிரான்சிஸ்கோ நகரில் ௧௦௨ டிகிரி பாரன்ஹீட் வெப்பம்  .
ஹீட் wave alert , red alert என்று செய்திகள் அலற, வீட்டிற்குள் பிள்ளைகள் கதற ...
aircon , 4 table fans .... எதுவும் உரைக்கவில்லை. Asphalt சுவர்களும் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் சூட்டை உள்ளே வாங்கி வெளியே விடாமல்.... (இவ்வகை வீடுகள் குளிர் நாட்களுக்கு, நாடுகளுக்கு  மட்டுமே ஏற்றவை )

முக நூலில் 106 என்று ஸ்டேட்டஸ் போட்டேன் (அப்போது 107 டிகிரி போகும் என்று நினைக்கவில்லை )  சென்னையில் மழை , சிங்கப்பூரில் குளிர்சாதனப் பெட்டியே உபயோக படுத்தாத அளவுக்கு இரவுகள்,east coast மக்கள் இங்கே குளிர் அப்படின்னு comment போட்டு என்னை மேலும் சூடாக்கினார்கள்.

பின்புறம் உள்ள பூங்காவில், உச்சி வெய்யில் மண்டையைப்  பிளந்து கொண்டிருக்கும் வேளையிலும் பிள்ளைகள்  மிகுந்த உற்சாகத்துடன் கால் பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.பல மக்கள் handphone , laptop சகிதம் இருப்பார்கள். சில மக்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு  வெய்யில் (குளிர்??) காய்ந்து கொண்டிருப்பார்கள், இதெல்லாம் எங்களுக்கு ஜகஜமப்பா ரீதியில். பிறந்த நாள்  விழாக்களுக்கும் potluck விருந்துகளுக்கும் பஞ்சமே இல்லை. (நண்பர் ஒருவரது comment : முதல் நாள் சமைத்து வைத்ததை வரும்போது microwave அடுப்பில் சுடவைத்து டப்பாவில்   போட்டு கொண்டு வருவார்கள்)

வியட்நாம், சீனா நாடுகளை சேர்ந்த வயதில் மூத்த ஆண்களும் பெண்களும் இசைக்கு ஏற்ப நடனம் (உடற்பயிற்சி ) செய்து கொண்டு இருப்பார்கள். மாலை 5 ஆனதும் தென்னிந்தியர்கள் , வடஇந்தியர்கள் , சீனர்கள் என பல குழுக்கள் நடைப் பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி (தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழிகளும் கலந்து கட்டி அனைவருக்கும் புரியும் படி பேசும் பயிற்சி ). சிலர் இந்த வெய்யிலுக்கு ஸ்வெட்டர் சால்வை சகிதம் வருவார்கள்.

weather .com மிக சரியாக கணிக்கிறது. 7  மணிக்கு drizzling  என்றால் கண்டிப்பாக லேசான தூறல் இருக்கும்.(என் சொந்த அனுபவம்)

மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் குளிர், கைகால்கள் விறைத்துப் போகின்றன . பகலில் cloudy . IRMA வின் புண்ணியத்தில்.
புளோரிடா மக்கள் வெவ்வேறு ஊர்களுக்கு வெளியேறி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் , இந்த குளிரையும் அனுபவிக்க மனமில்லை.

இலையுதிர் காலம் ஆரம்பிக்கிறது. அதிகார பூர்வமாக செப்டெம்பர் 22 முதல்.
maple மர இலைகள் நிறம் மாறாத தொடங்கி விட்டன .. ஆயினும் weather.com  இல்  80 + தான்

மக்களுக்கான என் நேற்றைய ஆசீர்வாதம் : நீண்ட ஆயுளுடனும் குறிப்பாக summer இல் மிகுந்த ஆரோக்கியத்துடனும் இருங்க ....

வெய்யில் தாங்கலை.... ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா....

சொர்க்கமே என்றாலும்...... நம்ம ஊரில் A/C கொஞ்சமாவது உறைக்குமே










Friday feelings

9/9/99 -----முதன்முதலாக வலைத்தளத்துக்குள் நான் நுழைந்த நாள். Hotmail கணக்கு ஆரம்பித்து , படிப்படியாக பலவும் கற்றுக் கொண்டேன். கொண்டிருக்கிறேன் .

Social media எனப்படும் Twitter , Facebook போன்றவை பிரபலமாகாத காலகட்டம்.

 ஒரு ஆர்வக்கோளாறில் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்த அதே நாளில் அதிக options இல்லாததால் ,அன்றே  அந்தக் கணக்கை delete செய்து விட்டேன்.  முதல் 4 வருடங்கள் Facebook இன் பயன்பாடு என்னவென்றே பிடிபடவில்லை . instagram,shtyle,yahoo, Google +,Linked In, Pinterest  ....  எங்கே புதுக்கணக்கு தொடங்கினாலும் அங்கே நம்ம  பழைய நட்பு வட்டம் தான் இருந்தது, இருக்கிறது . கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, Facebook மட்டும் தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்தேன்.

கடந்த வருடத்தில் நடந்த பரபரப்பான பல சம்பவங்களைத் தொடர்ந்து, நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில்  மீண்டும் twitter.பரபரவென பலவிஷயங்கள் வந்து கொட்டுகிறது. பல புது options. புரிந்தும் புரியாமலும் வந்து போகும் பதிவுகள் பகிர்வுகள்.
முகநூலிலும் பலப்பல பதிவுகள்.  மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. ( நம் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் அனைவரது பதிவுகளும் தற்போது வந்து போவதில்லை, நமக்கு தேவையானதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம் , நமக்கு தேவையே இல்லாததை Facebook தானாகவே கொட்டுதே ?)
Whatsapp , /You tube .....

இந்தியாவில் இருந்தவரை எல்லாம் நல்ல விதமாக இருந்தது. அமெரிக்கா வந்த பிறகு , மேற்கண்ட நிலையில் நிறைய மாற்றங்கள்.

Twitter நான் தேர்வு செய்து தொடருபவர்களை இங்கே தொடர விடுவதில்லை. தானாகவே அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை Trending ஆக்குகிறது. சில  சுவாரசியமான தலைப்புகளும் வரும்.

நம்ம ஊர் கமல்ஹாசன், சுப்ரமணியம்ஸ்வாமி , மோடிஜி போன்றோர்  என்ன பதிவிடுகிறார்கள் ??? சீமான் என்ன சொல்றார்? இரோம் ஷர்மிளாவிற்கு திருமணம் முடிந்து விட்டதா ? அவர்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே நான் தற்சமயம் .

ட்விட்டரில் சர்வ சகஜமாக இங்கே நான் காணும்  trending தலைப்புககளிலிருந்து சில ....

Sunday memories,monday musings,tuesday thoughts,wednesday wordings,thursday ......., friday ....... saturday ..... என வாரம் முழுவதும் ..... trending headings
4 words about Mr.x , 5 words about how to eat , thoughts about your date ....
சினிமா நடிகர்களின் பிறந்த நாட்கள், தினமும் ஏதாவது அவார்டு , டிரம்ப், KISSING DAY,PANCAKE DAY,HISPANIC HERITAGE MONTH,நான் இது வரை கேள்விப்பட்டிராத பல பிரபலங்கள், நம் ஊர்  கண்ணம்மாபேட்டை vs கொருக்குப்பேட்டை கிரிக்கெட் போட்டிகள் போல கால்பந்து போட்டிகள் என பல தலைப்புகள் .... எப்போதாவது மோடி

IRMA IRMAன்னாங்க ரெண்டு நாள் , அது புளோரிடாவை தாண்டக் கூட இல்லை, அதை குருமாவாக்கிட்டு  Apple event,Apple park,Steve Jobs என மூன்று தினங்களாயும் trending still ...

அமெரிக்காவில் இருக்கும் வரை twitter என்னுடன்  ஒட்டார் என்பது புரிந்து விட்டது.
முகநூலின் முகம் புதைக்க நினைத்தால் , முன்பக்கத்தில் ஒரு உலக வரைபடம் இருக்குமே, அதுவும்  இங்கே வந்தவுடன் அமெரிக்கா கண்டத்தைதான் காட்டுகிறது.

(எந்த கண்டத்தில் இருக்கிறோமோ அந்த கண்டம் தெரியும்.  Facebook பக்கத்தின் அட்ரஸ் பாரில் உள்ள முகவரியுடன் /4  என சேர்த்தால் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அவர்களின் பக்கத்திற்கு கொண்டு செல்லும். அவரை unfriend பண்ண முடியாது , அதனால் நான் அவரை என் friend ஆக்கிக்கவே இல்லை, தற்சமயம் இவர்களது அலுவலகம் இருக்கும் (Menlo park) இடத்தில் இதற்கு முன்னால் SUN JAVA நிறுவனம் இருந்தது  என்பதெல்லாம் சில கூடுதல் தகவல்கள்)

 முகநூலில் வரும் பதிவுகள் பல விதம்.

குறிப்பாக அடுத்தவர் பதிவிட்டதை அப்படியே repost செய்வது தான் இங்கே வழக்கம். அடிக்கடி காண நேரும் சில வகைப் பதிவுகள்

ஆமென் என type அடிங்க, ஆண்டவன் அருள் பெருகும் , ............ படத்தை உற்றுப் பாருங்கள் என்ன உருவம் தெரிகிறது, 8 என type அடித்து விட்டு படத்தையே பாருங்கள் , இந்த படத்தை கண்ட 12 நொடிகளுக்குள் (இதென்ன 12 நொடி கணக்கு?? புரியவே இல்லை) 10 நண்பர்களுக்கு private messageல forward பண்ணுங்க (ஏன் public ஆக பண்ண கூடாது?)

Paleo diet (வெண்ணையும் காலிபிளவரும் நிறைய சேர்த்துக் கொள்ள சொல்லி ஒரு டயட் சார்ட் பார்த்தேன்), எட்டே நாட்களில் தொப்பையைக் குறைக்க என்ன வழி, எலுமிச்சம் பழத்தின் பயன்பாடுகள்( இதே வேகத்தில் போனால் தலையில் தேய்த்துக் கொள்ள நேரலாம் ) , பாட்டி வைத்தியம் , ABS exercises (தினமும் ஒரு புது பதிவு , இதில் எதை பின்பற்றினால் ஏஞ்சலினா ஜோலி போலவோ தீபிகா படுகோனே போலவோ  ஆகலாம்?)

யார் எந்த ஹோட்டலுக்கு சென்று உணவருந்துகிறார்கள் , எந்த கோவிலுக்கு சென்றார்கள் ... யாருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு, யாருக்கு கல்யாணம் ஆயிடுச்சு.  இடையில் sarahah வேற ... Will you marry me ன்னு ரெண்டு நாள் முன்னால் நிச்சயதார்த்தம் ஆகி post போட்ட ஒரு பெண்ணின் கேள்வி ... அதுக்கு தானே நிச்சயதார்த்தம் ?? பையனிடமிருந்து பதிலே காணோம் :) இன்று வரை.

ரயில்  நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை, முக்கு டீக்கடை, காவல் நிலையங்களில் என காணாமல் போய் ,  யாராலோ கண்டு பிடிக்கப்பட்டு செய்தியாக பரப்பப் படுபவை. இது போல செய்திகள் மீண்டும் மீண்டும் .

இந்த குழந்தைக்கு cancer ஒரு like போடுங்க , இந்த பாப்பாவோட அப்பா 10 ,000 லைக் கிடைச்சா ஸ்மோக்கிங் விட்டுடுவாராம் , எனக்கு யாருமே இல்லை Happy Birthday சொல்லுங்க ...

சமையல் குறிப்புகள் .. சென்னையில் இருந்தால் இந்திய சமையல் இங்கே கேக் , muffin , salad

நேற்று ஒரு மருத்துவ குறிப்பு படித்தேன் . Bay leaves (பிரிஞ்சி இலை) ஐ வீட்டில் வைத்து எரித்தால்  மனஅழுத்தம் குறையும். உடனே எனக்கு மனதில் தோன்றியது ... அமெரிக்காவில் அட்டை கட்டை வீடுகள் . வீட்டினுள்ளே எரித்தால் fire alarm அடித்து ஊரைக் கூட்டி , 911 க்கு தகவல் போய், போலீஸ் வீடு தேடி வருவார்கள். சும்மா இல்லைங்க அவங்க சேவைக்கு ஒரு முறைக்கு $1000  கட்டணம் தரணும்.  Bill வீடு தேடி வரும்.
இப்போ சொல்லுங்க மனஅழுத்தம் கூடுமா குறையுமா ??

நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் வாடகைக்கு வீடு தேடினால்,  holidayக்கு அலாஸ்கா போனால் , நமக்கும் அது தொடர்பான பதிவுகள். (செம algorithm,ஆனால் நமக்கு அனாவசியமான தகவல்)  Big brother is watching all of us!!

மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை.
சமீபத்தில் படித்த ஒரு ஜோக் .
இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் : இங்கே புதிதாக ஒரு கோர்ஸ் ஆரம்பித்துள்ளோம் , நிறைய சேர்க்கை
நண்பர் :என்ன கோர்ஸ்?
இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் : மீம்ஸ் இன்ஜினியரிங்

யாரும் சொந்தமாக யோசித்து எந்த புது விஷயமும் பதிவிடுவதில்லை என்று நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார் . True.
Twitter is better.Twitter ஒரு தகவல் களஞ்சியம் , அதன் அருமை அதன் நிர்வாகத்திற்கு புரியவில்லை என்பது போல ஒரு கட்டுரை படித்தேன்.

சோசியல் மீடியாவில் நன்மைகளும் உண்டு. இவைகள் தகவல் களஞ்சியங்கள் என்பதில் ஐயமில்லை ஆயினும் கட்டற்ற சுதந்திரம் சமயத்தில் சலிப்படைய செய்வதென்னவோ உண்மை.  நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வது நம் கையில்.

Whatsapp தகவல்கள் ஒரு விதம். குரூப் மெசேஜ் பல சமயங்களில் ...அய்யகோ ...

இந்த படத்தை பார்த்தவுடன் 10 பேருக்கு அனுப்பு, இல்லைன்னா ரத்தம் கக்கி சாவாய் ......இங்கும் உண்டு. ( சிறுவயதில் நிஜமென்று நம்பி நானே என் கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறேன் ;) )
போஸ்ட்கார்டு இன்று smartphone ஆக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது அவ்வளவுதான்.

தினம் ஒரு DP இங்கே சகஜம் . DP க்கள் பலவிதம் .

யாராவது மாற்றித் தரும் வரை அதே படம், தினத்திற்கு 3 படம், நடிகர்கள், சாமிகள், கோவில்கள், குழந்தைகள்,பூக்கள், இயற்கை காட்சிகள் ...
அவர்கள் குழந்தையா இருந்தப்போ எடுத்தது, கும்மிருட்டில் உருவமே தெரியாமல் எடுத்தது, முதுகு தெரிய எடுத்தது (கண் திருஷ்டி பட்டுடும்ங்க)...நண்பர் ஒருவரின் DP யைப் பார்த்தாலே அடுத்த தெருவில் ஆரம்பித்து ஆர்டிக் அண்டார்டிக் வரை யார் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
[உங்க necklace சூப்பர், வைரமா ? எங்க வாங்கினீங்க ? _ பெண்கள்
அமெரிக்கால இருக்கீங்களா இல்லை இந்தியா? aeroplane  படம்  DP போட்டிருக்கீங்களே ? _ஆண்கள் ]
Whatsapp ல் Statusன்னு வேற புது வசதி. அதிலும் மக்கள் படம், பொன்மொழிகள்னு போட்டு கொளுத்திடறாங்க.  Bitmoji கார்ட்டூன்ஸ் வேற ... playstore போனாலே 100 app .

you tube பக்கம் போனால் அங்கே வேறு மாதிரி ....

Daily trending videos .....

ஜஸ்டின் பைபர் பாடிய  Despacito பாடலுக்கு நம்ம மக்கள் நடனம் ஆடி, கர்நாடக இசையின் ஸ்வரங்களை சேர்த்துப் பாடி, Cello வில் வாசித்து, தெலுங்கு  கன்னடம் தமிழ் என அதனுடன் கலந்து பாடி .... விதம் விதமான விடீயோக்களை பதிவிட்டிருக்கிறார்கள். . Ed sheeran பாடிய Shape of you வும் மக்கள் கையில் கிடந்து பாடாய் படுது.

நம்மிடம் இல்லாத இசையா நடனமா?
மலர்கள் கேட்டேன் .... நல்லை அல்லை ...  கிடார் நோட்ஸ் , கர்னாடிக் நோட்ஸ் ,பியானோ நோட்ஸ் , பலரும் வேறு பாட்டுக்களுடன் பாடி ஆடி .....மக்கள் எதையும் விட்டு வைப்பதில்லை .

IDEA short films (5 ,10 ,15 நிமிட குறும்படங்கள்)  , கருத்துள்ள விடீயோக்கள் என சென்னையில் பார்ப்பேன். தற்சமயம் அவைகள் trendல் இல்லையா அல்லது நான் trendல் இல்லையா ?

ஜிமிக்கி கம்மல் ......

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...