ஒரு திங்கட்கிழமை காலை 9. Monday Blueவுடன் Empty nest syndrome கலந்த உணர்வுடன் நான்.
பகல் நேரத்தில் வீட்டிற்குள்
வந்து செல்லும் ஒரே ஜீவன் ( என் Helpmate cum Soulmate என்று கூட சொல்லலாம்) வர 3 மணி நேரங்கள் இருக்கிறது என்று எண்ணியபடியே தொலைக்காட்சிப் பெட்டியை காண
எண்ணி TV5Monde என்னும் சானலை தேர்ந்தெடுத்தேன். இந்த தொலைக்காட்சி நிறுவனம் கனடா நாட்டு தொலைக்காட்சியுடன் இணைந்து பல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
கனடாவின் Montreal நகரைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி படம் ஓட ஆரம்பித்திருந்தது. 1800 ஆம் ஆண்டிலிருந்து எப்படி பல்வேறு நாட்டு மக்கள் அங்கு குடியேறினார்கள் என்பது பற்றியது.
முதலில் Native Americans குடியேறினார்கள். பிறகு பிரஞ்சுக் காலனியானது. முதலாம் உலகப் போர்
சமயத்தில் ஜெர்மனியிலிருந்து யூதர்கள் கப்பலில் அமெரிக்காவிற்குத்
தப்பி வந்தவர்கள் குடியேறினார்கள். பிறகு, டிரான்ஸ் காண்டினெண்டல் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தினை கனடா அரசாங்கம் முடிவு
செய்த போது, சீனாவின் ஒரு மாகாணத்தில் உள்ள மக்களை (1400 பேர் மட்டும்) வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்.
ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்ததும் கனடா அரசு சீனர்கள் நாட்டுக்குள் வர $50 கட்டணம் விதித்தது. அவர்கள் இல்லாமல்
ரயில்பாதை ஏது என்று உணர்ந்து பின் அந்தக் கட்டணத்தை ரத்து செய்தார்களாம். 1400 சீனர்கள் மட்டும்
தான் இருக்க அனுமதி என்பதால், அவர்களது குடும்பத்தினரைப்
பிரிந்தே அவர்கள் இருக்க நேர்ந்ததாம். எங்கள் கொள்ளுத் தாத்தா
தனிமையில் இறந்தார் என்று சில பேரன்கள் சொன்னார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அந்தக் கடுமையான சட்டம் தளர்த்தப்பட்டு, அவர்களின் குடும்பத்தினர் Montreal நகருக்கு வந்து சேர்ந்து கொண்டார்களாம்.அரசு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
அடுத்த கட்டமாக இத்தாலியர்கள் குடியேறினார்களாம். மார்பிள் சிலைகள் செய்தல், உணவுக்கடைகள் இவர்களுடைய
தொழில்.
காரணமே இல்லாமல் ஜப்பானியர்கள், சீனர்கள் மற்றும் இத்தாலியர்களை POW (Prisoners of war) ஆக ஒரு சிறிய கிராமத்தில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டார்கள். இத்தாலியர்கள் தாங்களே உணவு தயாரித்துக் கொள்ள விரும்பியதால் அவர்களது இல்லத்திலிருந்து பாஸ்தா மற்றும் தக்காளியை பெற்றுக் கொள்ள அனுமதி கொடுத்தது அரசு. இன்று வரை என்ன காரணத்திற்காக அவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டார்கள் ஏன் விடுவிக்கப்
பட்டார்கள் என்று சொல்லப்படவில்லை. அரசு இன்னும் இவர்களிடம்
மன்னிப்பும் கேட்கவில்லையாம். அவர்களின் பழக்க வழக்கங்கள், கலைகள், விழாக்கள் பற்றியும் கூறினார்கள்.
தற்காலத்தில் இந்தியர்ளும் இலங்கைத் தமிழர்களும் கூட அங்கே புலம் பெயர்ந்து வசிக்கிறார்கள்.
இந்த நகரத்தின் நதி செயிண்ட் லாரண்ட். இந்த நதியை சுற்றியே பல்வேறு நாட்டு மக்களும் ஒற்றுமையாக இன்றளவும் வசித்து வருவதாகக்
கூறி முடித்தார்கள். அருமையான தகவல்கள். இது பற்றி என் தோழிகளுடன் பகிர்ந்து கொண்டேன்.
அடுத்து??? முக நூலுக்குத் தாவினேன்.
முதல் அப்டேட் .. தோழியின் தோழி போட்டிருந்த
பதிவு!
Feeling Whattay!! புத்தகக் கண் காட்சியில் என் புத்தகம் 300 விற்றுப் போயிருப்பதாக அறிந்தேன்.
Whattay என்றால் என்ன அர்த்தம்?? திரு திரு.
கூகிள் ஐயனார் சொன்னது : எதிர்பாராத நிகழ்வால்
ஏற்பட்ட மகிழ்ச்சி.
மேலும் சில நிமிடங்கள் முக நூலில் முகம் புதைத்துப் பொழுதைக் கழித்தேன்.
12.00 ..என் Helpmate வந்துவிட்டார். அவருக்கு கதவு திறந்து விட்டுட்டு வருகிறேன்...
அவர் வேலைகளை முடித்து விட்டு வருவதற்குள் இந்த Helpmate" என்ற வார்த்தை எப்படி
வந்ததென்று பார்ப்போம்.
இதன் பின்னால் ஒரு குட்டி சரித்திரமே இருக்கிறது. 1611 ல் வெளியான பைபிள் பதிப்பில் ஏவாள் ஆதாமிற்கு "Helpmeet" என இருந்தது. ஏவாள் ஆதாமின் வாழ்க்கைத் துணை என்பது பொருள். அது தவறுதலாகப் புரிந்து கொள்ளப் பட்டு Helpmate என மருவியது. Helpmate என்பதன் பொருள் "உதவி செய்பவர்" என்ற பொருளில் தற்காலத்தில் பயன்படுத்தப் படுகிறது. (ஆங்கில இலக்கியத்தில் வார்த்தைகள் எப்படி உருவாகின என்ற தலைப்பின் கீழ் வரும் "Popular Misunderstanding" என்னும் தலைப்பின்
கீழ் அமைந்த உதாரணம் இது)
சரி Helpmate வேலை முடித்து விட்டார். படித்தவர். வாழ்க்கை அனுபவம் மிக்கவர். என்னை விட 3 வயது மூத்தவராயினும் மரியாதை நிமித்தம் அக்கா என்றே அழைப்பார். மற்றவர்களிடம் அம்மா என்றே குறிப்பிடுவார். Officerன் மனைவி என்பதால் கூடுதல் மரியாதை.
தினமும் தான் பத்திரிக்கையில் படித்த, தொலைக்காட்சியில் கேட்ட செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொள்வார். என் கருத்துக்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார். ஆரோக்கியமான விவாதங்கள் , கருத்துப் பரிமாறல்கள்
மட்டுமே எங்களிடையே. இன்று என்ன தலைப்பு எடுத்து விவாதிக்கிறார் என பார்ப்போமா?
"அக்கா..இன்னிக்கு (ஜூலை 11, 2016) பேப்பரில் ஒட்டி பிறந்த இரட்டைப் பெண்களைப் (Conjoined
twins) பற்றிய செய்தி படித்தேன். முதுகில் ஒட்டி இருக்கு, ஆபரேஷன் பண்ணி பிரிக்கணும்னா நிறைய பணம் கேக்கறாங்க என் கிட்டே இல்லை அப்படீன்னு
அந்தப் பொண்ணுங்களோட அப்பா சொல்லி இருக்கார். பாவம் அக்கா.
ஏன் அப்படி பிறக்கறாங்க? பிரிக்க முடியாதா? பிரிச்சா என்ன ஆகும்? (நடிகர் சூர்யா மாற்றான் என்ற படத்துல இப்படி நடிச்சிருக்கார், கண்டிப்பா பாருங்க, உங்களுக்குப் புரியும்)
கரு எப்படி உருவாகுது? செயற்கை முறையில்
கருத்தரிப்பது என்றால் என்ன? இரட்டையர், மூவர், நால்வர்லாம் எப்படி சாத்தியம்?"
(இது நாள் வரை நான்
இந்தத் தலைப்பின் கீழ் படித்ததை எல்லாம் சொல்லும் வாய்ப்பு , செத்தாண்டா சேகரு..)
இன்னும் ஒரு சந்தேகம். கருவில் இருக்கும்
குழந்தைக்கு உணவு எப்படி கிடைக்குது? (மனிதனின் ஜீரண மண்டலத்தின்
பணிகளில் ஆரம்பித்து ... )
கருவிலிருக்கும் குழந்தைக்குத் தாயுடனான தொடர்பு தொப்புள் கொடி மூலம்தான் என்பதை
அறிந்ததும் அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி ..அப்பப்பா!! ஓ.... ஒரு கர்ப்பப் பைக்குள்ளே
இவ்ளோ விஷயம் இருக்கா என்று அதிசயத்துக் கொண்டே கிளம்பிச் சென்றார். இவ்ளோ படிச்சிருக்கீங்களா நீங்க என்ற பாராட்டையும் எனக்கு அளித்தார்.
நல்ல வேளை.. இதற்கு மேல் கேட்காமல் கிளம்பி சென்றார். மதியம் 1.30
2.00 மணி - மாமியார் காபி நேரம். 5 மணிக்கு இரவு உணவு/இரண்டாம் உணவு நே.....ரம். இடைப்பட்ட 3 மணி நேரங்கள் எனக்கானது.
இடையில் தோழி ஒருவர் தொலைபேசிட, அவருக்கு Counselling செய்தேன்.(அதிகமில்லை Gentlemen, அரை மணி நேரம் தான்)
தொலைக்காட்சியில் செய்திகள்
பார்க்க ஆரம்பித்தேன். தெரசா மே அம்மையார் பிரிட்டனின் பிரதமராக புதன் கிழமை பதவி ஏற்பார் என்றது ஒரு
சேனல்.(அச்சச்சோ.. அதுக்குள்ளே முடிவு பண்ணிட்டாங்களா , நான் நேத்து மட்டும்
தான் செய்திகள் பார்க்கலை)
இன்று உலக மக்கள்தொகை
நாள்(World Population Day) என்றது ஒரு சேனல்.
அடுத்ததாக குங்குமம் பத்திரிக்கையைக் கையில் எடுத்தேன். கூகிள் நிறுவனத்தின் அடுத்த Android version இன் பெயர் “Nougat” என்றது. [நெய்யப்பம் என தமிழரான திரு சுந்தர் பிச்சை பெயரிடுவார் என பரவலாக பேசப்பட்டது. ]
இதையோட்டி சில சுவாரசியமான நிகழ்வுகள் உங்களுக்காக..(தெரிந்தவர்கள் அடுத்த பத்திக்குச் செல்லவும்) கூகிள் நிறுவனம் தன்னுடைய ஆண்டிராய்டு பதிப்பின் ஒவ்வொரு புதிய வெர்ஷனுக்கும்(Version) ஒரு இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். ஆங்கில எழுத்து வரிசையில் இருக்கும். A,B,C... கடைசியாக உள்ளது M- மார்ஷ்மெல்லோ(Marshmellow).
திரு சுந்தர்பிச்சை அவர்களின் இந்திய வருகையின் போது, செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள அடுத்த வெர்ஷனின் பெயர் இந்திய இனிப்பாக இருக்க
வாய்ப்புள்ளது என்றாராம். என்ன பெயர் என்று
கேட்டதற்கு " அம்மா கிட்டே கேட்கணும்" என்றாராம். பின்னர் சுதாரித்து, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் என்று சொல்லி சமாளித்தாராம். (வழக்கமாக கூகிள் நிறுவனம் தான் பெயரைத் தீர்மானிக்கும்)
நெய்யப்பம் “N”ல ஆரம்பிப்பதால், அதற்கு அதிக வாக்குகள் கிடைத்தும் “Nougat” என தீர்மானித்துள்ளது கூகிள் நிறுவனம் . காரணம் நெய்யப்பம் எல்லா நாட்டவராலும் உச்சரிக்க முடியாது என்பதே.. (கூகிள் போங்காட்டம் ஆடிவிட்டதாகப் பொருமுகிறார்கள் மக்கள்)
(நண்பர் ஒருவர் ஆல்ஃபா பீடாவில் ஆரம்பித்து நுகட் முடிய கடகடவென்று ஒப்பித்து அசத்தினார், மற்றொருவர் எனக்கு இது புதுத் தகவல், you surprised me என்றார்)
நடுவில் சில மணி நேரங்கள் இரவு உணவு வேலைகள்.
இரவு 8.30 . மீண்டும் ஜப்பான் தொலைக்காட்சி சானல்.
அன்றைய தினம் யமடோ கொரியாமா (Yamato koriyama) என்ற ஊரைப் பற்றிய டாக்குமெண்டரி படம்.
ஒசாகா நகரிலிருந்து 45 கிலோ மீட்டரில் உள்ளது. அங்கு தங்க மீன் வளர்ப்பு தான் தொழில். வயல்களில் வளர்த்து
ஏலம் விடுகிறார்கள். (அப்பப்பா... எத்தனை
வகை தங்க மீன்கள்)
விடுதிகள், பாலங்கள், தூண்கள், வீடுகளின் ஜன்னல் கதவுகள், ரெஸ்டாரண்ட்கள் எங்கும்
தங்க மீனின் படங்கள். அவ்வளவு ஏன் தின்பண்டங்களில்
கூட தங்க மீன் டிசைன்கள்.
சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக வந்து செல்வதைக் காட்டினார்கள். ஊருக்கு நடுவில் குட்டி வாய்க்கால். அதில் கூடத் தங்க
மீன்கள்.
NHK Newsline Channelலில் ஜப்பானில் உள்ள ஊர் ஏதாவது ஒன்றை சுற்றிக்
காட்டி அதன் சிறப்பியல்புகளை சொல்லுவது போல டாக்குமெண்டரி படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. 5 நிமிடங்கள் - வகாஷி என்ற இனிப்பு பற்றி சொன்னார்கள், 72 மணி நேரங்கள் ஒரு உணவகத்தை, ரயில் நிலையத்தை, கடை வீதியை என
தேர்ந்தெடுத்து அங்கு வரும் மக்களை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறார்கள்.
சோகமாக ஆரம்பித்த நாள், சுறுசுறுப்பாக , பலப் பல புது விஷயங்களைக் கற்ற நாளாக மாறியது.
மகிழ்ச்ச்ச்சி!!
பின் குறிப்பு : உங்களுக்காக சில links