இந்தியாவிலிருந்து
24 மணி நேரம் பயணித்து ஒரு வழியாக சான்
ஜோஸ் நகருக்கு வந்து சேர்ந்தோம் மகள் மற்றும் குட்டி
பேரன்களுடன்.
உலகின்
மறு கோடிக்கு பயணம் செய்ததில் சந்திக்க வேண்டிய முதல் சவால் jet lag எனப்படும் நேர வித்தியாசத்தினால் உடலில் ஏற்படும்
மாற்றங்கள். 12 1/2 மணி நேர வித்தியாசம் என்பது
மிக பெரிய சவால் எப்போதுமே. (இந்தியாவின் திங்கள் கிழமை பகல் அமெரிக்காவின் ஞாயிறு
இரவு )
வந்த
முதல் நாள் பகல் முழுவதும்
தூங்காமல் இருக்க முயற்சித்து இரவு தூங்க ஆரம்பித்தேன்
(தோம் ) நள்ளிரவு 12.30 பசியோ பசி . இந்தியாவின் மதிய உணவு வேளை
. நா(ன்) பார்க்கிறேன்,
தெளிவாக.. வான் ஊர்திகள் மற்றும்
அடி வானம் தான் கண்ணுக்கு தெரிந்தது,
என் ஜன்னல் வழியே.
அதிகாலை
3.30 மணியிலிருந்து என் நாட்கள் தொடங்குகின்றன
( இது அவங்க மாமியாருக்கு காபி குடுக்கற நேரம் _ உடன்
பிறப்புக்களின் கிண்டல்)
பகல்
நேரம் பசி தாகம் தூக்கம்
இல்லை. சுற்றிலும் மலையும் மரங்களும் அகலமான தெருக்களுமாய் கண்கொள்ளாக் காட்சிகள். நா(ன்) இப்போதும் பாக்கறேன்.
தெளிவாய் எதுவும் தெரியலே...
பகல்
ஒரு மணி நேரம் மட்டுமே
தூங்க சொல்வார் மகள். எழுந்ததும் குட்டி பேரன் நா(ன்) தூங்கணும்
என்று அடுத்த 2 மணி நேரங்கள் ஒரே
ஸ்ருதியில் நிறுத்தாமல் அழுவார் . (என்னால் அழ முடியவில்லை)
10 நாட்களாகியும்
இன்னும் தெளியவில்லை பகல் இரவாக , இரவு
பகலாக ....
நா(ன்) பாக்கறேன் .... இப்போதும்
...மப்பும் மந்தாரமுமாய்...
பின்
குறிப்பு :குட்டி பேரனுக்கு எல்லாவற்றையும் தன் கண்ணால்
பார்த்து கையில் வெச்சுக்கணும் , அதிரசம், முறுக்கு வைக்கும் அடுக்கு தொடங்கி பாஸ்போர்ட் முடிய ( நா.. பாக்கறேன், நா.. கைல
வெச்சுக்கறேன் )
இத நா(ன்) பாராட்றேன்.....
ReplyDelete