அக்டோபர் 17, 2013.... இனிய காலை பொழுது ... (அங்கே சூரிய பகவான் லேசாக எட்டிப்
பார்த்தாலே இனிய காலைன்னு சொல்வாங்க...எல்லா நாளும் எல்லா நேரமும் பிரிட்ஜுக்குள்ளே
இருக்கற மாதிரியே இருந்தது நான் இருந்த 6 மாதங்களும்)
அது நாள் வரை மகளுக்கு சமைத்துத் தராததை ஈடு கட்டும் விதமாக அவளுக்குப் பிடித்த உணவை நண்பகலில் சூடாக சமைத்துத் தருவதாக சொல்லி இருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் பொழுதை போக்குவது எப்படி? (4.30 ~ 11.00 தினமும் பரபரப்பாக இருந்தவள் நான்..)
அங்கே உள்ள நெட் ஃப்லிக்ஸில்" ரப் நே பனா தி ஜோடி" படம் பார்க்க சொன்னார்
மகள். நான், என் கணவர் , மூத்த பேரன் மூவரும் மிக சுவாரசியமாக படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நான் மகளிடம் திரைப்படத்தில் தான் மின் தடை.... இங்கே தொலைக்காட்சி திரையும்
இருட்டாகி விட்டதே என்று கேட்க , அவள்...அம்மா நம் வீட்டிலும் மின் தடை
என்றாள்.(அமெரிக்காவுல கரண்டே போகாதுன்னுல்ல சொல்வாங்க??)
அப்போது நேரம் 11.30 ... மின் அடுப்பில் மதிய உணவு எப்படி சமைப்பது?? வேறு வகை
அடுப்பும் கிடையாது......
சற்று தொலைவில் வசித்து வந்த மகளது தோழிக்கு தொலை பேசி , அவரை எங்களுக்கும்
சேர்த்து மதிய உணவு தயாரிக்க சொல்லி விட்டு, பொடி நடையாய் அவரது இல்லம் சென்று உண்டு
முடித்தோம். (மகளால் அச்சமயம் கார் ஓட்ட முடியாத நிலை)
வரும் போது அவரது தோழி எங்களை காரில் அழைத்து வந்து விட்டு சென்றார்.
சில மணி நேரங்கள் கழித்து மின்சாரம்
வந்த பிறகு .. விட்ட இடத்திலிருந்து படத்தை பார்த்து முடித்தோம். முதல் நாள் வரை சிங்கார
சென்னையில் தினசரி 2 மணி நேர மின் தடையை அனுபவித்ததால் எனக்கு சிரமமாக தெரியவில்லை......
சமைக்க முடியவில்லை என்பது தவிர....
என் கணவர் முக நூலில் போட்ட ஸ்டேட்டஸ்
என்ன தெரியுமா??:
"ஒரு ஆள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் போது மின் தடையையும் சேர்த்தே
கொண்டு வந்து விட்டார்"
No comments:
Post a Comment