


வழியெங்கும் Santa Claus "jingle bells jingle bells " பாடிக் கொண்டே செல்வது போல பிரமை .
விஸ்கான்சின் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான Milwakee ஐ கடந்த சமயம் Home Alone 3 படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வந்தது . (We are going to Milwakee , on our way we can drop you at Chicago )
கிரீன் பே நகரம் பால் பண்ணைகள் , கால்நடைகள் என கிராம சூழ்நிலையுடன் தொடங்குகிறது .
சிகாகோவிலிருந்து வாங்கிய காய்கறிகள் , மளிகை சாமான்களுடன் (கிரீன் பே Indian storeல் சில வகை காய்களே கிடைக்கும்) கிரீன் பேயில் மாலை ஆறு மணியளவில் சென்று இறங்கிய சில நிமிடங்களிலேயே அந்த சிறிய ஊரின் சிறிய விமான நிலையத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் 10 விமானங்கள் வந்து செல்கின்றன.
மறுநாள் காலையில் வீட்டின் ஜன்னல்கள் வழியே தெரிந்த குட்டை ஊசியிலை மரங்களும் பச்சைப் பசேலென்ற புல்வெளியுடன் அமைந்த வீடுகளும் மனத்தைக் கவர்ந்தன.
நான் : Northern lights இங்கே தெரியுமா ? (Arora Borealis )
மகன்: அதற்கு நீ Alaska தான் போகணும் .
நான் : இந்த ஊர் என்ன Latitude ?
மகன் : 44 degree
நான் : 35 degrees North Latitudeல் உள்ள இடங்களில் தான் தெரியும் என Wikipedia சொல்கிறது.
(https://wikitravel.org/en/Northern_Lights)

அங்கு சென்ற இரண்டாவது நாளில் மகளின் கேள்வி: அம்மா bachelor குடியிருப்பில் உங்கள் புதுக்குடித்தனம் எப்படி ஆரம்பித்தது?
என் பதில் : குளிக்கும் Soap கூட Men's After Shave Lotion மணத்துடன் இருக்கிறது . No girls things .


தினமும் காலை நேரத்தில் நானும் என் கணவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டோம் .


கட்டில், மெத்தை, கார்பெட், தொலைக்காட்சி பெட்டி, தக்காளி பழங்களுடனேயே வேருடன் பிடுங்கிய செடிகள் என உபயோகப்படுத்திய பொருட்களை தெருவில் வைத்திருந்தார்கள். நாங்கள் சென்றது இலையுதிர் காலத்தில். குளிர் மாதங்களை எதிர் நோக்கி வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சி.
செப்டம்பர் மாதத்திலேயே பல வீடுகளில் Halloween பண்டிகைக்கான அலங்காரங்களை செய்து விட்டார்கள்.
மழை நீரை தடுத்து ஆங்காங்கே சுத்திகரித்து மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்.

வாரத்தின் மூன்று மாலை நேரங்கள் மகனுடன் தங்கி இருந்த சிகாகோ நகரிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் மருத்துவ நண்பரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்போம் . தமிழ் பேசும் நான்காவது நபர் ,இனிய நண்பர்.
Downtown Fox நதிக்கரையை ஒட்டி அமைத்துள்ளது. நகரின் பல இடங்களிலும் நீர்நிலைகள் உள்ளன. சாலையிலேயே சிறு நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மற்ற நதிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய, Fox நதி மட்டும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்வது சிறப்பு.
இந்த நதியின் கரையில் அமைந்த ஊர்கள் Fox cities என்று அழைக்கப் படுகின்றன. சில ஊர்களை காணும் வாய்ப்பும் கிடைத்தது. [இந்த பதிவில் நான் குறிப்பிடும் ஊர்கள் Fox cities ல் சிலவைகளே ]

நான்: அருகில் போய் அங்குள்ளவர்களிடம் கேட்கலாமா ?
மகன்: நான் காரை நிறுத்த மாட்டேன் இங்கே எல்லாரும் துப்பாக்கி வைத்திருப்பார்கள் பாதுகாப்புக்காக . புது மனிதர்களை கண்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவார்கள். தேவையான தகவல்களை Google தரும்.
பால் மற்றும் பால் பொருட்கள் , சீஸ் , Toilet Paper (உற்பத்தியில் அமெரிக்காவில் முதலிடம்), lumbering மற்றும் இவை சார்ந்த உபதொழில்கள்(உ.ம் - காகிதம் செய்ய பயன்படும் பொருள்களின் கழிவிலிருந்து பூச்சி கொல்லி மருந்து தயாரித்தல் ) ஆகியவை இந்த ஊரின் பிரதான தொழில்கள்.
ஊரில் எங்கெங்கும் மிகப்பெரிய டிரக்குகள். Packing செய்யப்படும் என்ற போர்டுகள் .


நதியாக , ஏரியாக இருந்தாலும் Port , Dock , Sea , Beach என கடல் சார்ந்த வார்த்தைகளே பயன்படுத்த படுகின்றன. (அம்மா பக்கத்தில் Bay beach இருக்கு இன்னிக்கு போலாம்....)
மிச்சிகன் ஏரியின் வழியாக சரக்கு கப்பல்கள் மூலம் பல்வேறு ஊர்களுக்கும் கொண்டு சேர்க்கிறார்கள்.
நான் : ஐரோப்பிய , பிரெஞ்சு பெயர்கள் அதிகம் தென்படுகிறதே இங்கே (Ashwaubenon, De Pere, Brussles ,Lake Geneva, Belgium ,Luxemburg, Lake Zurich , Lexington)
மகன் : No idea அம்மா. நீதான் ஐரோப்பா ஆஸ்திரேலியான்னு பல இடங்களுக்கும் போயிருக்காய்.


1800 களில் railroad நிறுவப்பட்டு அண்டை மாநிலங்களிடையே சரக்கு பரிமாற்றம் நடைபெற்றது [Railroad museum ல் பல அரிய தகவல்கள் கிடைத்தன].
அங்கு காட்சிப் படுத்தப் பட்டிருந்த ரயில்களின் உள்ளே மிக அருமையான சொகுசு இருக்கைகள் , வசதிகள். 1800 களிலேயே .... இன்றளவும் இந்திய ரயில்களில் அது போன்ற வசதிகள் இல்லை .
இங்கிருந்து 4 மணி நேர பயணத்தில் Danielle Steel எழுதிய கதையில் மூலம் அறிந்த Amish மக்களின் குடியிருப்புகளை காண விரும்பினேன் https://en.wikipedia.org/wiki/Amish
நான் : Amish County பாக்கலாமா ? Minneapolis போலாமா?
மகன்: வெளியில் சாப்பிடுவதானால் எங்கு வேண்டுமானாலும் கூடி போகிறேன். புளிசாதம், தயிர்சாதம் என வீட்டு சாப்பாடை மட்டுமே சாப்பிடுகிறீர்கள். காலையில் கிளம்பி சென்று இரவு வீடு திரும்பும் தொலைவில் உள்ள இடங்களுக்கு மட்டுமே போகிறோம் .
Walmart is a life saver . எல்லா விதமான பொருட்களும் கிடைக்கின்றன . மற்ற நகரங்களை போல எல்லா விதமான கடைகளும் இங்கும் உள்ளன. ஊர் மொத்தமும் 10 மைல்களுக்குள்ளே தான் இருக்கிறது .
Green bay packers பிரசித்தி பெற்ற அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர்களை கொண்ட குழு. இந்த ஊரின் Lambeau stadiumல் முக்கியமான போட்டிகள் நடைபெறுகின்றன. அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக போட்டிகளை காண வருகிறார்கள்.
வேறு பல விளையாட்டுக்களும் இந்த ஊரில் பிரசித்தம் .


சிறிய ஊர் என்பதை உணர்த்த High raised water tank , அங்கங்கே சில உணவகங்கள், saloon , சிறிய ஏரி , 15 நிமிட நடைதூரத்தில் பூங்கா என அருமையான அமைதியான ஊர் . நம் ஊர் பெட்டிக்கடைகளுக்கு பதிலாக பெட்ரோல் பங்குகளில் சிறிய கடைகளில் தண்ணீர், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் மற்றும் பிஸ்கட்டுகள், உணவுப்பொருட்கள் ஆகிய அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்கிறார்கள். நடைப் பயிற்சி செய்கையில் வாழைப்பழம் வாங்கி செல்வோம்.

Great Lakeன் பெயர்களை மட்டுமே பள்ளிப் பாடத்தில் படித்திருந்த எனக்கு அவைகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை .
Prairies , Lakes , Rivers , Cheese , Beaches and Memories ...........Green Bay !!
பின் குறிப்பு : சிறிய ஊருக்கு செல்கிறீர்கள்.பொழுது போகவில்லை என நான்கு நாட்களில் கலிபோர்னியாவுக்கு திரும்பி வரப்போகிறீர்கள் என்றார் கலிபோர்னியாவில் வசிக்கும் மகள். September கடைசியிலே இரவு நேரங்களில் 3 டிகிரி செல்சியஸ். -20 டிகிரி வரை செல்லும் ஊர் அது. வெயிற்காலமாக இருந்தால் பயணத்தை நீட்டித்திருப்பேன்.
நாங்கள் சென்ற வருடத்திற்கு அடுத்த வருடம் Polar Vortex காரணமாக -47 டிகிரி குளிரடித்தது. (அன்டார்டிகாவின் வெப்ப நிலைக்கு சமம் இது.)