Saturday, 19 August 2017

Blue blood


 Extra job to the existing
 Gets the name as moonlighting!

 Seeking attention by showing off
Goes its way as show boating!

Disagree, disorder and confusions
You are now in sixes and sevens!

Excellent professional achiever
And you are now the rain maker!

No more service want to be did
Hence be considered 86'ed!

An old issue not of importance
Is like water under the bridge!

Cant be a Jane Doe I promise
As I am no more fictitious!!


P.S: Effect of watching the American Soap "Blue bloods"
** New words learnt with the meaning framed as a poem



இது வேறு உலகம் தான்...


பின் தூங்கி முன் எழும் பத்தினி போல சூரியனார் 5 மணிக்கே உதயமாகிறார். ஓவனிலிருந்து எடுத்த அடுத்த நொடியே காப்பி ஆறி விடுகிறது. ஜன்னல் வழியே தெரியும் பின்புறம் அமைந்த பூங்காவும் மலைத்தொடரும் ஒரு இனிய காலையினை உணர்த்துகின்றன . லேசான குளிருடன் தொடங்கும் நாட்கள்.

இயற்கையின் கொண்டாட்டமாக சொல்ல வேண்டியது பச்சை பசுமை புல்வெளிகள், மரங்கள், கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜாக்கள், மலைபிரதேசத்திற்கே உரிய மலர்கள் . கொள்ளை அழகு. 

ஒவ்வொரு முறை வரும்போதும் வெவ்வேறு அனுபவங்கள். வருட இறுதி என்பதாலும் கோடையின் தொடக்கம்  என்பதாலும் பல வித நிகழ்வுகள் விழாக்கள் கொண்டாட்டங்கள்.

பேரன்களின் பள்ளி விழாக்கள் (மொதெரஸ் டே, ஓபன் டே), சமஸ்க்ருத பாரதி நடத்தும் வகுப்புகளுக்கான ஆண்டு விழா , ப்ரக்ஞா எனப்படும் ஸ்லோக வகுப்புகளுக்கான ஆண்டு விழா , சான் ஜோஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டி யின் பட்டமளிப்பு விழா, தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளியின் ஆண்டு விழா, இன்ஸ்ட்டா கானா நடத்தும் பாட்டு நிகழ்ச்சி என பல நிகழ்வுகளுக்கும் சென்று வந்தேன். (இன்னும் செல்வேன் ;) சின்ன பாப்பா க்ராடூயட்டின் லாம் இருக்கே )

பள்ளி வகுப்புகளின் அமைப்பும் பயிற்றுவிக்கும் முறைகளும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமும் அருமை.அரசாங்கம் நடத்தும் பள்ளி. வருடம் முழுவதும் மாணவர்கள் செய்த , படித்தவைகளை  பார்வைக்கு வைத்திருந்தார்கள். அருமையோ அருமை. ஒவ்வொரு வகுப்பிற்கு சென்று பார்க்க அனுமதித்தார்கள்.

சம்ஸ்க்ருத பாரதி (இது பற்றி முன்பே பதிவிட்டுள்ளேன்) ஆண்டு விழாவில் பல்வேறு நிலை வகுப்புகளுக்கான பரிசுகள் அளிக்கப்பட்டன. காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பார்வையாளர்களாக வந்திருந்த பெற்றோர்கள் தவிர அனைவரும் அனைத்தும் சமஸ்க்ருதத்திலேயே தான். வம்பு உட்பட (உத்தவான் ஆகதவான்_  அவன் வந்திருந்தேன் என்று சொன்னான் )
கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சமஸ்க்ருத்த்திலேயே.(ஏகஹ ஷ்ருகாலஹ வனம் கச்சதி ....) 

ஸ்லோக வகுப்பு ஆண்டு விழா ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளை ஒட்டிய நிகழ்வாக இருந்தது. நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில். SHREE RRAAMAANUJAACHAARRYA  என ஆங்கில ஆக்ஸன்ட்டுடன்... பரிசுகளும் காலை நிகழ்ச்சிகளும் ..... அனைவரின் உழைப்பும் அதில் தெரிந்தது 


இன்ஸ்டா கானா என்பது பொது மக்கள் அனைவருக்கும் மேடையில் பாடுவதற்கான ஒரு களம் .
பாடத்தெரிந்த யாரும் பாடலாம். 


மக்கள் எப்போதும் போல சங்கீதம், சமஸ்க்ருதம், கராத்தே, கணக்கு, ஓவியம், காவியம், சுலோகம் ,தமிழ், Base ball, foot ball, பியானோ, வயலின், ஸ்கைப் மூலம் பலவித வகுப்புகள் என குறுக்கும் நெடுக்கும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை வார இறுதியில் தான் ..இப்போது வாரம் முழுவதுமே .

கோடை விடுமுறை நெருங்கி கொண்டிருக்கிறது. இருக்கவே இருக்கு... சம்மர் கேம்ப் ...  

வெய்யில் 80 டிகிரி போனாலே மக்கள் ஐயோ வெய்யில் என்கிறார்கள். ( பூமியின் இந்தப் பகுதி போலெ க்கு அருகில் அமைந்திருப்பதால் 80 டிகிரிக்கே வெய்யில் காயகிறது 100 டிகிரி போல. 
இங்குள்ள மக்களுக்கு வெய்யில் என்பது அரிதான ஒன்று என்பதால் , மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் நடைப் பயிற்சி , கால்பந்து பயிற்சி என பூங்காக்களில் கொண்டாட்டமாக இருக்கிறது.( மக்கள் வசிக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. மற்றபடி எங்கும் எப்போதும் அமைதி )


 எங்கிருந்தோ வந்து வால்கோ மாலில் (Valco) சினிமா பார்த்தோம் , JC Pennyயில் துணிகள் வாங்கினோம். தற்சமயம் நடந்து செல்லும் தொலைவில் வசித்தும் , அங்கே செல்ல முடியாது. ஆப்பிள் நிறுவனம் விலைக்கு வாங்கி அலுவலகங்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
வீட்டின் பின் புறம் அமைந்திருக்கும் பூங்காவில் பிரதி வெள்ளியன்று சந்தை கூடுகிறது. நேற்றுப் பறித்த கீரை, ஸ்ட்ராபெர்ரி , நம்ம ஊர் திருவிழாவில் விற்கும் பொடித்த ஐஸில் கலர் விட்டு கப் ஐஸ் , காய்கறிகள் பழங்கள் .. கிராம சூழ்நிலை. பள்ளிப் பிள்ளைகளை field trip அழைத்து வந்து காண்பிக்கிறார்கள்.

என் மகள் சொன்னது  "" உன்னுடைய கடந்த வருட பயணத்திற்கும் இந்தப் பயணத்திற்கும் இடையில் அதிகம் வித்தியாசம் எதுவும் இல்லை அம்மா...

அட்டையும் கட்டையும் ....


என் கருத்தை கவரும் பல விஷயங்களில் ஒன்று வீடுகள். 

அதன் சுற்றுச் சுவர் அமைப்பு , வெளிப்புறக் கதவின் வேலைப்பாடுகள், ஜன்னல்கள்  எனப் பலவும்  என் கவனத்தைக் கவரத் தவறுவதில்லை. 

செங்கல் , கான்க்ரீட் கொண்டு கட்டப்பட்ட வீடுகளையே பார்த்துப் பழகிய எனக்கு, முதன் முதலாக அமெரிக்க வந்தபோது இங்கிருந்த அட்டை  வீடுகளை பார்த்து பிரமிப்பாக இருந்தது.

ஜிப்சம் (asphalt)  சுவர்கள், மரத்தாலான தரைகள் மற்றும் கூரைகள், கடையில் தயாராய் விற்கப்படும் சமையல் மேடை, Oven னுடன் கூடிய அடுப்பு மற்றும் அலமாரிகள், குளியலறைக்கான washbasin,  bath tub என readymade ஆக வாங்கி வந்து அப்படியே பொருத்தப் பட்ட வீடுகள்.  கண்ணாடி ஜன்னல்கள். 

(ஜிப்சம் அட்டைகளை இந்தியாவில் false ceiling அமைக்க பயன்படுத்துவார்கள். குறிப்பாக அலுவலகங்களில். ) மரக்கதவுகளின் மேல்பகுதி கண்ணாடி. தாழ்ப்பாள் flimsy. ஒரு கதவுக்கே 5 தாழ்ப்பாள் போட்டுப் பழக்கப் பட்டவர்கள்  நாம். சொந்தவீட்டுக்காரர்கள் burglar alarm, cctv வைத்துக் கொள்கிறார்கள். 

வாடகை வீடுகளுக்கு ???

எல்லாம் வல்ல  இறைவனே துணை. 

இவ்வகை வீடுகள் நிலநடுக்கம் மற்றும் குளிரைத் தாங்கும் வகையில் insulated materials கொண்டு கட்டப் பட்டவை. இரண்டு அடுக்குகள் வரை தாங்கும் வல்லமை படைத்தவை இத்தகைய வீடுகள். (அடுக்கு மாடி வீடுகளுக்கு frame மட்டும் இரும்புக் கம்பிகளை உபயோகித்து காட்டுகிறார்கள்.) அலுவலகங்களில் நோட்டீஸ் போர்டில் குத்தப் பயன்படும் பின்களே இங்கே ஆணிகள். ( :) )

இவ்வகை வீடுகளில்  எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால்  எல்லா county யிலும் தீயணைப்பு நிலையங்கள் இருக்கும். மக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி என்று கற்று தருவார்கள். பள்ளிகளில் Stop, Drop, Roll என பாட்டாக சொல்லி தருவார்கள். Field trip என அருகிலிருக்கும் தீயணைப்பு நிலையங்களுக்கு அழைத்து சென்று கற்றுத் தருவார்கள். [தீயணைப்பு வண்டிகள் பார்க்கவே பளபளவென அழகாக இருக்கும். அதில் 500 காலன் தண்ணீர் மட்டுமே இருக்கும். கட்டிடங்களுக்கு அருகிலேயே தீயணைப்பு வண்டியுடன் இணைக்கும் வண்ணம் பெரிய குழாய்கள் இருக்கும்.]

Heater/cooler  இருக்கும். பருவ நிலைக்கேற்ப பயன்படுத்தலாம்.

Studio, Hallway, Apartment, Townhome, Single Family Home (independent house),Condominium, Bungalow  எனப் பல தரப்பட்ட வீடுகள். எல்லாமே அட்டை கட்டை வகைகளே. விலை மட்டும் பல மில்லியன் டாலர்கள். 100 வீடுகள் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு மிகச் சிறிய  பரப்பளவில் பூங்கா . condo வீடுகள் என்பது gymnasium  மற்றும் நீச்சல் குளம் உள்ளவை.ஆனால் பல வீடுகளுக்கு ஒரு ஜிம் ஒரு நீச்சல் குளம் . (எங்கேயோ பார்த்தது போல இல்லை ??)

இந்த முறை சொந்த வீடு(தனி வீடு) என்னும் வகையில் அமைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளைக் காணும் வாய்ப்புக்கு கிடைத்தது.

1. இரண்டு   ஹால் (ஒன்று விருந்தினர் பகுதி, மற்றது  fire place , தொலைக்காட்சிப் பெட்டி என ஒரு  குடும்பத்துக்கானது
2. சமையலறையை ஒட்டினாற்போல் ஒரு பக்கம் breakfast பகுதி, மற்றது ரெகுலர் டைனிங் ஏரியா 
3. எங்கிருந்து பார்த்தாலும் கண்ணாடி ஜன்னல்கள் வழியே தெரியும் இயற்கை
4. வீட்டை சுற்றிலும் அமைந்த புல்வெளி மற்றும் பின்பகுதியில் அமைந்த தோட்டம் (persimmon, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை ,எலுமிச்சை மரங்கள் மற்றும் வண்ண வண்ண ரோஜா செடிகள், அதிலும் குறிப்பாக அடுத்தவர் வீட்டு மரத்தின் காய் பழம் பூக்கள் நம் பக்கம் இருப்பது ...இன்னும் super)
5. சிறு பிள்ளைகள் விளையாடும் ஊஞ்சல், பாஸ்கெட்பால் பகுதிகள்
6. சுற்றிலும் இயற்கை காட்சிகள் (மலையை குடைந்து குடைந்து வீடு கட்டிட்டாங்கம்மா)
7. எங்கெங்கும் அலமாரிகள், பார்த்துப் பார்த்துக் கட்டி இருக்கிறார்கள்
8. இங்கே குளியலறைகள் 1, 1 1/2, 2 1/2 என்பது போல கட்டுகிறார்கள். ( same now available in Chennai too)
1 1/2 பாத்ரூம் என்பது குளிக்கும் வசதியுடன் கூடிய ஒன்றும், குளிக்கும் வசதி இல்லாத ஒன்றும் எனக் கொள்ள வேண்டும். (I grew up in a house with 8 bedrooms and 3 bathrooms என ஒரு வசனம், நான் பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தில்)
9.  இரண்டு  கார்கள் நிறுத்தும் வகையில் வாசலின் முன்புறம் garage. சில வீடுகளில் அதன் உட்புறம் மிக அற்புதமாக stereo , டிவி , Overhead loft , சுலபமாக சுத்தம் செய்யும் வகையில் அமைந்த தரை என அமைத்திருந்தார்கள்
10.வீடுகளுக்கு சுற்றுச் சுவர் இல்லை. அப்படி தேவைப்பட்டவர்கள் மரத்தினால் அமைத்துக் கொள்கிறார்கள்.


ஐரோப்பிய வீடுகள் வேறு மாதிரியானவை. பழமையுடன் இணைந்தவை.Combination of art and architecture. ஆங்காங்கே சிற்பங்களுடன் அமைந்த கட்டிடங்கள். நேர்த்தியான வேலைப்பாடுடன் கூடிய முகப்புகள்.

நான் கண்ட அனைத்து ஐரோப்பிய நகரங்களிலும் முக்கிய பகுதிகளில்  அனைத்து கட்டிடங்களும்  ஒரே அமைப்பில் இருந்தன. நகரங்களின் முக்கிய பகுதிகளில்  4-5 அடுக்குகள் மட்டுமே. வெளித்தோற்றம் ஒரே மாதிரி உள்ள வண்ணம் அமைக்கப் பட்ட கட்டிடங்கள்[common façade] . புறநகரில் தான் அடுக்கு மாடிக்கட்டிடங்களுக்கு அனுமதி. லண்டனில் பிரபலமான கடையான Harrods இன் முகப்புத் தோற்றமும் மற்ற கட்டடங்களை போலவே தான் இருக்கும். உள்பகுதி அவரவர் விருப்பம்.

United kingdomல்  புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் விக்டோரியன் வீடுகள். அகலமான ஜன்னல்களை கொண்டவை. இரும்பு ஜன்னல் கதவுகளில் அருமையான வேலைப்பாடுகள். 
குளிர் அதிகமான Switzerland போன்ற பகுதிகளில் அமெரிக்கா போல மரத்தாலான வீடுகள். கிராமப் புறங்களில் சிறிய  செங்கற்களால் ஆன வீடுகள்.அருகருகில் நெருக்கமான சிறிய கட்டிடங்களில் இயங்கும் வங்கிகள். இங்கேயா பல கோடி பணம் புழங்குது என்ற வகையில் .

ஆம்ஸ்டர்டேமில் அடுக்கு மாடி வீடுகளின் 3/4 ஆவது தளங்களில் ஒரு பெரிய்ய ஜன்னல். வாசல் கதவு சிறியதாக உள்ளதால் அந்தப் பெரிய ஜன்னல் மூலம் பொருட்களை வீடுகளுக்குள்ளே கொண்டு செல்கிறார்கள். பல வண்ணங்களில் வீடுகள் காணப்பட்டன.

வெனிஸ் நகரில் தண்ணீருக்குள் வீடுகள். சாலைகளுக்கு பதிலாக கால்வாய்கள். கடந்து செல்ல  பாலங்கள், படகுகள். சிறு சிறு செங்கற்களால் ஆன கட்டிடங்கள்.

இந்தியாவிலும் தற்சமயம் gated community, gate இல்லாத community என வீடுகள் கட்டப்படுகின்றன. மேலை நாடுகளை  போல ஒவ்வொரு வீடு கட்டும் போதும் செடி கொடிகளை நாட்டுப் பராமரிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. [ கர்நாடக மாநிலத்தில் மட்டும் பின்பற்றுகிறார்கள்]

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல நம் நாட்டில் தற்சமயம் பருவ நிலைகளுக்கேற்ப வீடு /அலுவலகங்களைக்  கட்டாமல்  கண்ணாடிக் கதவுகளும் ஜன்னல்களும் இருக்குமாறு அமைத்தது விட்டு ஐயோ சூடு அம்மா சூடு என்று ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தி, அன்னை பூமியை சூடாக்கி விட்டு, வார இறுதியில் ...பக்கத்து கிராமத்தில் மரம்  நடுகிறார்கள். தம் ஊழியர்களை கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு கணினி கற்றுத் தருகிறார்கள். Corporate social responsibility!!(CSR)

வீடுகள் ... நம் எண்ணத்தின் வெளிப்பாடு !! 





















நீலச்சாயம் வெளுத்து போச்சு .....


அமெரிக்கா  போன்ற குளிர்ப்பிரதேசங்களில் துணி துவைப்பதென்பதே ஒரு அனுபவம் .

ஆய கலைகள் 64 க்கு பிறகு 65 ஆவது கலையாக துணி துவைப்பதை  சேர்த்துக் கொள்ளலாம்.

அட்டை கட்டை வீடுகளை நினைவிருக்கிறதா? குளியலறையில் மரத்தாலான தரைப் பகுதி.  எங்கும் தண்ணீர் வெளியேற வசதி இல்லை. எல்லார் வீட்டிலும் bathtub  இருக்கும்.

இங்கே துணிகளைத் துவைக்க 4 options உண்டு.

(1)துணிகளைத் துவைக்க இயந்திரங்களைத் தான் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடவசதிக்கு ஏற்ப வீட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ துணி துவைக்கும் இயந்திரத்தை வைத்திருப்பார்கள்.(கார் கராஜ், நடைபாதை, அறை)
(2)சில வீடுகளில் 3-4 வீடுகளுக்கு சேர்த்து  ஒரு பொது இடத்தில் வைத்திருப்பார்கள். யாருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
(3)பெரிய்ய bedsheet,comforter போன்றவைகளை துவைக்க அருகிலிருக்கும் laundromat செல்ல வேண்டும். மிகப் பெரிய அளவிலான இயந்திரங்களை பொதுவான ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள்.
(4) பாத் டப் உள்ளே கையால் துவைப்பது.


இந்தியாவில் dry cleaning கடைகளில் இருப்பது போல பெரிய்ய washer (washer ஒரு முறை துவைத்து முடிக்க 20 நிமிடங்கள் ), பக்கத்தில் dryer . துவைத்து முடித்த துணிகளை dryer ல் போட்டால் ஒரு மணி நேரத்திற்குள் காய வைத்து தரும். சுடச் சுட அப்பளம் போல ...  அப்படியே மடித்து வைத்துக் கொள்ளலாம்.... ஹார்லிக்ஸ் போல .
முக்கியமான விஷயம் ,பணம் செலுத்தினால் மட்டுமே 4 வீடுகளுக்குப் பொதுவான இயந்திரங்களோ Laundromat இயந்திரங்களோ வேலைசெய்யும்.(machine உடன்  இணைந்தே coin slot இருக்கும் . குவார்ட்டர் நாணயங்களை அதனுள்ளே சொருகி அழுத்தி விட வேண்டும், $1 1/2  per load - 6 quarter நாணயங்களை சொருகி அழுத்தினால் இயந்திரம் இயங்க ஆரம்பிக்கும்) Mr .Bean பூனைக்குட்டியையும் சேர்த்துப்  போட்டுத் துவைப்பாரே , நினைவிருக்கிறதா ?

ஓரளவு ஐடியா வந்திருச்சா ? இப்போ துவைக்கலாம் வாங்க ....

பெரிய அளவிலான washer என்பதால் வாரம் ஒரு முறை தான் துவைப்பது வழக்கம். பிரதி செவ்வாய் மகளது laundry day . (Option 2 இங்கே)
முதல் நாள் இரவே அம்பாரமாய் குவிந்து  இருக்கும் துணிகளை முதலில் வகைப்படுத்தித் தருவார்கள். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் உடைகள் தனித் தனியாக.
Rule no 1: சாக்ஸ்  பெரியவர்கள் load உடன் சேரணும்
கடந்த 2 மாதங்களாக laundry வேலை என் scope  என்பதால் காலை எழுந்தவுடன் laundry. Liquid soap , laundry room சாவி, அழுக்குத் துணிகள், quarter நாணயங்கள்   சகிதம் கிளம்பி முதல் load ஆரம்பம்.(Rule No 2:  கதவை திறந்ததும் சாவியை கையில எடுத்து வெச்சுக்கோ, கதவுக்கு authomatic பூட்டு) ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு washer load முடியும். உடனே dryer க்கு மாற்ற வேண்டும், quarter சகிதம் தான். (Rule no 3:  fabric  softner  காகிதங்கள் 4/5 ஐ மறக்காமல்  போடவேண்டும்). இல்லையென்றால் துணிகள் வறட்டி போல காய்ந்து விடும்.
(laundry room வீட்டிற்கு நேரெதிரில்).
கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் 2 மணி நேரங்கள் கடக்கும். (இடையில் மகள் /மருமகனின் குரல் : அம்மா...எதிர் வீட்டு பாட்டிம்மா laundry room பக்கம் போறாங்க )

ஸ்ஸ்ஸ் ..........ஸப்பா .... இந்த வார laundry வேலை முடிஞ்சுது .........

பொறுமை பொறுமை... இனி தான் ஆரம்பமே ....

Laundry basketகள் நிரம்பி வழியும் . (7 நாட்கள் பயன்படுத்திய துணிகள்.) சூடாக இருக்கும் போதே மடிக்க சுலபம் .(அதை விட எனக்கு வேறென்ன வேலை ??)

பெரியவர்களின் துணிகளை மடிக்கும் போது வரும் சந்தேகம். சின்னப்பைய்யா ..இந்த பனியன் அம்மாவுடையதா அப்பாவுடையதா?

பேரன்களின் துணிகள் பலவகை. ஒரு நாளில் 3 set உடைகள். பள்ளிக்கு/வெளியிடங்களுக்கு , வீட்டிற்கு , இரவு உடை என விதம் விதமாக அணிவார்கள்.
பருத்தி, synthetic ,fleece .
அரைக்கை சட்டை, முழுக்கை சட்டை, கையில்லாத சட்டை  
Full  pants , half pants (சின்ன பேரன் : It's so  weird to go in half pants to school)
underwears (vests & briefs),socks
அண்ணண்(8 வயது) ,தம்பி (4 வயது)

மேற்கண்ட வகைகளில் பிரிக்க வேண்டும். இருவரது சட்டையும் ஒரே அளவு போல தோன்றும், சமயத்தில் . (இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பேரன்கள் இருவருக்கும் இதில் வரும் எல்லா category யும் அத்துப்படி.)

பெரியவன் உபயோகித்து கழித்து, தற்சமயம் சின்னவன் உபயோகிப்பது என்ற category இது .
ஒரு சுமாராக வகைப்படுத்தி மடித்து முடிப்பேன். அடுத்து , யார் laundry baskets ஐ மாடிக்கு கொண்டு செல்வது என்பது .

சரி ....ஒரு வழியாக மேலே கொண்டு சென்றாகி விட்டது. மகள் மீண்டும் நான் மடித்து வைத்த  துணிகளை வகைப்படுத்துவார் .(அம்மா ... இது சின்னப் பயனுடையது , இது வீட்டுக்கு போடறது ...)
அடுக்கி வைக்க நேரமில்லாத நாட்களில் கூடையிலிருந்தே எடுத்தாள ஆரம்பிப்பார்கள் சின்னப் பயல்கள்.(மொத்தத்தையும்  கலைத்து விடுவார்கள் )

இடையிடையே என் துணிகளுக்கான option , as you guess , option 4. நம் ஊர் துணிகள் இங்குள்ள இயந்திரங்களுக்கு ஏற்றவை அல்ல , மிக சிலவை தவிர. சோம்பல் பட்டால் .... கமல் ஹாசன் போல நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ...பாட வேண்டியது தான் . (என் விருப்ப நிறம் நீலம்)

திரும்பி பார்த்தால் திங்கள் கிழமை .

மீண்டும் laundry day ..............



WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...