ரமணன் அறிவிக்காத
முதல் புயல்
ராப்பகல் கழிந்தது
எதிர்பார்ப்புடனே
ஆழிப் பேரலையும் நினைவில்
வந்தது - உடன்
ஆண்டுகள் முந்தைய
ஊழிக் காற்றுடன்
பால் இல்லை தயிர்
இல்லை
காய் இல்லை கறி இல்லை
அன்னம் செய்திட அரிசியும்
இல்லையே
அவரவர் கவலை அவரவர்க்கு
மிதமாய் வீசும் காற்றின்
வேகம்
மிகையாய் ஆகிப் போகும்
முன்பே
வானம் இருண்டு மேகம்
திரண்டு
இயற்கையின் ஊழித் தாண்டவம்
மழை வலுக்க, மரங்கள் சரிய
உலகத் தொடர்பு அடியோடறுந்திட
நடப்பறிய செய்தித்
தாள் படித்து
மரங்கள் விழுந்து
இலைகள் குவிந்து
ஜுராசிக் பார்க்கான
தெருக்களில் நடந்து
தண்ணீருக்காய் தவித்து, மற்றவர்க்கு உதவி,
கூடிப் பேசி, வார்த்தைகளால் விளையாடி
சிறு விளக்கொளியில் உண்டு களித்து
இரைச்சலின்றிஅமைதியைக்
கொண்டாடி
ஒருவருக்கொருவர் உதவி, ஊருக்கும் உதவி..
மின்சாரம் இல்லா மகிழ்ச்சி
நாட்கள்
மனதில் என்றும் நிலைத்து
நிற்கும்
ஆயிரம் யோசனைகள் இதற்கிடையில்......
அம்மா சின்னம்மா என்னவாகியிருக்கும்?
அய்யாவுக்கு நெஞ்சு
சளி சரியானதோ?
இனியாவது புரியும்படி
ட்வீட் செய்வாரா?
ஊருக்கு கிளம்பிய
உறவினர் என்ன ஆனார்?
டிரம்ப் ஐயா என்ன
புதுச் சட்டம் போட்டாரோ?
மும்பை நண்பர் எப்படி
ஊருக்குத் திரும்புவார்?
நாளை பால் வருமா செய்தித்
தாள் வருமா?
நாட்டின் பணத் தட்டுப்பாடு
எப்போது சரியாகும்?
இதோ....மின்சாரம் வந்து விட்டது
எங்கும் ஒளிமயம் எங்கும்
சத்தம்
தொலைத் தொடர்பு சாதனங்கள்
சிறிது நேரத்தில்....
நேற்று வரை நேரில்
பேசிய நேரெதிர் வீட்டிலிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல்
Good evening !
Got cold?
Yes,Cold
Get well soon (
smileys)
ஸ்ஸ்ஸ்....ஆஆஆ..........வர்தா புயல் கடுமையாகத் தாக்கியது இம்முறை!!