Saturday, 19 August 2017

இது வேறு உலகம் தான்...


பின் தூங்கி முன் எழும் பத்தினி போல சூரியனார் 5 மணிக்கே உதயமாகிறார். ஓவனிலிருந்து எடுத்த அடுத்த நொடியே காப்பி ஆறி விடுகிறது. ஜன்னல் வழியே தெரியும் பின்புறம் அமைந்த பூங்காவும் மலைத்தொடரும் ஒரு இனிய காலையினை உணர்த்துகின்றன . லேசான குளிருடன் தொடங்கும் நாட்கள்.

இயற்கையின் கொண்டாட்டமாக சொல்ல வேண்டியது பச்சை பசுமை புல்வெளிகள், மரங்கள், கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜாக்கள், மலைபிரதேசத்திற்கே உரிய மலர்கள் . கொள்ளை அழகு. 

ஒவ்வொரு முறை வரும்போதும் வெவ்வேறு அனுபவங்கள். வருட இறுதி என்பதாலும் கோடையின் தொடக்கம்  என்பதாலும் பல வித நிகழ்வுகள் விழாக்கள் கொண்டாட்டங்கள்.

பேரன்களின் பள்ளி விழாக்கள் (மொதெரஸ் டே, ஓபன் டே), சமஸ்க்ருத பாரதி நடத்தும் வகுப்புகளுக்கான ஆண்டு விழா , ப்ரக்ஞா எனப்படும் ஸ்லோக வகுப்புகளுக்கான ஆண்டு விழா , சான் ஜோஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டி யின் பட்டமளிப்பு விழா, தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளியின் ஆண்டு விழா, இன்ஸ்ட்டா கானா நடத்தும் பாட்டு நிகழ்ச்சி என பல நிகழ்வுகளுக்கும் சென்று வந்தேன். (இன்னும் செல்வேன் ;) சின்ன பாப்பா க்ராடூயட்டின் லாம் இருக்கே )

பள்ளி வகுப்புகளின் அமைப்பும் பயிற்றுவிக்கும் முறைகளும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமும் அருமை.அரசாங்கம் நடத்தும் பள்ளி. வருடம் முழுவதும் மாணவர்கள் செய்த , படித்தவைகளை  பார்வைக்கு வைத்திருந்தார்கள். அருமையோ அருமை. ஒவ்வொரு வகுப்பிற்கு சென்று பார்க்க அனுமதித்தார்கள்.

சம்ஸ்க்ருத பாரதி (இது பற்றி முன்பே பதிவிட்டுள்ளேன்) ஆண்டு விழாவில் பல்வேறு நிலை வகுப்புகளுக்கான பரிசுகள் அளிக்கப்பட்டன. காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பார்வையாளர்களாக வந்திருந்த பெற்றோர்கள் தவிர அனைவரும் அனைத்தும் சமஸ்க்ருதத்திலேயே தான். வம்பு உட்பட (உத்தவான் ஆகதவான்_  அவன் வந்திருந்தேன் என்று சொன்னான் )
கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சமஸ்க்ருத்த்திலேயே.(ஏகஹ ஷ்ருகாலஹ வனம் கச்சதி ....) 

ஸ்லோக வகுப்பு ஆண்டு விழா ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளை ஒட்டிய நிகழ்வாக இருந்தது. நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில். SHREE RRAAMAANUJAACHAARRYA  என ஆங்கில ஆக்ஸன்ட்டுடன்... பரிசுகளும் காலை நிகழ்ச்சிகளும் ..... அனைவரின் உழைப்பும் அதில் தெரிந்தது 


இன்ஸ்டா கானா என்பது பொது மக்கள் அனைவருக்கும் மேடையில் பாடுவதற்கான ஒரு களம் .
பாடத்தெரிந்த யாரும் பாடலாம். 


மக்கள் எப்போதும் போல சங்கீதம், சமஸ்க்ருதம், கராத்தே, கணக்கு, ஓவியம், காவியம், சுலோகம் ,தமிழ், Base ball, foot ball, பியானோ, வயலின், ஸ்கைப் மூலம் பலவித வகுப்புகள் என குறுக்கும் நெடுக்கும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை வார இறுதியில் தான் ..இப்போது வாரம் முழுவதுமே .

கோடை விடுமுறை நெருங்கி கொண்டிருக்கிறது. இருக்கவே இருக்கு... சம்மர் கேம்ப் ...  

வெய்யில் 80 டிகிரி போனாலே மக்கள் ஐயோ வெய்யில் என்கிறார்கள். ( பூமியின் இந்தப் பகுதி போலெ க்கு அருகில் அமைந்திருப்பதால் 80 டிகிரிக்கே வெய்யில் காயகிறது 100 டிகிரி போல. 
இங்குள்ள மக்களுக்கு வெய்யில் என்பது அரிதான ஒன்று என்பதால் , மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் நடைப் பயிற்சி , கால்பந்து பயிற்சி என பூங்காக்களில் கொண்டாட்டமாக இருக்கிறது.( மக்கள் வசிக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. மற்றபடி எங்கும் எப்போதும் அமைதி )


 எங்கிருந்தோ வந்து வால்கோ மாலில் (Valco) சினிமா பார்த்தோம் , JC Pennyயில் துணிகள் வாங்கினோம். தற்சமயம் நடந்து செல்லும் தொலைவில் வசித்தும் , அங்கே செல்ல முடியாது. ஆப்பிள் நிறுவனம் விலைக்கு வாங்கி அலுவலகங்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
வீட்டின் பின் புறம் அமைந்திருக்கும் பூங்காவில் பிரதி வெள்ளியன்று சந்தை கூடுகிறது. நேற்றுப் பறித்த கீரை, ஸ்ட்ராபெர்ரி , நம்ம ஊர் திருவிழாவில் விற்கும் பொடித்த ஐஸில் கலர் விட்டு கப் ஐஸ் , காய்கறிகள் பழங்கள் .. கிராம சூழ்நிலை. பள்ளிப் பிள்ளைகளை field trip அழைத்து வந்து காண்பிக்கிறார்கள்.

என் மகள் சொன்னது  "" உன்னுடைய கடந்த வருட பயணத்திற்கும் இந்தப் பயணத்திற்கும் இடையில் அதிகம் வித்தியாசம் எதுவும் இல்லை அம்மா...

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...