என் கருத்தை கவரும் பல விஷயங்களில் ஒன்று வீடுகள்.
அதன் சுற்றுச் சுவர் அமைப்பு , வெளிப்புறக் கதவின் வேலைப்பாடுகள், ஜன்னல்கள் எனப் பலவும் என் கவனத்தைக் கவரத் தவறுவதில்லை.
செங்கல் , கான்க்ரீட் கொண்டு கட்டப்பட்ட வீடுகளையே பார்த்துப் பழகிய எனக்கு, முதன் முதலாக அமெரிக்க வந்தபோது இங்கிருந்த அட்டை வீடுகளை பார்த்து பிரமிப்பாக இருந்தது.
ஜிப்சம் (asphalt) சுவர்கள், மரத்தாலான தரைகள் மற்றும் கூரைகள், கடையில் தயாராய் விற்கப்படும் சமையல் மேடை, Oven னுடன் கூடிய அடுப்பு மற்றும் அலமாரிகள், குளியலறைக்கான washbasin, bath tub என readymade ஆக வாங்கி வந்து அப்படியே பொருத்தப் பட்ட வீடுகள். கண்ணாடி ஜன்னல்கள்.
(ஜிப்சம் அட்டைகளை இந்தியாவில் false ceiling அமைக்க பயன்படுத்துவார்கள். குறிப்பாக அலுவலகங்களில். ) மரக்கதவுகளின் மேல்பகுதி கண்ணாடி. தாழ்ப்பாள் flimsy. ஒரு கதவுக்கே 5 தாழ்ப்பாள் போட்டுப் பழக்கப் பட்டவர்கள் நாம். சொந்தவீட்டுக்காரர்கள் burglar alarm, cctv வைத்துக் கொள்கிறார்கள்.
வாடகை வீடுகளுக்கு ???
எல்லாம் வல்ல இறைவனே துணை.
இவ்வகை வீடுகள் நிலநடுக்கம் மற்றும் குளிரைத் தாங்கும் வகையில் insulated materials கொண்டு கட்டப் பட்டவை. இரண்டு அடுக்குகள் வரை தாங்கும் வல்லமை படைத்தவை இத்தகைய வீடுகள். (அடுக்கு மாடி வீடுகளுக்கு frame மட்டும் இரும்புக் கம்பிகளை உபயோகித்து காட்டுகிறார்கள்.) அலுவலகங்களில் நோட்டீஸ் போர்டில் குத்தப் பயன்படும் பின்களே இங்கே ஆணிகள். ( :) )
இவ்வகை வீடுகளில் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால் எல்லா county யிலும் தீயணைப்பு நிலையங்கள் இருக்கும். மக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி என்று கற்று தருவார்கள். பள்ளிகளில் Stop, Drop, Roll என பாட்டாக சொல்லி தருவார்கள். Field trip என அருகிலிருக்கும் தீயணைப்பு நிலையங்களுக்கு அழைத்து சென்று கற்றுத் தருவார்கள். [தீயணைப்பு வண்டிகள் பார்க்கவே பளபளவென அழகாக இருக்கும். அதில் 500 காலன் தண்ணீர் மட்டுமே இருக்கும். கட்டிடங்களுக்கு அருகிலேயே தீயணைப்பு வண்டியுடன் இணைக்கும் வண்ணம் பெரிய குழாய்கள் இருக்கும்.]
Heater/cooler இருக்கும். பருவ நிலைக்கேற்ப பயன்படுத்தலாம்.
Studio, Hallway, Apartment, Townhome, Single Family Home (independent house),Condominium, Bungalow எனப் பல தரப்பட்ட வீடுகள். எல்லாமே அட்டை கட்டை வகைகளே. விலை மட்டும் பல மில்லியன் டாலர்கள். 100 வீடுகள் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு மிகச் சிறிய பரப்பளவில் பூங்கா . condo வீடுகள் என்பது gymnasium மற்றும் நீச்சல் குளம் உள்ளவை.ஆனால் பல வீடுகளுக்கு ஒரு ஜிம் ஒரு நீச்சல் குளம் . (எங்கேயோ பார்த்தது போல இல்லை ??)
இந்த முறை சொந்த வீடு(தனி வீடு) என்னும் வகையில் அமைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளைக் காணும் வாய்ப்புக்கு கிடைத்தது.
1. இரண்டு ஹால் (ஒன்று விருந்தினர் பகுதி, மற்றது fire place , தொலைக்காட்சிப் பெட்டி என ஒரு குடும்பத்துக்கானது
2. சமையலறையை ஒட்டினாற்போல் ஒரு பக்கம் breakfast பகுதி, மற்றது ரெகுலர் டைனிங் ஏரியா
3. எங்கிருந்து பார்த்தாலும் கண்ணாடி ஜன்னல்கள் வழியே தெரியும் இயற்கை
4. வீட்டை சுற்றிலும் அமைந்த புல்வெளி மற்றும் பின்பகுதியில் அமைந்த தோட்டம் (persimmon, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை ,எலுமிச்சை மரங்கள் மற்றும் வண்ண வண்ண ரோஜா செடிகள், அதிலும் குறிப்பாக அடுத்தவர் வீட்டு மரத்தின் காய் பழம் பூக்கள் நம் பக்கம் இருப்பது ...இன்னும் super)
5. சிறு பிள்ளைகள் விளையாடும் ஊஞ்சல், பாஸ்கெட்பால் பகுதிகள்
6. சுற்றிலும் இயற்கை காட்சிகள் (மலையை குடைந்து குடைந்து வீடு கட்டிட்டாங்கம்மா)
7. எங்கெங்கும் அலமாரிகள், பார்த்துப் பார்த்துக் கட்டி இருக்கிறார்கள்
8. இங்கே குளியலறைகள் 1, 1 1/2, 2 1/2 என்பது போல கட்டுகிறார்கள். ( same now available in Chennai too)
1 1/2 பாத்ரூம் என்பது குளிக்கும் வசதியுடன் கூடிய ஒன்றும், குளிக்கும் வசதி இல்லாத ஒன்றும் எனக் கொள்ள வேண்டும். (I grew up in a house with 8 bedrooms and 3 bathrooms என ஒரு வசனம், நான் பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தில்)
9. இரண்டு கார்கள் நிறுத்தும் வகையில் வாசலின் முன்புறம் garage. சில வீடுகளில் அதன் உட்புறம் மிக அற்புதமாக stereo , டிவி , Overhead loft , சுலபமாக சுத்தம் செய்யும் வகையில் அமைந்த தரை என அமைத்திருந்தார்கள்
10.வீடுகளுக்கு சுற்றுச் சுவர் இல்லை. அப்படி தேவைப்பட்டவர்கள் மரத்தினால் அமைத்துக் கொள்கிறார்கள்.
ஐரோப்பிய வீடுகள் வேறு மாதிரியானவை. பழமையுடன் இணைந்தவை.Combination of art and architecture. ஆங்காங்கே சிற்பங்களுடன் அமைந்த கட்டிடங்கள். நேர்த்தியான வேலைப்பாடுடன் கூடிய முகப்புகள்.
நான் கண்ட அனைத்து ஐரோப்பிய நகரங்களிலும் முக்கிய பகுதிகளில் அனைத்து கட்டிடங்களும் ஒரே அமைப்பில் இருந்தன. நகரங்களின் முக்கிய பகுதிகளில் 4-5 அடுக்குகள் மட்டுமே. வெளித்தோற்றம் ஒரே மாதிரி உள்ள வண்ணம் அமைக்கப் பட்ட கட்டிடங்கள்[common façade] . புறநகரில் தான் அடுக்கு மாடிக்கட்டிடங்களுக்கு அனுமதி. லண்டனில் பிரபலமான கடையான Harrods இன் முகப்புத் தோற்றமும் மற்ற கட்டடங்களை போலவே தான் இருக்கும். உள்பகுதி அவரவர் விருப்பம்.
United kingdomல் புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் விக்டோரியன் வீடுகள். அகலமான ஜன்னல்களை கொண்டவை. இரும்பு ஜன்னல் கதவுகளில் அருமையான வேலைப்பாடுகள்.
குளிர் அதிகமான Switzerland போன்ற பகுதிகளில் அமெரிக்கா போல மரத்தாலான வீடுகள். கிராமப் புறங்களில் சிறிய செங்கற்களால் ஆன வீடுகள்.அருகருகில் நெருக்கமான சிறிய கட்டிடங்களில் இயங்கும் வங்கிகள். இங்கேயா பல கோடி பணம் புழங்குது என்ற வகையில் .
ஆம்ஸ்டர்டேமில் அடுக்கு மாடி வீடுகளின் 3/4 ஆவது தளங்களில் ஒரு பெரிய்ய ஜன்னல். வாசல் கதவு சிறியதாக உள்ளதால் அந்தப் பெரிய ஜன்னல் மூலம் பொருட்களை வீடுகளுக்குள்ளே கொண்டு செல்கிறார்கள். பல வண்ணங்களில் வீடுகள் காணப்பட்டன.
வெனிஸ் நகரில் தண்ணீருக்குள் வீடுகள். சாலைகளுக்கு பதிலாக கால்வாய்கள். கடந்து செல்ல பாலங்கள், படகுகள். சிறு சிறு செங்கற்களால் ஆன கட்டிடங்கள்.
இந்தியாவிலும் தற்சமயம் gated community, gate இல்லாத community என வீடுகள் கட்டப்படுகின்றன. மேலை நாடுகளை போல ஒவ்வொரு வீடு கட்டும் போதும் செடி கொடிகளை நாட்டுப் பராமரிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. [ கர்நாடக மாநிலத்தில் மட்டும் பின்பற்றுகிறார்கள்]
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல நம் நாட்டில் தற்சமயம் பருவ நிலைகளுக்கேற்ப வீடு /அலுவலகங்களைக் கட்டாமல் கண்ணாடிக் கதவுகளும் ஜன்னல்களும் இருக்குமாறு அமைத்தது விட்டு ஐயோ சூடு அம்மா சூடு என்று ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தி, அன்னை பூமியை சூடாக்கி விட்டு, வார இறுதியில் ...பக்கத்து கிராமத்தில் மரம் நடுகிறார்கள். தம் ஊழியர்களை கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு கணினி கற்றுத் தருகிறார்கள். Corporate social responsibility!!(CSR)
வீடுகள் ... நம் எண்ணத்தின் வெளிப்பாடு !!
No comments:
Post a Comment