என் மகள் ஒவ்வொரு வருடமும் தன் மகனுக்கு
நவராத்திரி சமயத்தில் 9 நாட்களும் ஒவ்வொரு வித அலங்காரம்
செய்து விடுவாள்.
கடந்த வருடம் நான் அமெரிக்கா சென்று சேர்ந்த சில நாட்களில் என் பேரன் தனக்கு அன்றைய அலங்காரமாக தாத்தா உம்மாச்சி வேடம் என்று சொல்லி விட்டு பாலர் பள்ளிக்கு சென்று விட்டார்.(இவர் என்னுடைய நண்பர்ங்க,மரியாதையாவே குறிப்பிட்டுடறேன், கோவிச்சுக்கிட்டா பேட் கேர்ல் கோ அவே, காப் கேட்ச் மை க்ரேண்ட்மா என்று காவலரை அழைத்து விடுவார் )
நிறை மாத கர்ப்பிணியாய் இருந்த என் மகள் , அந்த வேடத்திற்கான ஆடை அணிகளை தயார் செய்து வைத்திருந்தார்.(தோம்) மாலை பள்ளியிலிருந்து வந்ததும் , அலங்காரம் செய்து முடிக்கும் தருணம்.
கேசவ் : தாத்தா உம்மாச்சிக்கு இருக்கற மாதிரி எனக்கு காது எங்கே?
என் மகள் : காதா??? எதுக்கு கண்ணா ?
கேசவ்: தாத்தா உம்மாச்சி படத்தை பாரும்மா , அவரோட காது எப்படி நீளமா இருக்கு , எனக்கும் அது மாதிரி வேணும் அப்ப தான் அவர் மாதிரியே இருக்கும்
எங்களுக்கு எதுவும் புரியவில்லை.அப்போது தான் கவனித்தோம். அவரின் காதுகள் நம்
மதுரை வாழ் முதியவர்கள் போல வளர்த்த காதுகள் (மடல் நீண்டிருக்கும்) அவர் சொல்லும் வரை நாங்கள் யாருமே அதை கவனிக்கவில்லை......
அடுத்த முறை காது தயார் செய்து வைப்பதாக வாக்களித்து சமாதானபடுத்தினோம்.
பின் குறிப்பு : தாத்தா உம்மாச்சி (ஸ்ரீ ராமானுஜர் ) பிறந்த திருபெரும்புதூரில்
அவர் அவதரித்ததாக கருதப்படும்
மண்டபத்திற்கு மிக அருகில் பல பரம்பரைகளாக அங்கேயே வசிக்கும், அவருக்கு சேவை செய்யும்
குடும்பத்தின் வாரிசு தாங்க இந்த கேசவ் @ கோதாக்ரஜன். இவரது தம்பிதான் நம்ம ராகவ் @ லக்ஷ்மண யோகி (அவனா இவன்???)
No comments:
Post a Comment